Trisha: PSல் நந்தினியாக நடிக்க ஆசைப்பட்ட த்ரிஷா; மறுத்த மணிரத்னம் - என்ன காரணம் தெரியுமா?

தமிழ் சினிமாவின் அபி, ஜெஸ்ஸி, ஜானுவாக அடையாளம் காணப்பட்டவர் தற்போது குந்தவையாக பார்க்கப்படுகிறார். ஆனால் குந்தவைக்கு நந்தினி பாத்திரம் தான் பிடித்திருந்ததாம், வேண்டும் என ஆசையும் பட்டாராம். பின் ஏன் குந்தவையாக தோன்றினார்?
Trisha: PSல் நந்தினியாக நடிக்க ஆசைப்பட்ட த்ரிஷா; மறுத்த மணிரத்னம் - என்ன காரணம் தெரியுமா?
Trisha: PSல் நந்தினியாக நடிக்க ஆசைப்பட்ட த்ரிஷா; மறுத்த மணிரத்னம் - என்ன காரணம் தெரியுமா?ட்விட்டர்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தான் முதலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்டதாகவும், இயக்குநர் மணிரத்னத்திடம் கேட்டபோது அவர் மறுத்துவிட்டார் எனவும் கூறியுள்ளார் நடிகை த்ரிஷா.

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் த்ரிஷா. இன்று பிறந்தநாள் காணும் நடிகைக்கு ரசிகர்கள் திரைத்துறையினர் பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் அபி, ஜெஸ்ஸி, ஜானுவாக அடையாளம் காணப்பட்டவர் தற்போது குந்தவையாக பார்க்கப்படுகிறார். ஆனால் குந்தவைக்கு நந்தினி பாத்திரம் தான் பிடித்திருந்ததாம், வேண்டும் என ஆசையும்பட்டாராம். பின் ஏன் குந்தவையாக தோன்றினார்?

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் படமாக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக இந்த படம் வெளியானது. முதல் பாகம் சுமார் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், இரண்டாம் பாகமும் வசூல் வேட்டை செய்து வருகிறது

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பும் குறிப்பாக நடிகர்கள் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய்க்கு மிகுந்த பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர்.

புத்தகத்தை போலவே திரைப்படத்திலும் அனைவரது கவனத்தை பெற்ற கதாபாத்திரமாக நந்தியின் பாத்திரம் இருந்தது, இந்த கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.

Trisha: PSல் நந்தினியாக நடிக்க ஆசைப்பட்ட த்ரிஷா; மறுத்த மணிரத்னம் - என்ன காரணம் தெரியுமா?
Ponniyin Selvan2 : ”என்ன பதிலே இல்லை?” ட்விட்டரில் குந்தவை - வந்தியத்தேவன் ஊடல்!

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய த்ரிஷா தனக்கும் நந்தினியின் கதாபாத்திரம் தான் ஃபேவரெட் எனக் கூறினார்.

“நான் முதல் நாள் மணிரத்னம் சாரின் ஆபீஸுக்கு சென்றபோது அவரிடம் நந்தினி பாத்திரத்தை எனக்கு வழங்குமாறு கேட்டேன். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.

மேலும், அந்த கதாபாத்திரத்துக்கு தான் முதலில் ஆள் முடிவுசெய்யப்பட்டது, அதனை ஐஸ்வர்யா ராய் மட்டுமே செய்யமுடியும் என்று கூறிவிட்டார்” எனக் கூறினார் த்ரிஷா. அதன் பின்னர் தனக்கு அளிக்கப்பட்ட குந்தவை பாத்திரத்தில் நடித்தார் த்ரிஷா.

அவரது நடிப்புக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கதையின் படி பரம் எதிரிகளான நந்தினி மற்றும் குந்தவை ஷூட்டிங்கின் போது இருவரும் நட்பு பாராட்டியதற்கு இயக்குநர் மணிரத்னமிடம் திட்டு வாங்கியதாக த்ரிஷா பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Trisha: PSல் நந்தினியாக நடிக்க ஆசைப்பட்ட த்ரிஷா; மறுத்த மணிரத்னம் - என்ன காரணம் தெரியுமா?
Ponniyin Selvan : குந்தவைக்கு என்ன பிடிக்கும்? Trisha பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com