உடலுறவு எத்தனை வகைத் திருப்தி?

உடலுறவு எத்தனை வகைத் திருப்தி?

Pexels

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவு எத்தனை வகை திருப்தி? - பகுதி 12

உற்சாகம் தரும் பானங்கள் தரும் பலன்களைக் காதல் பேச்சுக்களும் காம பேச்சுக்களும் கொடுக்கும். இது ஆணுக்கும் பெண்ணுக்கும் காம உணர்வை அதிகரிக்கச் செய்கிறது. காதல் பேச்சுகளில் பெண்கள் மெய் மறந்த நிலைக்குச் செல்வதும் உண்டு.

கலவி நேரத்தைக்கொண்டு ஆண், பெண் ஆகிய இருபாலினரையும் பொதுவாக மூன்று விதமாக பகுத்துக் கூறமுடியும். கலவியின் நேரம் தொடர்பான வகைகளைப் பற்றிப் பார்ப்போம். சீக்கிர காலம், மத்திய காலம், நீண்டகாலம் என்பதே அவை.

புணர்ச்சி வகைகள்

சீக்கிரமே கலவியை முடிக்கும் ஒர் ஆண், அவரது கலவியின் நேரம் குறுகியதாக இருக்கும். தன்னைப் போன்ற ஒரு பெண்ணுடன் கலந்தால் அவர்களுடைய புணர்ச்சி நேரம் குறுகிய கால அளவையேத் தொடும். இதைச் சீக்கிர காலப் புணர்ச்சி என்பார்கள்.

அதேபோல, மத்திய கால நேரம் என்பது ஓர் ஆண், தன்னைப் போன்றே ஒரு பெண்ணுடன் கலந்தால். அதாவது குறுகிய நேரமும் இல்லாத நீண்ட நேரமும் அல்லாத மத்திய நேர கலவியாக இருப்பின், அது மத்திய காலப் புணர்ச்சி என வகைப்படுத்தப்படுகிறது.

நீண்ட காலக் கலவி நேர உடைய ஆண் தன்னையொத்த பெண்ணுடன் சேர்ந்தால் அது நீண்டகாலப் புணர்ச்சி எனப்படும். சமநேர புணர்ச்சியே இன்பத்தை அதிகம் தருவதாக இருக்கும் எனக் காமச்சூத்திரம் சொல்கிறது.

பொதுவாகக் கலவி இன்பத்தில், பெண்களைப் பற்றிய ஒரு அபிப்பிராயப் பேதம் நிலவுகிறது. அதாவது, குறிப்பிட்ட கால அளவுக்குள் பெண்கள் காமத்தின் உச்சக்கட்டத்தை அடைவதில்லை என்று. ஆண்களைப் போலப் பெண்களைச் சரியாக அளவிட்டு கூற முடியவில்லை என்கிறார்கள். ஆனால், ஆணும் பெண்ணும் அடையும் இன்பம் மாறானது என்பதே முன்னரே பார்த்தோம். இன்பத்தை அனுபவிப்பது என்பது, ஒரு உணர்ச்சி. புற உறுப்புகளில் புலப்படுவது அல்ல.

பெண் கலவியில் மனம் லயித்து உணர்வற்றவளைப்போல், தன் நிலை இழந்து மூழ்கி விடுவதைப் பார்த்து பலர் உச்சக்கட்டம் அடைந்துவிட்டாள் என நினைப்பதுண்டு. ஆனால், பெண்ணுக்கு விந்து என்ற விஷயம் கிடையாது. காம எழுச்சி ஏற்படுகையில் பெண் உறுப்பில் வழுவழுப்பான திரவம் சுரக்கும். இது விந்து அல்ல. ஆண் உறுப்புச் சுலபமாக உள்ளே நுழைந்து வெளிப்பட எண்ணெய் பசையைப் போல இந்தத் திரவம் சுரந்து கலவிக்கு உதவுகிறது. இது இயற்கை அளித்த சாதனமாகும். எப்படி இயந்திரம் உராய எண்ணெய் போடுகிறோமோ அதுபோலத்தான் இதுவும்.

உடலுறவு எத்தனை வகைத் திருப்தி?

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காம உணர்வை பெருக்கும் உணவுகள் - 11

உடலுறவு : உங்கள் கூடல் சிறப்பாக இருக்க இதனை செய்யுங்கள்!

உடலுறவு : உங்கள் கூடல் சிறப்பாக இருக்க இதனை செய்யுங்கள்!

Pixabay

நான்கு வகைத் திருப்தி

கலவியால் கிடைக்கும் திருப்தியை நான்கு வகையாகச் சொல்லலாம். அடிக்கடி கலவியில் ஈடுபடுவதால் காம இச்சை அடங்கி அதன் மூலம் ஏற்படும் திருப்தி முதல் வகை. கலவியைப் பற்றியே மனதில் எண்ணிக் கொண்டிருப்பதாலேயே ஏற்படும் திருப்தி இரண்டாவது வகை.

தன் மனைவி அல்லது தன் கணவன் என்று நினைத்துக்கொண்டு ஒரு ஆணோ, அல்லது வேறு யாருடையாவது கூடிப் பெறும் திருப்தி, மூன்றாவது வகை என்பார்கள். மனதுக்குப் பிரியமானவரிடம் பெறும் திருப்தி நான்காவது வகை.

உடலுறவு எத்தனை வகைத் திருப்தி?

உடலுறவு : ஆண்கள் உச்சக்கட்டத்தை அடைந்த பின் என்ன நிகழும்?

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவு எத்தனை வகைத் திருப்தி?

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவு எத்தனை வகைத் திருப்தி?

NewsSense

முக்கிய வேறுபாடு

பொதுவாக, பெண்கள் பருவம் அடைந்த உடனேயே அவர்களுக்குக் காம இச்சை உடனேயே தோன்றுவதில்லை. பெரும்பாலான பெண்களுக்குத் தோன்றாது. எங்கேனும் சிலருக்கு வரலாம். இதுபோலக் கணவருடன் சேரும்போது தன்னிடம் எதிர்பார்க்கும் விதத்தில் நடந்து கொள்கிறார்களே தவிரப் பெண்கள் உணர்ந்து செயல்படுவதில்லை. இது குறைபாடு அல்ல. இயற்கையான அம்சம். பெண்ணிடம் காம இச்சையைத் தூண்டிவிட வேண்டியிருக்கிறது. இது ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு. இந்த வேறுபாட்டைப் பல ஆண்கள் அறிவதில்லை. பலர் பெண்களை ‘ஜடம்’ என்கிறார்கள். அப்படிச் சொல்வதற்கு முன், கலவிக்குப் பெண்ணைத் தயார்ப்படுத்த வேண்டும் என்ற ஆணின் அறியாமையே இதற்குக் காரணம்.

இதைச் சமீபத்தில், ‘தி கிரேட் இன்டியன் கிச்சன்’ திரைப்படத்திலும் சொல்லியிருப்பார்கள். கலவிக்கு முன் காதல் விளையாட்டுகள் இல்லாமல் செக்ஸ் வைத்துக்கொண்டால் பெண்ணுக்கு வலிக்கும். கலவியால் அவளுக்குக் கொஞ்சம்கூட இன்பம் கிடைக்காது. வலி மட்டுமே இருக்கும். அல்லது அசௌகரியமாக இருக்கும். அதோடு பெண்ணுக்கு காம இச்சை தோன்றியிருக்காது. நாளடைவில் வெறுப்பாகும். இதைப் பெண்கள் வெளியில் சொல்லாமல் இருப்பார்கள். ஆனால், இதை ஆண் அறிவது மிக மிக அவசியம்.

செக்ஸ் வைத்துக்கொள்ளும் முன், பெண்ணுக்கு போதிய அளவு காம உணர்வு ஏற்படாமல் இருக்கக்கூடும். பெண்ணின் காம இச்சையை முழு அளவுக்குக் கிளர்ந்து எழச்செய்தாலன்றிக் கலவியின் இன்பத்தைப் பெண் அனுபவிக்க முடியாது. இதனாலும் செக்ஸில் முழு இன்பம் ஆணுக்கும் கிடைக்காமல் போகலாம். இது ஏதோ சிலருக்கு மட்டுமே… புணர்ச்சிக்கு முன் நடத்தப்படும் காதல் விளையாட்டுகள், தூண்டுதல் விளையாட்டுகள் எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் அறிய வேண்டியிருக்கிறது.

உடலுறவு எத்தனை வகைத் திருப்தி?

உடலுறவு : உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் எவ்வளவு தெரியுமா?

Pexels

படுக்கை அறை

இடம், சூழல் முக்கியம் எனப் பல பகுதிகளுக்கு முன்பே பார்த்தோம். ஆணும் பெண்ணும் சேரும் படுக்கை அறை, நன்கு அலங்கரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். வாசனை திரவியங்களோ, மலர்களோ இருத்தல் அவசியம். மனதுக்கு இன்பம் ஊட்டும் வகையில் படுக்கை அறை இருத்தல் வேண்டும். துணிகள் குவிக்கப்பட்டு, குப்பைக்கூடை போலப் படுக்கை அறை இருக்க கூடாது. தூசு, அழுக்கு, பெருக்காமல், துடைக்காமல் அடைச்சலாகப் படுக்கை அறை இருத்தல் ஆகாது. மிதமான மைல்டு நிற வண்ணங்களில் பெயின்ட் அடிக்கப்பட்டு அழகாக ரம்மியமாக இருப்பது நல்லது. கொஞ்சம் இயற்கை இன்டோர் செடிகள்கூட வைக்கலாம். தப்பில்லை. கவர்ச்சியான அல்லது மனதுக்கு இன்பம் ஊட்டும் படங்களோ சிலைகளோ படுக்கை அறையில் வைத்திருக்கலாம்.

உடலுறவு எத்தனை வகைத் திருப்தி?

உடலுறவு : ஆண்கள் உச்சக்கட்டத்தை அடைந்த பின் என்ன நிகழும்?

உடலுறவு

உடலுறவு

Pixabay

காதல் ததும்பும் பேச்சுக்கள்

கல்யாணயாமவதற்கு முன் மணிக்கணக்கில் பேசுவார்கள். ஆனால், அதே கல்யாணமாகிவிட்ட பின் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என்கிறார்கள். இது பெரும்பாலனவர்கள் சொல்லும் பதில். இதற்கு ஆமாம் என்கிறர்வர்களே அதிகம். இல்லை என்கிறவர்கள் மிக மிகக் குறைவு. கல்யாணத்துக்குப் பிறகும் காதலிக்கலாமே… தவறில்லையே… காதத் ததும்பும் பேச்சுக்கள் ஏனோ திருமணமான தம்பதியர்களிடம் மறைந்துவிடுகிறது. ஆனால், காதல் ததும்பும் பேச்சுக்கள் ஒரு முக்கியக் கலை என்கிறது காமச்சூத்திரம்.

தழுவுதல் எப்படி கலவிக்கு முக்கியமோ அதேபோலக் காதல் ததும்பும் பேச்சுக்களும் மிக முக்கியம். பிடித்தமான விஷயங்களைப் பேசத் தொடங்கி, சிறிது சிறிதாக செக்ஸ், கொஞ்சமாக உங்களுக்குப் பிடித்த செக்ஸ், உங்கள் துணைக்குப் பிடித்த செக்ஸ் எனக் கேட்டு அறிதல் செய்யலாம். காம இச்சையைத் தூண்டக்குடிய விஷயங்களைப் பேசுவதும் கலவிக்குத் தயார்ப்படுத்தும் முக்கியமான அம்சம். இதற்கு அவரவர்கள் நிறைய நிறையக் கதைகளை வைத்திருப்பார்கள். அதை அள்ளி விடலாமே… காதல் ததும்பும் பேச்சுக்கள் கலவியை இன்பமாக மாற்றும். பெண்ணுக்கும் ஆணுக்கும் ஒரு கம்ஃபர்ட் நிலையை உருவாக்கும். நீண்ட நேர கலவி இன்பத்தை அடைய செய்யவும் உதவும். இந்தப் பேச்சுக்கள் ஆண்களுக்கு எப்படி பிடிக்குமோ பெண்களுக்கும் பிடிக்கும். இதை யாரும் வெளியில் உணர்த்துவதில்லை. வெளியில் சொன்னால் என்ன நினைப்பார்களோ என்ற நிலை. இதில் என்ன ஜட்ஜ்மென்டல் வேண்டியிருக்கிறது? காதலில் காமத்தில் ஜட்ஜ்மென்டல் இருந்தால் வாழ்க்கையில் பின்னர் யாரை காதலிப்பீர்கள்? எல்லோரையும் எடைபோடுவதை நிறுத்திவிட்டு புரிந்துகொள்ளவோ இயல்பை ஏற்றுக்கொள்ளவோ, உண்மையை அப்படியே முழுதாக ஏற்றுக்கொள்ளவோ செய்யலாம். அதுவும் தன் காதலை (கணவனோ/மனைவியோ) முன் மதிப்பீடு செய்யாமல் காதலிப்பது வேறோரு நிலை. இது வாழ்க்கையை அழகாக்கும்.

உற்சாகம் தரும் பானங்கள் தரும் பலன்களைக் காதல் பேச்சுக்களும் காம பேச்சுக்களும் கொடுக்கும். இது ஆணுக்கும் பெண்ணுக்கும் காம உணர்வை அதிகரிக்கச் செய்கிறது. காதல் பேச்சுகளில் பெண்கள் மெய் மறந்த நிலைக்குச் செல்வதும் உண்டு. இதுவும் காம இச்சையைத் தூண்டும் ஓர் அம்சம். இது சுலபமான வழியும்கூட. கலவிக்குத் தயாராகுவதில் இன்னும் சில உண்மைகளைத் தொடர்ந்து அடுத்தப் பகுதியில் பார்க்கலாம்.

(- தொடரும்)

logo
Newssense
newssense.vikatan.com