”விடுதலை இதுவரை சரித்திரம் சந்தித்திராத திரைப்படம்” என்று பாராட்டியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா.
இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை பகுதி 1 திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா பின்னணி இசையமைத்திருக்கிறார். நடிகர் சூரி முதன்முறையாக ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம் இது.
நடிகர்கள் விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் ராஜீவ் மேனனும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மார்ச் 31ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் டிரெய்லர் நேற்று வெளியானது.
வெளியான சில மணி நேரங்களிலேயே 8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது டிரெய்லர்.
இந்நிலையில், திரைப்படத்தையும், வெற்றிமாறனையும் வெகுவாக மெச்சிக்கொண்டுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா.
விழாவில் அவர் பேசியதாவது,
“விடுதலை இதுவரை திரையுலகம் சந்தித்திராத திரைப்படம். கடல் அலை என்பது ஒன்று மட்டும் கிடையாது. ஒவ்வொன்றும் வெவ்வேறு. அதுபோல வெற்றிமாறனின் திரைக்கதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு.
வெற்றிமாரன் ஒரு மிக முக்கியமான இயக்குநர். நான் இதுவரை 1500 படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். 1500 படங்களில் பணியாற்றிய பிறகு நான் இதை சொல்கிறேன் என்றால் நீங்கள் இதை புரிந்துகொள்ளவேண்டும்” என்றார்.
மேலும் பேசியவர், வெற்றிமாறன் திரையுலகத்திற்கு கிடைத்த ஒரு நல்ல இயக்குநர் எனவும், இந்த திரைப்படத்தில் நீங்கள் இதுவரை கேட்காத இசையை கேட்பீர்கள் எனவும் கூறினார் இளையராஜா.
இதற்கிடையில், இளையராஜா பேசிக்கொண்டிருக்கும்போது ரசிகர்கள் ஆரவாரமாக சத்தமிட்டனர். இசைஞானி, “கத்தாதீர்கள். மைக் ஐ கொடுத்துவிட்டு நான் சென்றுவிடுவேன். இப்படி சத்தம் போட்டால் நான் என்ன பேசுவது” என்று மேடையிலேயே கோபப்பட்டார்.
அதன் பின்னர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “காட்டுமல்லி” பாடலின் இரண்டு வரிகளை பாடி தனது பேச்சினை முடித்துக்கொண்டார்.
இசை வெளியீட்டு விழாவின் போது இயக்குநர் வெற்றிமாறனிடம் வடசென்னை திரைப்படத்தி இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வெற்றிமாறன்,
“விடுதலை படத்தின் 2ம் பாகத்துக்கு பிறகு வாடிவாசல் படத்தை தொடங்குகிறோம். அது முடிந்த பின்னர் வட சென்னை இரண்டாம் பாகம் தொடங்கும்" எனத் தெரிவித்தார்.
எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகைதயான “துணைவன்” என்ற கதையை தழுவி எடுக்கப்படும் திரைப்படம் விடுதலை. இரண்டு பாகங்களாக இந்த திரைப்படம் வெளியாகவிருக்கிறது.
ஒரு கடைநிலை காவலன், அதிகார வர்க்கத்தின் ஆளுமைகள் மற்றும் ஒரு நக்சல் போராளிக்கு இடையில் நடக்கும் பிரச்னையை மையமாகக் கொண்டு படம் இருக்கக்கூடும் என்பது டிரெயிலரை வைத்து கணிக்க முடிகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust