தினசரி 50 படிகட்டுகள் ஏறுவதால் இதய பாதிப்பை குறைக்க முடியுமா? புதிய ஆய்வு என்ன சொல்கிறது?

தினசரி நடைபயிற்சி செய்யும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும். சமதளத்தில் நடப்பதை விட படிகட்டுகளில் நடக்கும் போது நாம் அதிக பலன்களை அனுபவிக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தினசரி 50 படிகட்டுகள் ஏறுவதால் இதய பாதிப்பை குறைக்க முடியுமா? புதிய ஆய்வு என்ன சொல்கிறது?
தினசரி 50 படிகட்டுகள் ஏறுவதால் இதய பாதிப்பை குறைக்க முடியுமா? புதிய ஆய்வு என்ன சொல்கிறது?Twitter

டுலானே பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வின் படி ஒரு நாளுக்கு 50 படிகட்டுகள் ஏறுவதன் மூலம் நாம் இதயநோய் ஏற்படும் சாத்தியக்கூறுகளை குறைக்க முடியும் எனக் கூறப்படுகிறது.

இதய நோய் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை 20 விழுக்காடு வரை படியேறுவது குறைக்கும் என்கின்றனர்.

பக்கவாதம், கரோனரி தமனி நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு இருதய நோய் (ASCVD) போன்ற பிற இருதய நோய்கள் உலக அளவில் பல மரணங்களுக்கு காரணமாக இருக்கின்றன.

"தீவிரமாக படியேறும் பயிற்சிகளை மேற்கொள்வது இதய நலனை மேம்படுத்த உதவும்" என ஆய்வின் இணை ஆசிரியரும், டுலேன் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல மருத்துவப் பள்ளியின் பேராசிரியருமான டாக்டர் லு குய் கூறியுள்ளார்.

ASCVD நோயை தடுக்க படிகட்டுகளை ஏறுவது சிறந்த தீர்வு என்பதை இந்த ஆய்வு முன்னிறுத்துகிறது.

இந்த ஆய்வுக்காக இங்கிலாந்து பயோ பான்க் தரவுகளை பயன்படுத்தியுள்ளனர். இதில் 4,50,000 பேரின் தரவுகள் இருக்கும். சராசரியாக 12.5 ஆண்டுகள் பின்தொடரப்பட்டு விவரங்கள் சேமிக்கப்பட்டுள்ளன.

தினசரி 50 படிகட்டுகள் ஏறுவதால் இதய பாதிப்பை குறைக்க முடியுமா? புதிய ஆய்வு என்ன சொல்கிறது?
தினமும் 10,000 அடிகள் நடப்பதால் எந்த பயனும் இல்லை - ஆய்வுகள் சொல்வது என்ன?

தினசரி படிகட்டு ஏறுபவர்களுக்கு இதய நோய்க்கான ஆபத்து குறைவாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

தினசரி நடைபயிற்சி செய்யும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும். சமதளத்தில் நடப்பதை விட படிகட்டுகளில் நடக்கும் போது நாம் அதிக பலன்களை அனுபவிக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினசரி 50 படிகட்டுகள் ஏறுவதால் இதய பாதிப்பை குறைக்க முடியுமா? புதிய ஆய்வு என்ன சொல்கிறது?
உலக இதய தினம்: உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 6 பழக்கங்கள்

படிகட்டுகளில் ஏறும் போது சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. இது சிறிய அளவில் இருக்கும் போது இதயத்தின் திறனை அதிகரிக்கவே உதவும்.

மூட்டுவலி இருப்பவர்கள், நுரையீரல் பிரச்னைகள் இருப்பவர்கள் தொடர்ச்சியாக படிகட்டு ஏறுவதை தங்கள் மருத்துவருடன் கலந்து ஆலோசித்து மேற்கொள்ளலாம்.

தினசரி 50 படிகட்டுகள் ஏறுவதால் இதய பாதிப்பை குறைக்க முடியுமா? புதிய ஆய்வு என்ன சொல்கிறது?
உலகைச் சுற்றி சாகச 'நடை பயணம்' - 2 நாடுகளில் சிறை தண்டனை? 24 வருட பயணக் கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com