வெந்து தணிந்தது காடு : நெட்டிசன்களை கவர்ந்த 'மல்லிப்பூ' பாடல் - வைரலாகும் Vibe வீடியோஸ்

படத்தில் இரண்டு முறை பாடலின் இன்டர்லூட் இசைக்கும். அந்த இன்டர்லூட் தான் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்ட்! பாடலை வைத்து வித விதமாக எடிட் செய்து வைப் பண்ணிக்கொண்டிருக்கிறது இணையப் பட்டாளம்.
Simbu
Simbu Twitter
Published on

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிலம்பரசன் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார், அப்புக்குட்டி, நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது திரைப்படம். 

வெந்து தணிந்தது காடு படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் கவிஞர் தாமரை எழுத்துகளில் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக 'காலத்துக்கும் நீ வேணும்' மற்றும் மறக்குமா நெஞ்சம் ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பின்னர் இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு மற்ற பாடல்களில் அதிக கவனம் பெற்றது 'உன்ன நெனச்சதும்' பாடல். படத்தில் மற்றொரு பாடல் 'மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே'. 

இந்நிலையில் நேற்று படம் வெளியான பிறகு, இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது மல்லிப்பூ பாடல். பாடலை முதலில் கேட்ட பலருமே இதனை எப்படி இயக்குநர் காட்சிப்படுத்தியிருப்பார் என்ற யூகத்திலிருந்தனர். எப்படியும் பாடலை ஒரு பெண் பாடிக்கொண்டிருப்பது போலவும், அந்த பெண்ணை சுற்றி ஆண்கள் நடனமாடிக் கொண்டிருப்பதுபோலவும் தான் படமாக்கப்பட்டிருக்கும் என்ற பரவலான கருத்து இருந்தது. ஆனால் படத்தில் பாடல் இடம்பெற்ற தருணம் முற்றிலுமாக மாறுபட்டு இருந்தது.

மனைவியையும் மகளையும் பிரிந்து வாடும் ஒரு ஆண், வீடியோ கால் மூலம் மனைவியிடம் பேசுகிறான். மகளை பற்றி விசாரிக்கிறான். காதல் மனைவிடம் கொஞ்சி பேசுகிறான். பிரிவால் வாடும் மனைவியும் ஊடல் கொள்கிறாள். அவள் தனக்காக ஒரு பாடலை பாடும்படி கணவன் கேட்கிறான். முதலில் மறுக்கும் மனைவி பின்னர் பாடுகிறாள். அதில் காதலும், பிரிவும், வலியும், கண்ணீரும் நிறைந்திருக்கிறது.

படம் பார்ப்பவர்களுக்கு பாடல் கேட்பது முதல் முறை என்றாலும், கணவனுக்கும், கணவனின் நண்பர்களுக்கும் பாடல் பழகிப்போனது. உடன் சேர்ந்து பாடுகிறார்கள். பாடலின் மெட்டும், வரிகளும், அது தோன்றும் தருணமும் தற்போது கவனம் ஈர்த்து வருகிறது. தாமரையின் வரிகளில், ஏஆர் ரஹ்மானின் இசையில் உருவான இந்த பாடலை மதுஸ்ரீ பாடியுள்ளார்.

படத்தில் இரண்டு முறை பாடலின் இன்டர்லூட் இசைக்கும். அந்த இன்டர்லூட் தான் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்ட்!

பாடலை வைத்து வித விதமாக எடிட் செய்து வைப் பண்ணிக்கொண்டிருக்கிறது இணையப் பட்டாளம்.

Simbu
Queen Elizabeth II: கோஹினூர் வைரம் திரும்ப கிடைக்குமா? - டிவிட்டரில் டிரெண்டாகும் மீம்ஸ்
Simbu
Doge Meme : இணையத்தைக் கலக்கும் இந்த Cheems யார் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com