வெள்ளைப்படுதல் தொந்தரவு பெண்களுக்கும் வரும். ஆண்களுக்கும் வரும். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், இந்த வெள்ளைப்படுதல் தொந்தரவு ஒருவித அசௌகரியமான உணர்வைத் தரும். சுகாதாரமற்ற நிலை போன்ற உணர்வைக் கொடுக்கும். பிசுக் பிசுக் உணர்வு கடினமானதாக இருக்கும். ஒருவித எரிச்சல் உணர்வும் சிலருக்கு வரலாம். சிலருக்கோ துர்நாற்றமும் அடிக்கலாம். சிலருக்குச் சிவப்பு, வெள்ளை, மஞ்சள், பழுப்பு, லேசான பச்சை நிறமாகவும் வெளிப்படலாம். எது வெளிப்பட்டாலும் அது கழிவுதான் என்ற புரிதல் அவசியம்.
தரமற்ற சளி, உடலின் கீழ் பாகம் வழியாக வெளியேறுகிறது. இந்தப் பிரச்சனை இருப்பவர்களுக்குச் செரிமானத் தொந்தரவுகள் இருக்கலாம். எளிமையான உணவுகளைத் தேர்வு செய்து உண்ணலாம். செரிமானமாகச் சிரமமாகும் உணவுகள், இப்படிக் கழிவாகவும் வெளியேறும்.
தூக்கம் சீராக இல்லை என்பதை உணர்த்தும் மிக முக்கிய அடையாளம் வெள்ளைப்படுதல் தொந்தரவு. ஆணுக்கும் பெண்ணுக்கும் இக்காலத்தில் அதிகமாக வர காரணம், தூக்கம் இரவில் இல்லாமல் இருப்பது. நீண்ட நேரம் விழித்து இருந்து நடு இரவில் தூங்கும் பழக்கம்.
மலச்சிக்கல் இருந்தால் அதைச் சரி செய்யுங்கள். வெள்ளைப்படுதலுக்கு இதுவும் ஒரு காரணம்.
இடுப்புக்குளியல் எடுத்தால் வெள்ளைப்படுதல் தொந்தரவு நிற்கும். இடுப்புக்குளியல் தொட்டில் மூலம் சுமார் 20 நிமிடங்கள் வரை இடுப்புக் குளியல் செய்யலாம். சாதாரணத் தண்ணீரில் செய்வதே நல்லது. வெந்நீர் அல்லது இளஞ்சூடான நீர் பயன்படுத்தக் கூடாது. நீச்சல் குளத்தில் குளிப்பதும் தீர்வு தரும்.
ஓய்வாக இருக்கும்போதோ அல்லது அக்கடியோ அடிவயிற்றில். ஈரத்துப்பட்டி அல்லது ஈரக்களிமண் பட்டி போடலாம்.
ஒருநாளை இருவேளைச் சமைக்காத இயற்கை உணவுகளை உண்டால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
2-3 லிட்டர் தண்ணீர் அருந்தும் பழக்கம் தவறு. தாகம் எடுத்தால் தண்ணீர் குடியுங்கள். தாகம் எடுக்காவிட்டால் தண்ணீர் அருந்த வேண்டாம். ஏசியில் இருந்தாலும் சரி வெயிலிலிருந்தாலும் சரி. உங்கள் தாகத்தைக் கவனித்துத் தண்ணீர் அருந்தும் பழக்கத்துக்கு வாருங்கள்.
யோகமுத்ரா
மகா முத்ரா
பாத ஹஸ்தாசனம்
பச்சிமோத்தாசனம்
ஹலாசனம் ஆகியவை செய்திட வெள்ளைப்படுதல் தொந்தரவு நீங்கும். முறையான பயிற்சியாளரிடம் கற்றுக்கொள்வது நல்லது.
முலாம் பழம்
வாழைப்பழம்
அத்திப்பழம் ஆகியவை சாப்பிடவும்
தேன் கலந்த எலுமிச்சம் சாறு குடித்திட இந்நோய் சரியாகும்
நெல்லிக்காய் சாறு
ஆவாரம் பூ
வில்வ இலைச்சாறு
வாழைத்தண்டு சாறு ஆகியவற்றை வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் சீக்கிரமே குணமாகும்.
அத்தி மரத்தில் இத்தளிர்களை அரைத்து தொப்புளுக்குக் கீழ்பாக்கங்களில் நன்கு அப்பி வந்தால், அதிக வெள்ளைப்போக்கு நின்றுவிடும்.
பெரு நெருஞ்சி இலைகளைப் பறித்து, வெயிலில் காய வைத்து, இடித்துப் பொடியாக்கி இந்தப் பொடியுடன் ஒரு தேக்கரண்டியுடன் ஒரு கோப்பை தண்ணீருடன் ஒரு தேக்கரண்டி தேனும் கலந்து குடிக்க 40 நாட்களில் சரியாகும். காலை, மாலை குடித்து வரலாம்.
அசோகப்பட்டை 20 கிராம் எடுத்து, 250 மி.லி தண்ணீர் சேர்த்து 60 மி.லி ஆகும்வரை காய்ச்சி வடிகட்டி அதை வேளைக்கு 30 மி.லி வீதம் அருந்தி வந்தால் வெள்ளைநோய் குணமாகும்.
ஆவாரம் பட்டை 20 கிராம் எடுத்து மேற்சொன்ன முறைப்படி கஷாயமாகச் செய்து குடிக்க வெள்ளைப்படுதல் தணியும்.
செம்பருத்திப் பூக்களை நெய்யில் வதக்கி உண்டு வரலாம். வெள்ளைப்படுதல் நீங்கும். ஒற்றைச் செம்பருத்தி வகையே இதற்குச் சிறந்தது.
தரைப்பசலை கீரையுடன் சின்ன வெங்காயம், சீரகம் சேர்ந்து 5 நாட்கள் சாப்பிட்டாலும் சரியாகும்.
தென்னையின் வேர் கிடைத்தால் கஷாயமிட்டுக் குடிக்கலாம்.
நாவல் மரப்பட்டையைச் சாறெடுத்து மோருடன் சேர்த்துக் குடித்து வரலாம். நீர் மோர் அதாவது வெண்ணெய் எடுக்கப்பட்ட நீர் மோர். தயிரில் தண்ணீர் கலந்து குடிப்பது அல்ல.
மாங்காயைத் தோல் சீவி நெய்யில் வதக்கிய பின் சாப்பிட வெள்ளைப்படுதல் நிற்கும்.
ஆண், பெண் இருவருமே உள்ளாடைகளை ஒரு வருடத்துக்கு ஒருமுறையாக மாற்றிட வேண்டும். எப்படி மருந்துகள், உணவுகளுக்குக் காலாவதி தேதி உண்டோ அதுபோல நாம் தினமும் அணியும் உள்ளாடைகளையும் வருடத்துக்கு ஒரு முறை மாற்றிவிடுதல் நல்லது. பல ஆண்டுகளாக ஒரே உள்ளாடையைத் திரும்பத் திரும்பத் துவைத்து அணிய கூடாது.
வெள்ளைப்போக்குப் பிரச்சனை இருப்பவர்கள், கீழ் உள்ளாடையை நன்கு இஸ்திரி செய்து அணியலாம். இதனால் கிருமிகள் அழியும்.
பெண்கள் இறுக்கமாக லெக்கின்ஸ், ஜெக்கிங்ஸ், டிரெக்கிங்ஸ், டைட்ஸ் அணிந்தாலும் வெள்ளைப்போக்கு ஏற்படும். ஆண்களும் இறுக்கமான கீழ் உள்ளாடைகளைத் தவிர்க்கலாம்.
ஆண், பெண் இருவருமே மடியில் லாப்-டாப் வைத்துக்கொண்டு வேலை செய்யக் கூடாது. மொபைல் போன்களை கீழ் பாக்கெட்டில் வைப்பதைத் தவிர்க்கவும்.
காட்டன் துணி இல்லாத மற்ற துணிகளில் கீழ் உள்ளாடையை அணிந்தாலும் வெள்ளைப்படும் தொந்தரவு வரும்.
உள்ளாடைகளைக் கட்டாயமாக வெயிலில் காய வைத்து எடுப்பது நல்லது. வீட்டிலே நிழல் படும் இடத்தில் காய வைத்து அணியும் பழக்கம் தவிர்க்கப்பட வேண்டும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp