காதல், காமம், கொஞ்சம் உளவியல் : பெண் எப்போது கலவிக்கு தயாராகிறாள்| பகுதி - 13

காதல் பேச்சுகளிலே பெண்ணுக்கு மெய் மறந்த நிலை ஏற்படும். தூண்டுதல் விளையாட்டு போலக் காமப்பேச்சுக்களும் கலவிக்கு முக்கியம்
Sex

Sex

Twitter

காதல் பேச்சுகளிலே பெண்ணுக்கு மெய் மறந்த நிலை ஏற்படும். தூண்டுதல் விளையாட்டு போலக் காமப்பேச்சுக்களும் கலவிக்கு முக்கியம். கலவிக்குப் பெண்ணைத் தயார்ப்படுத்த சொல்லித்தரும் காமச்சூத்திரம் அன்றைய, இன்றைய நவீன மருத்துவர்களைவிடச் சிறந்தது.

திரவக்கசிவும் ஒரு அடையாளம்

திரவக்கசிவும் ஒரு அடையாளம்

Facebook

திரவக்கசிவும் ஒரு அடையாளம்

பெண் கலவிக்குத் தயாராகிவிட்டால் என்பதை எப்படிப் பெண் உறுப்பில் சுரக்கும் ஒருவகைத் திரவம் சுரந்து அறிய முடிகிறதோ… அதுபோல அக்குல் ஈரமடையும்… வியர்வையோ ஈரமோ… அதைக் கையால் தடவிப் பார்த்துப் பெண் கலவிக்குத் தயாராக இருக்கிறாள் என்பதற்கு இந்தத் திரவக்கசிவும் ஒரு அடையாளம். அதன் பிறகே, கலவி தொடங்கப்பட வேண்டும் என்கிறது காமச்சூத்திரம்.

காம இச்சையின் தன்மைக்கேற்ப கலவியை நான்கு விதமாகப் பிரிக்கலாம். சரியான புணர்ச்சி, இன்பப் புணர்ச்சி, இயல்பான புணர்ச்சி, செயற்கை இன்பம் ஆகியவை.

Sex

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காம உணர்வை பெருக்கும் உணவுகள் - 11

சரியான புணர்ச்சி

சரியான புணர்ச்சி

Twitter

சரியான புணர்ச்சி

சரியான புணர்ச்சி என்பது ஒருவரை ஒருவர் அன்புடன் அரவணைப்புடன் நேசிக்கும் குணமுள்ள தம்பதிகளிடையே குழந்தைபேறுக்காக ஒருவரை ஒருவர் திருப்திபடுத்துவதற்காகவும் நிகழும் புணர்ச்சி இது. கலவியில் தான் இன்பம் காண்பதைவிடக் கணவனுடைய இன்பமே முக்கியம் எனப் பெண் நினைக்கிறாள். இது காதலும் காமமும் சேர்ந்தது. இரண்டுமே ஒரே உணர்வாக வெளிப்படுவது. உண்மையான தன் துணையை விரும்பும் பெண்ணின் அடையாளம். அதேபோல, பெண்ணின் திருப்தியை பெரிதாக எண்ணுகிற ஆண், சிறந்த கணவன். இப்படி நினைக்கின்ற ஆண்கள் குறைவு. ஆனால், இந்த நிலை மாற வேண்டும். இப்படி நினைக்கின்ற ஆண்கள் அதிகமாக வேண்டும். பெண்ணின் திருப்தியை பெரிதாக எண்ணுகிற ஆண் அமைந்துவிட்டால் சண்டை சச்சரவுகள் குறைந்துவிடும். 2 நிமிட செக்ஸ் டார்ச்சர் இந்தத் தம்பதிகளிடம் இருக்காது. இவர்களின் மனநிலையும் செம்மையாகவே இருக்கும். செக்ஸ் இவர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். செக்ஸால் அதிகப் பலன்களை அனுபவிக்கும் தம்பதிகளில் இவர்கள் முதல் ரகம்.

இன்ப புணர்ச்சி

இன்ப புணர்ச்சி

Facebook

இன்ப புணர்ச்சி

இரண்டாவதாக, மிகுந்த கஷ்டங்களுக்குப் பின்னர் ஒன்று கூடிய காதலர்கள், நெடுநாள் பிரிந்திருந்தவர்கள் தற்போது கூடினால் கிடைப்பவை. இவர்கள் ஊடலுக்குப் பின் சேருபவர்கள். இது காம இச்சையை பூரணமாக வெளிப்படுத்தும். ஊடலுக்குப் பின் கூடல் என்பதுதான் இது. பல தம்பதியர்களுக்கு இடையில் பிரச்சனைகள் வரும். பின் அவர்கள் இணைவார்கள். இந்த வகை அவர்களைச் சேர்ந்தது. இன்ப புணர்ச்சி வகையைச் சேர்ந்தவர்கள்

இயல்பான புணர்ச்சி

இயல்பான புணர்ச்சி

Facebook

இயல்பான புணர்ச்சி

இயல்பான புணர்ச்சி என்பது நெடுநாள் பழகிய காதலர்கள் பரஸ்பர காம சுகத்துக்காக இணைந்து கலவியில் ஈடுபடுவது இவ்வகை. பல முறை இதற்கு முன் இருவரும் சேர்ந்து இன்பம் அனுபவித்து இருக்கலாம். அப்படி அனுபவித்து இருந்தால், மற்றவருக்கு எதில் இன்பம் என இருவருக்குமே தெரிந்து இருக்கும். மற்றவருக்கு இன்பம் தருவது எது? எப்படி நடந்து கொள்வது…? எனத் தெரிந்திருந்தாலே கலவி இன்பம் இருவருக்கும் கிடைக்கும். தனக்கும் இன்பம் கிடைக்கும்: தன் துணைக்கும் இன்பம் கிடைக்கும். இவர்களின் ஒத்துழைப்பும் காதலின் அடையாளமே… ஒத்துழைப்பின் மூலம் இன்பம் பெறுவார்கள்.

காம இச்சை

காம இச்சை

Twitter

வெறும் காம இச்சையைத் தணித்துக் கொள்வதற்கே அல்லாமல் ஒருவர் மற்றவருடைய நலனைக் கருதி புணர்ச்சி செய்வது இது. சில தம்பதிகள் வெறும் காமத்துக்காக மட்டும் இணைய மாட்டார்கள். தன் துணையை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இருவருக்கும் இருக்கும். இதனால் செயற்கை இன்பத்தை அடைய செய்ய இருவருமே முயலுவார்கள். தூண்டுதல் விளையாட்டுகள் மூலம் செயற்கை இன்பத்தை வரவைத்த பிறகு பிண் கலவியில் ஈடுபடும் வகை.

இயல்பாகத் தோன்றும் காம இச்சையைத் தணிப்பதற்கு மேற்கொள்ளப்படுவது அல்ல இந்த வகை. தழுவுதல், முத்தம் போன்ற காம விளையாட்டுகளால் காம இச்சையைத் தூண்டி விட்டு அதன் பிறகே புணர்வது. இவர்களும் ஒருவொருக்கு ஒருவர் இன்பம் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செய்கின்ற உயர்ரக ஜோடிகள்தான். கலவியின் போது நிலையும் முறையும் பற்றி காமச்சூத்திரம் சொல்வதை அடுத்தப் பகுதியில் பார்க்கலாம்.

முந்தைய பகுதியைப் படிக்க

Sex

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவு எத்தனை வகை திருப்தி? - பகுதி 12

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com