பெண்கள் ஆரோக்கியம் : மாதவிடாய் வருவதற்கான அறிகுறிகள் என்ன? சமாளிப்பது எப்படி?

ஒவ்வொரு பெண்ணும் தனது மாதவிடாய் சுழற்சி பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும். மாதவிடாய் வருவதற்கு முன்பு பெண்களுக்கு உடலில் சில அறிகுறிகள் தென்படும்.
 Menstruation
Menstruationpixels
Published on

பெண்களாகப் பிறந்த அனைவருக்கும் பருவம் அடைந்த பின் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வருவது இயற்கை.

ஒரு சிலருக்கு மாதவிடாய் சுழற்சி சரியாகவும், சிலருக்கு மாறி மாறியும் வரும். மாதவிடாய் வரும் சுழற்சியை ஞாபகம் வைத்துக் கொள்ளச் சிலர் சிரமப்படுகின்றனர்.

ஒவ்வொரு பெண்ணும் தனது மாதவிடாய் சுழற்சி பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும். மாதவிடாய் வருவதற்கு முன்பு பெண்களுக்கு உடலில் சில அறிகுறிகள் தென்படும் அதைப் பற்றியும் அதனை எப்படி சமாளிப்பது குறித்தும் காணலாம்.

Pimple
PimpleTwitter

மாதவிடாய் வருவதற்கான அறிகுறிகள்

மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரம் முன்பு சில அறிகுறிகள் ஏற்படும்.

முகப்பரு

சிலருக்கு மாதவிடாய் வருவதற்கு முன்பு ஹார்மோன் மாற்றம் காரணமாக முகப்பருக்கள் வர ஆரம்பித்து விடும்.

வயிற்று வலி

மாதவிடாய் வருவதற்கு முன்பே சிலருக்கு லேசாக வயிறு வலிக்க ஆரம்பித்து விடும்.

 Menstruation
வெள்ளைப்படுதல் தொந்தரவு சரியாக ஆண், பெண் செய்ய வேண்டியவை
 chest pain
chest painTwitter

மார்பகங்களில் வலி

சிலருக்கு மட்டுமே மாதவிடாய் வருவதற்கு முன் மார்பகங்களில் வலி ஏற்படும்.

மன அழுத்தம் - மனச் சோர்வு

மாதவிடாய் வருவதற்கு முன் சில பெண்கள் தேவையில்லாமல் கோபம், எரிச்சல் அடைவார்கள் (mood swings )

சிலருக்குப் பசியின்மை, தூக்கமின்மை ஏற்படும்.

drinking water
drinking watertwitter

மாதவிடாய் பிரச்சனைகளைச் சமாளிக்க டிப்ஸ்

  • இந்த நாட்களில் எண்ணெயில் சமைக்கப்பட்ட உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

  • காய்கறிகள், பழங்கள் அதிகம் உட்கொள்வது சிறந்தது.

  • தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும், வயிறு வலி அதிகம் இருந்தால் வெந்தயம் சாப்பிடுவது நல்லது.

  • நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொண்டால் mood swings இருந்து விடுபடலாம்.

 Menstruation
ஒயின் அருந்தினால் காம உணர்வு அதிகரிக்குமா? - இந்த ஆய்வு சொல்வது என்ன?
mentrual cycle
mentrual cycleTwitter

மாதவிடாய் சுழற்சி முறை

  • மாதவிடாய் சுழற்சி ஒவ்வொருவருக்கும் மாறுபடும் தன்மை கொண்டது.

  • பொதுவாக 21 நாளிலிருந்து 35 நாட்கள் இடைவெளிக்குள் வர வேண்டும்.

  • மாதவிடாய் ரத்தப்போக்கு 3 முதல் 7 நாட்கள் வரை இருக்கும்.

இதில் மாறுபாடு ஏற்பட்டால் மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும்.

 Menstruation
மாதவிடாய் சுகாதார தினம் : களையப்பட வேண்டிய 5 மூடநம்பிக்கைகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com