இளைஞர்கள் : 20களில் இருக்கிறீர்களா? இந்த 7 விஷயங்களை கற்றுக்கொள்ள மறக்காதீங்க!

நிராகரிப்புக்கு அஞ்சி முயற்சிக்காமல் இருப்பதை விட மோசமானது வேறொன்றுமில்லை.
இளைஞர்கள் : 20களில் இருக்கிறீர்களா? இந்த 7 விஷயங்களை கற்றுக்கொள்ள மறக்காதீங்க!
இளைஞர்கள் : 20களில் இருக்கிறீர்களா? இந்த 7 விஷயங்களை கற்றுக்கொள்ள மறக்காதீங்க!இளைஞர்கள்

வாழ்க்கையில் நாம் பயணிக்கப்போகும் பாதையைத் தேந்தெடுக்கும் நேரம் நம் இருபதுகள் தான்.

அதுவரை நாம் செய்யும் தவறுகள் எளிதாக சரிசெய்துகொள்ளக் கூடியதாக இருக்கும். ஆனால் இனி அப்படியல்ல.

தினமும் விழித்து தூங்குவதற்குள் பல குழப்பங்கள் ஏற்படும். மன சிதறல்களைக் கடந்து வரவேண்டியிருக்கும்.

ஒரு வளர்ந்த மனிதராகவும் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திலும் இருப்போம்.

நமக்கான மரியாதையைத் தேடிக்கொள்ளவும், அடையாளத்தை உருவாக்கவும் வேண்டும். நமக்கான பொறுப்புகளைத் தேர்ந்தெடுக்க நேரிடும்.

20களில் நம் வாழ்க்கையை சிறப்பாக வாழ நமக்கு சில அடிப்படைத் திறமைகள் இருப்பது அவசியம். அவை என்னென்ன எனக் காணலாம்.

சமையல் :

நாம் எல்லாரும் குக் வித் கோமாளியில் சமைத்து வெற்றிபெறத் தேவையில்லை. ஆனால் அடிப்படையாக சமையலைப் புரிந்துகொண்டு நமக்கான சமையலை செய்யத் தெரிந்துகொள்ள வேண்டும்.

சமையல் கற்றுக்கொள்வதில் 2 நன்மைகள் இருக்கின்றன. முதலாவது நாம் நல்ல உணவைச் சாப்பிட வெளியில் செல்லத் தேவையில்லை. பணம் மிச்சமாகும்.

இரண்டாவது, நாம் ஆரோக்கியமான வீட்டில் சமைத்த உணவுகளைச் சாப்பிடுவது நம் உடல் நலத்தை மேம்படுத்தும்.

சமையலைக் கற்றுக்கொள்வதும் யூடியூப் யுகத்தில் மிகவும் எளிதானது. வெளியூரில் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டால் சமையல் நமக்கு கைக்கொடுக்கும்.

வீட்டில் இருந்தாலும் நம் டயட்டுக்கு ஏற்ற உணவுகளை மற்றவர்களுக்கு தொல்லைத் தராமல் நாமே சமைத்துக்கொள்ள முடியும். (இப்போது 20 வயதில் இருப்பவர்களிடம் பாலின பாகுபாடு இருக்காது என எண்ணலாம் தானே!)

எளிமையான பழுதுபார்க்கும் வேலைகள்

எலட்ரிக் இஞ்னியரிங் படிக்கும் இளைஞர்கள் கூட டியூப் லைட் மாட்ட பயப்படும் நகைச்சுவைகளைப் பார்த்திருப்போம். ஆனால் ஒரு டியூப் லைட் மாட்ட நீங்கள் இஞ்சினியராக இருக்க அவசியமில்லை தானே!

இப்படி எளிமையான விஷயங்களைப் பழகிக்கொண்டால் புதிய சிக்கல்களைப் பார்க்கும்போது இருக்கும் தயக்கம் குறையும்.

வேலையாட்களுக்கு கொடுக்க வேண்டிய 400,500 ரூபாயும் மிச்சப்படும்.

இந்த விஷயங்களை யூடியூபிலோ அல்லது பெரியவர்களிடம் கேட்டோ தெரிந்துகொள்ளலாம்.

தற்காப்பு

சமையலுக்கு குறிப்பிட்டது போலவே இதிலும் பாலின பாகுபாடு கிடையாது. நாம் வீட்டை விட்டு வெளியில் போய் திரும்பி வரும்வரை நமக்கு வரும் அத்தனைப் பிரச்னைகளையும் நாம் தான் சமாளிக்க வேண்டும் என்பதனால் இது அனைவருக்குமே அவசியமான ஒன்றாகும்.

நாம் சிறுவயது முதலே கராத்தேவில் மூழ்கி பிளாக்பெல்ட் வாங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் யாரையும் அடித்து துவைக்கும் அளவு பலசாலியாகவும் இருக்க வேண்டாம்.

தற்காப்பு சார்ந்த ஏதோ ஒரு விளையாட்டில் ஈடுபாடுகொண்டிருந்தால் போதும். வாரத்தில் குறிப்பிட்ட சில மணி நேரங்களை ஒதுக்கி பயிற்சி செய்யலாம்.

நம்மையும் நம்முடன் இருப்பவர்களையும் பாதுகாக்க முடியும் என்ற உணர்வு வாழ்வில் எல்லா இடங்களிலும் நமக்கான தைரியத்தைக் கொடுக்கும்.

பொருளாதாரத்தைப் புரிந்துகொள்ளுதல்

சமீபத்தில் 24 வயது பெங்களூரு இளைஞர் மாதம் 1.2 லட்சம் சம்பளம் வாங்கினாலும் வாழ்க்கைத் தனிமையில் செல்வதாக சமூக வலைத்தளத்தில் கூறியிருந்தார்.

பணம் மட்டும் வாழ்க்கையில்லை என்பதையும் வாழ்க்கையில் பணம் மிகவும் முக்கியமானது என்பதையும் நாம் தெரிந்துகொண்டிருக்க வேண்டும்.

நாம் சம்பாதிக்கத் தொடங்கும் போது நம் பணத்தை எந்தெந்த இடங்களில் செலவழிக்கலாம், யாரை நம்பி முதலீடு செய்யலாம், குடும்பத்தில் நமக்கும் பொறுப்புகள் என்ன எனப் பல விஷயங்களை சிந்தித்து செயல்பட வேண்டும்.

பணம் சேமிக்கவும் குறித்த பட்ஜெட்டில் நிறைவாக வாழவும் பழகிக்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் 'பணக்கார தந்தை ஏழை தந்தை', 'சைக்காலஜி ஆஃப் மனி' போன்ற பணம் சம்பந்தப்பட்ட புத்தகங்களுடன் சுய முன்னேற்ற புத்தகங்களும் உங்களுக்கு உதவும்.

இளைஞர்கள் : 20களில் இருக்கிறீர்களா? இந்த 7 விஷயங்களை கற்றுக்கொள்ள மறக்காதீங்க!
"எப்போதும் தனிமையாக இருக்கிறது!" 24 வயது இளைஞர் இணையத்தில் பகிர்ந்த கதை வைரல்

நிராகரிப்புகளைக் கையாளுதல்

புதிய பணியில் சேர்வதிலும், புதிய நண்பர் வட்டாரத்தில் நுழைவதிலும் புதிதாக காதல் உறவைத் தொடங்குவதில் நிராகரிப்புகள் மிகவும் சாதாரணமானதுதான்.

பல சமயங்களில் நிராகரிப்புக்கு காரணம் நாமாக இருக்க மாட்டோம். நாம் சரியான நபராக இருந்தாலும் சூழ்நிலைதான் பல விஷயங்களைத் தீர்மானிக்கும் என்பதைப் புரிந்துகொண்டு அடுத்த விஷயத்துக்கு நகரத் தொடங்க வேண்டும்.

சில நேரங்களில் நாம் முயற்சிக்கும் இடமோ, துறையோ நமக்கானதாக இல்லாமல் இருக்கலாம். நம் திறமையைப் புரிந்துகொள்ள வேண்டும், நம் தேவைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பின்னர் நமக்கு சரியான இடத்தில் முயற்சிக்க வேண்டும்.

முயற்சிகள் மேற்கொண்டு நிராகரிக்கப்படுவது சாதாரணமான ஒன்றே, இதற்காக வருத்தப்படத் தேவையில்லை. ஆனால் ஒவ்வொரு நிராகரிப்பில் இருந்து நாம் புதிய விஷயங்களை ஆராய்ந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

நிராகரிப்புக்கு அஞ்சி முயற்சிக்காமல் இருப்பதை விட மோசமானது வேறொன்றுமில்லை.

முடிவுகளை எடுத்தல்

முன்பே சொன்னது போல இந்த வயதில் நாம் எடுக்கும் தவறான முடிவுகளின் விளைவுகள் சரி செய்வது எளிதான காரியாமாக இருக்காது.

தவறான முடிவெடுக்க பயந்து 1000 பேரிடம் அட்வைஸ் கேட்டு இறுதிவரை முடிவே எடுக்காமல் இருப்பதும் மோசமான விஷயமே.

என்ன செய்யலாம், உங்கள் முடிவு தவறானதாக இருந்தால் அதானால் மிக மோசமாக என்ன நடந்துவிட முடியும் என்பதை சிந்தியுங்கள்.

அந்த மோசமான நிலைக்குச் சென்றாலும் உங்களால் மீண்டு வர முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் நிச்சயமாக உங்கள் முடிவை செயல்படுத்தலாம்.

மனதில் தெளிவான செயல்திட்டம் இல்லாமல் எந்த முடிவுக்குள்ளும் குதிக்காதீர்கள். மற்றவர்களை உங்களுக்கான முடிவுகளை எடுக்க அனுமதிக்காதீர்கள்.

இளைஞர்கள் : 20களில் இருக்கிறீர்களா? இந்த 7 விஷயங்களை கற்றுக்கொள்ள மறக்காதீங்க!
18 வயதில் MBBS, 22-ல் IAS அதிகாரி, இப்போது கோடிகளில் சம்பாதிக்கும் தொழிலதிபர்- யார் இவர்?

முக்கியத்துவம் கொடுத்தல்...

குடும்பம், வேலை, கல்வி, காதல் என பல பொறுப்புகளை நாம் ஏற்றுக்கொள்ள நேரிடும். இதற்கு மத்தியில் நம் உடல் நலத்தையும் மன நலத்தையும் கூட பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த வயதில் பெரும்பாலன இளைஞர்கள் சொதப்பும் இடம் இதுதான். யாருக்கு, எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனத் தெரியாமல் இருப்பது. மனம் போன போக்கில் போவது எப்போதும் சரியாக இருக்காது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

புதிய மனிதர்களா, பழைய நண்பர்களா, உறவினர்களா?, காதலன்/காதலியா? கடவுளா? எனப் பலருக்குள் இருந்து ஒருவரை நமக்கு முக்கியமானவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இளைஞர்கள் : 20களில் இருக்கிறீர்களா? இந்த 7 விஷயங்களை கற்றுக்கொள்ள மறக்காதீங்க!
விஜய் ஆண்டனி: உங்க குடும்பத்துல பிரச்னைனா... இத பண்ணுங்க - அட்வைஸ் செய்யும் இசையமைப்பாளர்

இதனை சமாளிப்பது எப்படி? இணையத்தில் வைரலான ஒரு வீடியோவில் ஒரு பேராசிரியர் ஒரு ஜாடியை கல்லூரிக்கு எடுத்து வருவார்.

மாணவர்கள் முன்னிலையில் அந்த ஜாடி நிறைய கோல்ஃப் பந்துகளால் நிறைப்பார். ஜாடி நிறைந்துவிடும்.

பின்னர் அதே ஜாடியில் சிறிய கற்களைப் போடுவார். கோல்ஃப் பந்துகளுக்கு இடையிலான இடைவெளியைக் கற்கள் நிறைக்கும்.

பின்னர் அதே ஜாடியில் மணலை போடுவார் கற்களுக்கு இடையில் இருக்கும் சிறிய இடைவெளிகளை மணல் நிறைக்கும்.

இளைஞர்கள் : 20களில் இருக்கிறீர்களா? இந்த 7 விஷயங்களை கற்றுக்கொள்ள மறக்காதீங்க!
நார்வே: இங்கு இறப்பது சட்டவிரோதமா? அதிசய நகரத்தின் பின்னணியில் இருக்கும் அறிவியல் காரணம்?

இந்த செயலுக்கு இவ்வாறாக விளக்கம் கொடுப்பார்,

ஜாடி தான் நம் மனம். பெரிய கோல்ஃப் பந்துகள் நம் குடும்பம், கல்வி போன்ற முக்கியமான விஷயங்கள்.

கற்கள் நம் வேலை, உடன் வேலை செய்பவர்கள், நாம் தினசரி சந்திக்கும் மனிதர்கள் போன்ற விஷயங்கள்.

மணல் நாம் செய்யும் சின்ன சின்ன விளையாட்டுகள், பார்டிகள், திரைப்படங்கள் போன்றவை.

ஒரு வேளை இந்த ஜாடியை முதலில் மணலால் நிரப்பியிருந்தால் நமக்கு கோல்ஃப் பந்துகளையும் கற்களையும் வைக்க இடம் இருந்திருக்காது.

நாம் கோல்ஃப் பந்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது நம்மால் சீரான வாழ்க்கையை நடத்த முடியும்.

இளைஞர்கள் : 20களில் இருக்கிறீர்களா? இந்த 7 விஷயங்களை கற்றுக்கொள்ள மறக்காதீங்க!
அரேபிய இளைஞர்கள் ஆண்மைக்குறைவு மருந்துகளை நாடுவது ஏன்? என்ன நடக்கிறது அங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com