காதல், காமம், கொஞ்சம் உளவியல்: திருமணம் தாண்டிய உறவை தடுக்க காமசூத்திரம் சொல்லும் வழி - 22

அந்தக் காலத்திலே வெளியே ஆணோ பெண்ணோ துணை தேடிக் கொள்வதைத் தடுக்க அறிவுரை சொல்லி இருக்கிறது காமச்சூத்திரம். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவில் பரஸ்பர திருப்தி இருந்தால் மட்டுமே, இருவரில் யாரும் வெளியில் துணை தேடும் வாய்ப்புக் குறைவு.
திருமணம் தாண்டிய உறவை தடுக்க காமசூத்திரம் சொல்லும் வழி
திருமணம் தாண்டிய உறவை தடுக்க காமசூத்திரம் சொல்லும் வழிNews Sense

காம உறவுகளில் சில வகைகள் சொல்லப்படுகின்றன. ஆணுறுப்பை நேராகப் பெண்ணுறுப்பில் வைப்பதை ‘உப ஸ்ருக்தகம்’ எனப்படுகின்ற உறுப்பை நேராக நகர்த்துகின்ற வகை. இதைப் பொதுவாகப் பலரும் பயன்படுத்தும் வகைகளில் ஒன்று.

அதே ஆண் தனது ஆணுறுப்பைக் கைகளால் பிடித்தபடி, பெண் உறுப்பில் நுழைத்து தயிர் கடைவது போலச் சுழற்றுவது மந்தனம். இங்கு மந்தனம் எனச் சொல்வது சுழற்றுவது என அர்த்தம். பெண் அடிவயிற்றை வளைத்து, ஆணுறுப்பைப் பெண் உறுப்பில் வலுக்கட்டாயமாக நுழைப்பது ஹூலம். இப்படி என்றால் நுழைப்பது என அர்த்தம்.

மேலே சொன்னதையே மிக வேகமாகச் செய்து, ஆண் உறுப்பைப் பெண் உறுப்பில் தேய்த்தால் அது அவமர்த்தனம் என்ற வகை. அவமர்த்தனம் என்றால் தேய்ப்பது எனப் பொருள். பெண்ணுறுப்பில் எவ்வளவு ஆழமாக ஆண் உறுப்பு செல்ல முடியுமோ, அவ்வளவு ஆழத்துக்கு அதை நுழைத்து நீண்ட நேரம் அழுத்துவது பீடிதகம். இதற்கு அர்த்தம் அழுத்துவது.

காமம்
காமம்Twitter

பெண் உறுப்பின் நடுப்பகுதியில் ஆண் உறுப்பை நுழைக்காமல், ஒரு பக்கம் சுவரில் மட்டும் உரசுவது போல நுழைப்பது வராஹ காதம் என்ற வகை. இதன் அர்த்தம் பன்றி உரசுவது போல… பெண் உறுப்பில் ஆண் உறுப்பை நுழைத்த பிறகு ஒரு அசைப்பில் பெண் உறுப்பின் ஒரு சுவரையும் அடுத்த அசைப்பில் இன்னொரு சுவரையும் உரசுமாறு அழுத்துவது வ்ருஷ காதம். காளை போல உரவுவது என அர்த்தம்.

பெண் உறுப்பில் ஆணுறுப்பை முழுமையாக நுழைக்க வேண்டும். ஆண் உறுப்பை அதிலிருந்து வெளியே எடுக்காமல் மேலும் கீழும் அசைப்பது ஸடக விலஸிதம். சிட்டுக்குருவி போல.. இதனால் பெண்ணுக்கு முழு இன்பம் கிடைக்கும். உச்சக்கட்டத்தில் இருக்கும் போது இதைச் செய்ய வேண்டும் என நூல் சொல்கிறது. செக்ஸ் உறவுக்கு மட்டுமல்ல எல்லா விஷயத்துக்கும் ஒரு ஆண் புரிந்துகொள்ளும் அளவுக்குப் புத்திசாலியாகவும், பக்குவப்பட்டவராகவும் இருந்தால் போதும் என்கிறது காமச்சூத்திரம்.

காமம்
காமம்Twitter

தன் மனைவியின் செய்கைகளுக்கு அர்த்தம் கண்டுபிடிக்க அவர் கற்றுக்கொண்டால் ஒவ்வொரு விஷயத்திலும் அந்த மனைவியின் மனம் என்ன நினைக்கிறது என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும். நிறையப் பேர் தங்கள் மனைவியை ஜடம் என்று சொல்வதாக செக்ஸ் நிபுணர்கள் கூறுகிறார்கள். கமர்ஷியல் சினிமாக்கள், நிலப்படங்கள் பார்த்துவிட்டுத் தங்கள் மனைவியை அதனுடன் ஒப்பிட்டுக் கொள்வதாகச் சொல்கிறார்கள். தங்களைப் போல உங்கள் மனைவியும் மனுஷி. உங்களுக்கு இருப்பது போல உங்கள் மனைவிக்கும் மனசு இருக்கும். பெண்ணுக்கும் ஆசைகள் உண்டு. பிடிப்பது, பிடிக்காததும் உண்டு. இந்த உண்மை நிறைய ஆண்களுக்குப் புரிவதில்லை. தங்களது ஆசைகளேதான் அவர்களது ஆசையும் எனத் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். இதனால், காம உறவில் தங்களுக்குப் பிடித்ததை மட்டும் செய்கிறார்கள். இதனால், பெண்ணுக்கு இன்பம் கிடைக்காது போய்விட, இயல்பாக செக்ஸ் மீது பெண்ணுக்கு ஆர்வம் நீங்கி விடுகிறது.

அந்தக் காலத்திலே வெளியே ஆணோ பெண்ணோ துணை தேடிக் கொள்வதைத் தடுக்க அறிவுரை சொல்லி இருக்கிறது காமச்சூத்திரம். ஒரு ஆண் எப்படியெல்லாம் நடந்துகொண்டால், உனது ஆசைக்குரிய பெண் உன்னோடு இருப்பாளோ, அந்தவிதமாக நீ செக்ஸில் நடந்துகொள்… இதுதான் அறிவுரையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. முறையற்ற காதல்களும் அதனால் நிகழும் வன்முறைகளும் தவிர்க்கப்படும். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவில் பரஸ்பர திருப்தி இருந்தால் மட்டுமே, இருவரில் யாரும் வெளியில் துணை தேடும் வாய்ப்புக் குறைவு.

SEX
SEXTwitter

வாய்வழி உறவு பற்றி நவீன செக்ஸ் அறிவியல் என்ன சொல்கிறது?

இதை அனுமதிக்கலாம். ஆனால், சில நிபந்தனைகளோடு என்று சொல்கிறார்கள்.

உறவுகொள்ளும் ஆண்-பெண் இருவருக்குமே எந்த நோய்த்தொற்றும் இருக்கக் கூடாது. ஒருவருக்கு நோய் இருந்தால் அது மற்றவருக்குத் தொற்றிக்கொள்ளும் அபாயம் உள்ளது.

பிறப்பு உறுப்புகள் சுத்தமாக இருக்க வேண்டும். அழுக்கு இருக்கக் கூடாது. பால்வினை நோய்கள், புண்களோ இருந்தால் அது தொந்தரவுகளைத் தரும் என்கிறது.

வாயும் சுத்தமாக இருக்க வேண்டும். குறிப்பாக, பல் ஈறுகளில் எந்தத் தொற்றும் இருக்கக் கூடாது. குறிப்பாக, பெண்ணிடம் மாதவிடாய் முடிந்த உடனேயே வாய்வழி உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. இப்போதுதான், உதிரப்போக்கைச் சந்தித்த உறுப்புப் பலவீனமாக இருக்கும் என்பதால், நோய்த்தொற்றுப் பரவலாம்.

திருமணம் தாண்டிய உறவை தடுக்க காமசூத்திரம் சொல்லும் வழி
காதல், காமம், கொஞ்சம் உளவியல்: உச்சக்கட்டம் அடையவில்லை - கண்டுபிடிப்பது எப்படி? - 20

கர்ப்பிணிப் பெண்கள் இந்த உறவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சாதாரணத் தொற்று பரவினாலும் தொல்லைதான். கர்ப்பத்தில் குழந்தை இருப்பதால்…

எல்லாவற்றுக்கும் மேலாக, ஆண் அல்லது பெண் இதற்குப் பிடிக்கவில்லை எனச் சொன்னால் துணையை வற்புறுத்திச் செய்யச் சொல்லக்கூடாது. செக்ஸூக்கு முந்தைய விளையாட்டில் வாய் வழி உறவையும் ஒரு வகையாகச் சேர்த்து இருக்கிறது நவீன செக்ஸ் அறிவியல். பல ஆண்டுகளாக ஒரே மாதிரி உள்ள உறவில், மாற்றத்துக்காக இந்த வகையைப் பயன்படுத்தலாம்.

செக்ஸ் தொடர்பான சில சர்வேக்களில், ஒரு உண்மை வெளிவந்துள்ளது. பல ஆண்கள் சொல்லியிருப்பது, “என் மனைவி இதுபோன்ற விஷயங்களுக்கு ஒப்புகொள்ளவில்லை. அதனால்தான் நான் வெளியில் வேறொரு பெண்ணைத் தேடினேன். எனக்கு வீட்டில் இது கிடைத்தால் போக மாட்டேன்” என்று காரணம் சொல்கிறார்கள். ‘இதுபோன்ற’ என்று இங்குக் குறிப்பிடுவது ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு தேவை என்று அர்த்தம் வெறும் ஓரல் செக்ஸ் மட்டுமல்ல.

அதனால் ஆணும் பெண்ணும் தனது ஆசைகளைச் சொல்லி, பகிர்ந்து விருப்பமானதை தங்கள் துணையிடம் இருந்து பெற்றுக்கொண்டு நல்வாழ்வை வாழ்வது சிறப்பு என செக்ஸ் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

திருமணம் தாண்டிய உறவை தடுக்க காமசூத்திரம் சொல்லும் வழி
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : வலியில்லாத செக்ஸூக்கு என்ன வழி? - 21

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

திருமணம் தாண்டிய உறவை தடுக்க காமசூத்திரம் சொல்லும் வழி
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவும் மன உளைச்சலை தரலாம்! - 1

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com