டீனேஜில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக முகப்பரு உள்ளிட்ட சரும பிரச்னைகளை ஏற்படுகிறது.
பதின் பருவத்தில் பருக்கள் வராமல் தப்பிப்பவர்கள் சிலரே,
முகப்பரு, ஆக்னி போன்ற பிரச்னைகளை சரி செய்ய பல்வேறு க்ரீம்கள், பேஸ் வாஷ்களை பயன்படுத்துகிறோம், ஆனால் அவை பயன்படுத்தப்பட்ட சில நாட்களில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
பொதுவாக, நெற்றி, மூக்கு, கன்னம் மற்றும் மேல் உதடு மற்றும் முதுகு மற்றும் தோள்களின் மேல் வெடிப்புகள் பெறுவார்கள்.
பதின்வயதினர் பருவமடையும் போது ஆண்ட்ரோஜன்கள் எனப்படும் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும். இந்த ஹார்மோன்கள் சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளை தூண்டி விடுகின்றன.
மேலும் சருமத்தில் உள்ள துளைகளை மூடுகிறது. தடுக்கப்பட்ட துளைகள் பாக்டீரியாவால் பாதிக்கப்படும்போது, அவை வீக்கமடைந்து முகத்தில் பருக்கள் உருவாகின்றன.
இயற்கையான வழியில் இவற்றை தடுப்பது எப்படி?
வைட்டமின் சி சத்து நிறைந்த நெல்லிக்காய் இயற்கையான ஆக்ஸிஜனேற்றியாகும்.
பருவ வயதில் முகப்பருவை தடுக்க உங்கள் குழந்தையின் தினசரி உணவில் ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் சேர்ப்பது நல்லது.
துளசி இலைகள் பருக்களை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது.
ஒரு சில துளசி இலைகளை நசுக்கி, சாற்றை எடுத்து முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் விட்டுவிட்டு சாதாரண தண்ணீரில் கழுவி வர பருக்கள் குறைந்துவிடும்.
தேன் அழற்சிகளை எதிர்க்கும் பண்புடையது. இது முகப்பருக்கள் மட்டுமின்றி ஆக்னி வீக்கம் போன்றவற்றை குறைக்க உதவுகிறது. முகத்தில் தேனைப் பூசி, 20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவ வேண்டும். இது சருமத்தில் எண்ணெய் பசையை பராமரித்து பருக்கள் வருவதை தடுக்கிறது.
சீரகம், கொத்தமல்லி மற்றும் பெருஞ்சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து, அதை மூலிகை நீரை தேநீராக குடிக்கலாம்.
இது உடலை குளிர்வித்து, நச்சுக்களை வெளியேற்றுகிறது. மேலும் சரும பிரச்னைகளை சரி செய்து தெளிவான சருமத்தை பெற உதவுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust