Dhoni: "என்னையும் CSKல சேத்துக்கோங்க" நடிகர் யோகி பாபு கோரிக்கை - தோனி தந்த பதில் என்ன?
Dhoni: "என்னையும் CSKல சேத்துக்கோங்க" நடிகர் யோகி பாபு கோரிக்கை - தோனி தந்த பதில் என்ன?twitter

Dhoni: "என்னையும் CSKல சேத்துக்கோங்க" நடிகர் யோகி பாபு கோரிக்கை - தோனி தந்த பதில் என்ன?

விழாவில் பேசிய நடிகர் யோகி பாபு தோனியிடம் தன்னையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைத்துக்கொள்ளுமாறு கேட்டிருந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தன்னையும் சேர்த்துக்கொள்ளுமாறு நடிகர் யோகி பாபு தோனியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். இதற்கு தோனி அளித்துள்ள பதில் பலரையும் கவர்ந்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம் எஸ் தோனி, திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

தோனி எண்டெர்டெயின்மெண்ட் என்ற இந்த நிறுவனம் முன்பே இந்தி, பெங்காலி மொழிகளில் படங்களை தயாரித்துள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு தென்னிந்திய சினிமாக்களையும் இந்நிறுவனம் தயாரிக்கும் என தெரிவித்திருந்தது.

அதன்படி, லெட்ஸ் கெட் மேரீட் என்ற திரைப்படத்தை தயாரிப்பதாக செய்திகள் வெளியானது.

இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இசையமைத்து இயக்கும் இந்த படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிகை இவானா நடிக்கின்றனர். நடிகை நதியா ஹரிஷ் கல்யாணின் தாயாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு உள்ளிட்ட இன்னும் சில முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

இந்த படத்திற்கான கருவை தோனியின் மனைவி சாக்‌ஷி தோனி முன்வைத்தார். அதனடிப்படையில் கதை விரிவாக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தோனி வெளியிட்டார். இந்நிலையில் நேற்று சென்னையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைப்பெற்றது.

Dhoni: "என்னையும் CSKல சேத்துக்கோங்க" நடிகர் யோகி பாபு கோரிக்கை - தோனி தந்த பதில் என்ன?
தோனி Candy Crush விளையாடிய வீடியோ வைரல் - அடுத்த 3 மணி நேரத்தில் என்ன நடந்தது தெரியுமா?

விழாவில் பேசிய நடிகர் யோகி பாபு தோனியிடம் தன்னையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைத்துக்கொள்ளுமாறு கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த தோனி, “ராயுடு தற்போது ஓய்வு பெற்றுவிட்டதால் அணியில் இடமிருக்கிறது. நான் நிர்வாகத்திடம் பேசுகிறேன். ஆனால் நீங்கள் படம் நடிப்பதில் பிசியாக இருக்கிறீர்கள். நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். எதிரிருப்பவர்கள், உங்களை காயப்படுத்தும் வகையில் வேகமாக பந்துவீசுவார்கள்” என்றார்.

தோனியின் இந்த பதில் அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

பின்னர் திரைப்படம் குறித்து பேசிய தோனி, ”LGM திரைப்படம் மிகவும் நேர்த்தியான படம்; என்னுடைய மகளுடன் உட்கார்ந்து கூட, நான் இந்த படத்தை பார்க்கலாம்; படம் பார்க்கும்போது அவளுக்கு நிறைய சந்தேகங்கள் எழும் என்றாலும், அவளுக்கு படம் மிகவும் பிடிக்கும்; ஒரு ஆண் எப்படி தன்னுடைய காதலி மற்றும் தாய் இடையே உள்ள சிக்கல்களை எதிர்கொள்கிறார் என்பதுதான் படத்தின் கரு" என்று தல தோனி பேசியிருந்தார்.

Dhoni: "என்னையும் CSKல சேத்துக்கோங்க" நடிகர் யோகி பாபு கோரிக்கை - தோனி தந்த பதில் என்ன?
MS Dhoni: "மல்லி பாதுகாப்பான கைகளில் இருக்கிறார்" பதிரானா சகோதரிக்கு நம்பிக்கை அளித்த தோனி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com