கேமிங்கில் சொந்தமாக சம்பாதித்தது பெரிய விஷயமாக தோன்றியது
ரீத்து சலாதியா, ரூட்டர் என்ற இ-ஸ்போர்ட்ஸ் கேமிங் தளத்தில் கிட்டத்தட்ட 4 லட்சம் ஃபாலோயர்களைக் கொண்டுள்ளார். கேமராக மாதம் 1.5 லட்சம் வரை வருமானமும் ஈட்டுகிறார்.
ரீத்துவின் மகன் கௌரவ் தான் கேமிங் உலகத்தை அவருக்கு அறிமுகப்படுத்தியது. 2020ம் ஆண்டு லாக்டவுன் காலக்கட்டத்தில் வீட்டில் அடைந்துகிடந்தபோது இவர்கள் கேமிங்கை தொடங்கினர்.
"நான் படித்தது 12ம் வகுப்பு தான். பொதுவாகவே எனக்கு கேம்கள் பிடிக்கும். ஆனால் அதிலிருந்து எனக்காக கொஞ்சம் சம்பாதிக்கத் தொடங்கியது என்னைப் பொருத்தவரையில் பெரியவிஷயமாக இருந்தது. நான் அதிகமாக கேம் விளையாடத்தொடங்கினேன். என் மகன் லைவ் ஸ்ட்ரீமிங் குறித்து சொல்லிக்கொடுத்த பிறகு நான் நேரலையில் விளையாடினேன். நான் எனக்காக சம்பாதித்தது வித்தியாசமான அனுபவம்"
ரீத்து சலாதியாவுக்கு அவரது குடும்பத்திலிருந்து முழு ஒத்துழைப்பு கிடைக்கிறது. வீட்டில் அவர் விளையாடுவதற்காகவே தனி அறை ஒன்றும் இருக்கிறது.
தனது அம்மா கேமிங் உலகில் ஜொலிப்பது குறித்து அவரது மகன் கௌரவ், "என் அம்மாவுடைய உண்மையான பெரிய ரீத்து சலாதியா, அவர் விளையாடும் போது, எதிர்களைக்கொல்லும் போது "ரீத்து சலாதியா ஒருவரை சுட்டுக்கொன்றுவிட்டார்" எனக் கூறுவது மிகவும் கடினமானதாக இருக்கும் என்பதால் அவருக்கு ஒரு கேமிங் பெயர் தேவைப்பட்டது. நிறையப் பெயர்களை யோசித்து "Black Bird" என்ற பெயரை வைத்துக்கொண்டோம். அப்போது "Black Bird" உச்சரிக்க மற்றும் நினைவில் வைத்துக்கொள்ள எளிமையாகவும் நல்ல கேமிங் பெயராகவும் தெரிந்தது. ஆனால் நாங்கள் எப்போதும் இந்த அளவு மக்களிடம் இருந்து அன்பும் ஆதரவும் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை." எனக் கூறியுள்ளார்.
ரீத்துவின் கணவர் அஜிட் சிங், "நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அவள் எப்போவும் கேம் விளையாடிக்கிட்டு இருப்பா... கௌரவும் விளையாடுவான் ஆனால் எனக்கு அவளுக்கு இத்தனை ஃபாலோவர்கள் ரூட்டரில் இருப்பார்கள் எனத் தெரியாது... அதுப்பற்றி தெரியாது ஆனாலும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்." எனப் பேசியிருக்கிறார்.
ஆன்லைன் கேமிங் சமூகத்தில் இருந்து அன்பும் மரியாதையும் கிடைப்பதால் ரீத்து அல்லது Black Bird மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்.
தனது நிலைகுறித்து பெருமைகொள்ளும் ரீத்து, "நான் லைவ் ஸ்ட்ரீமிங் தொடங்கிய 10,15 நாட்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது பலர் என்னுடன் அரட்டையில் இணைந்தனர். கேமிங் செய்யும் குழந்தைகள் என்னை 'அம்மா' என அழைக்கட்டுமா எனக் கேட்டது எனக்கு மிகவும் எமேஷனலாக இருந்தது. என் குடும்பத்தில் என் கவணவரும் என் மகனும் என்னுடன் இருக்கின்றனர். என் மகன் தான் நான் லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய விரும்பினான் என் கணவரும் எனக்கு துணையாக இருக்கிறார்."
வீட்டு வேலைகளுக்கு பிறகு ஒவ்வொரு நாளும் 3-4 மணி நேரம் ரீத்து கேம் விளையாடுகிறார். வீட்டிலிருக்கும் வளர்ப்பு நாய்களுடன் நேரம் செலவிடுவதும் அவருக்கு பிடித்தமான விஷயமாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust