நெல்லிக்காய் பல்வேறு மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. இதில் மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
நெல்லிக்காய் சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. இது செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது.
இதே நெல்லிகாயை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது, நம் ஆரோக்கியத்திற்கு அதிசயங்களைச் செய்கிறது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் சில ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கலாம். ஆம்லா ஜூஸில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை செரிமான அமைப்பை வலுப்படுத்தவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகிறது.
வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதன் மூலம் உடலில் இருக்கும் தேவையற்ற நச்சுகள் நீங்கும். நெல்லிக்காய் சாற்றில் நீர்சத்து உள்ளது. இது அதிக சிறுநீருக்கு தூண்டுதலாக இருக்கிறது.
சிறுநீர் அதிகமாக கழிப்பதனால் உடலில் இருந்து தீங்கு விளைவிக்ககூடிய நச்சுகளை அகற்றவும், சிறுநீரக கற்களை அகற்றவும் உதவுகிறது. நெல்லிக்காய் சாறு மூலம் சிறுநீர் தொற்றுகள் குறையும்.
நெல்லிக்காய் சாற்றை தினமும் உட்கொள்வது உங்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, கண்புரை, எரிச்சல் போன்ற பிரச்னைகளைப் போக்கும்.
ஆம்லா ஜூஸ் ஒரு எனர்ஜி பூஸ்டர் பானமாக செயல்படுகிறது, நாள் முழுவதும் நம்மை ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் வைத்திருக்கும்.
வைட்டமின் சி அதிகம் உள்ள ஆம்லா, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நெல்லிக்காயில் ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல எட்டு மடங்கு வைட்டமின் சி உள்ளது. இது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும், பல்வேறு உடல்நலப் பிரச்னைகளைத் தடுப்பதற்கும் உதவுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust