பாரதி கண்ணம்மா சீரியல் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியிலிருந்தாலும், இம்முறை விஜய் டெலி அவார்ட்ஸில் முக்கிய விருதுகள் எதுவுமே இந்த சீரியலுக்கு வழங்கப்படவில்லை. என்னதான் பிரச்னை?
ஒவ்வொரு வருடமும் விஜய் டிவி டெலி அவார்ட்ஸில் இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்கும் சீரியல்கள் விருதுகளை வாங்கி குவிக்கும். ஆனால் இம்முறை அவர் இயக்கி கொண்டிருக்கும் இரண்டு சீரியல்களும் சொற்ப விருதுகள் தான் வாங்கியுள்ளன. ராஜா ராணி 2 சீரியலுக்கு சிறந்த மாமியார், சிறந்த மகன் என இரண்டு விருதுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பாரதி கண்ணம்மா சீரியலுக்கு முக்கிய விருதுகள் எதுவுமே வழங்கப்படவில்லை. இதனால் அந்த சீரியல் குழு செம கடுப்பில் இருக்கிறதாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி ஆகிய இரண்டு தொடர்களையும் இயக்கி வரும் டேவிட், சிறந்த இயக்குநருக்கான விருது பெற்றுள்ளார். அவர் இயக்கிய இரண்டு சீரியல்களும் விருதுகளை அள்ளி குவித்துள்ளது. பாக்கியலட்சுமி சீரியலுக்கு மட்டும் 10 விருதுகள் கிடைத்துள்ளன.
இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்கும் சீரியல்களுக்கு காரணமாகத் தான் விருதுகள் வழங்கப்படவில்லை என்கிறது சின்னதிரை வட்டாரம். இயக்குநர் பிரவீனுக்கு சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் அடிக்கடி பஞ்சாயத்து ஆகிறதாம். பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலியாக நடித்த ஸ்வீட்டி, சீரியலில் இருந்து வெளியேறி ஒட்டுமொத்த சீரியல் குழுவை குறித்தும் தன் அதிருப்தியைப் பகிர்ந்திருந்தார். அண்மையில் ஆல்யா மானசா சீரியலை விட்டு விலகி இருக்கிறார். இது போன்ற சில காரணங்களால் பிரவீன் பென்னட் இயக்கும் சீரியல்களுக்கு விருதுகள் கொடுக்காமல் ஒதுக்கி வைத்துள்ளது விஜய் டிவி. புதிதாக வந்த தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கூட பாரதி கண்ணம்மா சீரியலுக்கு கொடுக்கவில்லை என்று புலம்புகின்றனர் சீரியல் குழுவினர்.