காதல், காமம், கொஞ்சம் உளவியல் : பெண்களுக்கு ஈடுபாடு எந்த ஆண்களின் மீது வரும்? | பகுதி 15

பொதுவாக, உடல் உறவில் ஆண்களுக்கு விந்து வெளியேறிவிட்ட பிறகு உறவில் ஈடுபட்டிருப்பதை, தன் உடலை இயக்குவதை நிறுத்திவிடுவார்கள். இது இயல்புதான்.
Sex

Sex

Twitter

பொதுவாக, உடல் உறவில் ஆண்களுக்கு விந்து வெளியேறிவிட்ட பிறகு உறவில் ஈடுபட்டிருப்பதை, தன் உடலை இயக்குவதை நிறுத்திவிடுவார்கள். இது இயல்புதான். ஆனால், உடல் உறவில் ஈடுபட்ட நேரம் குறுகிய நேரமாக இருந்தால், பெண்களுக்குக் கஷ்டம்தான். இதுபோன்ற ஆண்கள் மீது பெண்களுக்கு அதிக ஈடுபாடு இருக்குமா என்பதில் சந்தேகமே. அப்போ, பெண்களுக்கு அதிக ஈடுபாடு எந்த ஆண்களின் மீது வரும்?விந்து வெளியானதும் ஆண் உடலுறவில் ஈடுபடுவதை நிறுத்திவிடுவான்; ஆனால், பெண்கள் இயங்குவதை நிறுத்திவிடாமல் தொடர்ச்சியான இயக்கத்தில் இருப்பர். இந்தக் காரணத்தால், புணர்ச்சியில் நீண்ட நேரம் இயங்கும் திறமையுள்ள ஆண்கள் மீது பெண்களுக்கு ஈடுபாடு அதிகம் இருக்கும். விந்து விரைவில் வெளியேறுவது பிரச்சனை என முன்பே பார்த்திருந்தோம். இத்தகைய சூழலில் தாம்பத்ய வாழ்க்கையில் சரியாக ஈடுபட முடியாத ஆண்களின் மீது பெண்களுக்கு அதிகம் ஈடுபாடு இருக்காது. ஆனால், இந்த உண்மையை சூழல் காரணமாகவோ சமூக நெருக்கடிகள் காரணமாகவோ இன்னப்பிற காரணங்களுக்காகவோ வெளியே சொல்லாமல் மனஅழுத்தத்துடன் இன்று வரை பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

Unsatified Wife

Unsatified Wife

Facebook

பெண்களின் நடத்தையில், வேலையில், குணத்தில், உடையில், சுபாவத்தில், நிறத்தில், உடல் அமைப்பில், சமையலில் குறைகூற அவ்வளவு பேர் விமர்சிக்க முன் வருகின்றனர். ஆனால், ஏனோ ஆண்களின் பெரும் பிரச்சனையான தாம்பத்திய வாழ்க்கையில் உள்ள குறைபாடுகளை எடுத்து சொல்லவோ விமர்சிக்கவோ ஆலோசனைகளை வழங்கவோ ஆண்களுக்குப் புரிய வைக்கவோ எந்த அமைப்புகளும் நிகழ்வுகளும் மனிதர்களும் முன் வருவதில்லை. பெண்ணுக்குச் சமைக்கத் தெரியுமா எனக் கேட்கும் முன், பாலியல் வாழ்க்கையில் ஆண் முதலில் ஆரோக்கியமாக இருக்கிறாரா? என்று கேள்வி கேட்க தொடங்கினால் மட்டுமே இந்த நிலை மாறும். எப்படி ஊர், பெயர், சம்பளம், குடும்பம் என அனைத்தையும் விசாரிப்பது போல் ஆணில் உடல்நிலை, மனநிலை ஆரோக்கியமாக உள்ளதா என்பதையும் கட்டாயமாக விசாரிக்க வேண்டும்.

Sex

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : பெண் எப்போது கலவிக்கு தயாராகிறாள்| பகுதி - 13

சிகிச்சை இருவருக்குமே

சிகிச்சை இருவருக்குமே

Twitter

சிகிச்சை இருவருக்குமே

புணர்ச்சியில் கொஞ்ச நேரத்திலே களைத்து போகும் ஆண்கள், நிச்சயம் ஆரோக்கியமானவராக இருக்க முடியாது. அப்படி ஆரோக்கியமாக ஒருவேளை இருந்தாலும், ஏன் கொஞ்ச நேரத்திலே களைப்பு வருகிறது என்ற காரணத்தைக் கண்டறிந்து அதைச் சரி செய்வதும் இல்லற வாழ்க்கைக்கு முக்கியம். எப்படிக் குறைந்த நேரத்திலே களைத்து போகும் ஆண்கள் மீது பெண்களுக்குப் பிணைப்பு குறைவாக இருக்குமோ அதேபோலக் குறைந்த நேரமே ஈடுகொடுக்கும் பெண்கள் மீது ஆண்களுக்கு இச்சை குறைவாகவே இருக்கும். இது இருவர் வாயிலும் வராவிட்டாலும் அசைக்க முடியாத உண்மையாகவே பல ஆண்டுகளாக மறைந்தே உள்ளது. எனவே, உடலுறவில் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி திருப்தி ஏற்படுவது; ஏற்படாமல் போவது என்கிற நிலைகள் ஆண், பெண் இருவருக்குமே சமம். ஆணுக்குக் குறை இருந்தாலும் சிகிச்சை அவசியம்; பெண்ணுக்குக் குறை இருந்தாலும் சிகிச்சை முக்கியம்.

புணர்ச்சியில் ஆண், பெண் இருவருமே உச்சக்கட்ட இன்பத்தை அனுபவிக்கிறார்கள். இதெல்லாம் ஆரோக்கியமான, திறமையான துணை கிடைத்தால் மட்டுமே சாத்தியமாகிறது. உடலுறவில் பெண்கள் ஆரம்பத்திலிருந்தே சுகத்தை இன்பத்தை அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள். ஆகவே, பெண்ணுறுப்பு புணர்ச்சியை ஆரம்பத்திலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக ஈரமாகும். ஆனால், ஆண் கடைசியில்தான் விந்தை வெளியேற்றுவதால் ஆணுக்கு உச்சக்கட்ட இன்பம் கிடைப்பது இறூதியில் என்றும் சொல்லப்படுகிறது. உச்சக்கட்ட இன்பமானது இறுதியில் என்றாலும் சாதாரண இன்பமும் சுகமும் ஆணுக்கு முதலில் இருந்தேகூடக் கிடைக்கும் எனக் கருத்துகளும் நிபுணர்களின் விவாதங்களில் இருக்கத்தான் செய்கின்றன.

Pregnant Woman

Pregnant Woman

Facebook

கர்ப்பம் தரிக்க என்ன தேவை?

பெண்ணுறுப்பில் ஆணுறுப்பு உரசுவதால் சுரப்பு ஏற்படுகிறது. மனம் அனுபவிக்கின்ற உணர்ச்சியின் விளைவால் இப்படிச் சுரக்காமல், உரசலால் மட்டுமே சுகம் கிடைத்து நீர்ச்சுரப்பும் ஏற்பட்டால், அந்த உறவால் அந்தப்பெண் கர்ப்பம் தரிப்பாள். பெண்ணுக்கு காம இச்சையில் உணர்ச்சிவசப்படும்போது நீர் சுரக்க ஆரம்பிக்கும். இப்படி நீர் சுரக்கும்போது உறவு கொண்டால் கர்ப்பம் தரிக்கும். பெண்ணுக்கும் முழுமையான இன்பம் கிடைத்தால்தான் கர்ப்பம் தரிக்கும் என்கிற நம்பிக்கை உடைந்து , சில ஆராய்ச்சிகள் மூலம் உச்சக்கட்ட இன்பத்துக்கும் சுகத்துக்கும் கர்ப்பத்துக்கும் தொடர்பு இல்லை என ஆராய்ச்சிகள் நிரூபித்தன. அப்போ, கர்ப்பம் தரிக்க என்ன தேவை? கர்ப்பத்துக்கு அடிப்படையான தேவை ஆணின் விந்தில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம். மேலும், அந்த நேரத்தில் சரியாகப் பெண்ணின் கருமுட்டைப் பையிலிருந்து முட்டை வெளியாவது.

காம உறவை பொறுத்தவரை திறமை, உணர்வு, பிணைப்பு போன்றவற்றில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆகவேதான், இருவருக்கும் கிடைக்கும் பலனும் வித்தியாசப்படுகிறது. இந்தத் திறமை, உணர்வு, பிணைப்பிலே உள்ள வித்தியாசம் ஆண்களோ பெண்களோ கற்றுகொண்டதில்லை. இதெல்லாம் இயற்கையாக வந்தது. காம உறவை பொறுத்தவரை ஆண் என்பவன் செயல்படுகிறான்; பெண் அதற்கு ஆதாரமாக இருக்கிறாள். இது இயற்கையின் நியதியாக உள்ளது.

Lust

Lust

Facebook

செயலில் யார்? ஆதாரமாக யார்?

ஆண்தான் இங்குச் செயலில் ஈடுபடுபவன். அதைச் செய்ய ஏதாவது ஒரு ஆதாரம் வேண்டும்? அந்த ஆதாரமாக பெண் இருக்கிறாள். ஆண் செய்யும் செயலின் பலனை, தானும் சேர்ந்து அனுபவிக்கிறாள் பெண். இப்படிப் புணர்ச்சியில் இருவரும் இணைய வேண்டும் என்றால் ஆணின் உறுப்பு நீளமான வடிவத்திலும் பெண்ணுறுப்பு அதை உள்வாங்கிக் கொள்ளும் அளவுக்கு ஆழமான வடிவத்திலும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் இணைய வசதியாக இருக்கும். இதற்குப் பொருத்தமான உடலியல் அமைப்பை இயற்கை உருவாக்கி இருக்கிறது. எனவே திறமை, உணர்வு, பிணைப்பு ஆகிய மூன்றோடும் உடலமைப்பிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் உள்ளது.

மனித இனத்தில் ஆணும் பெண்ணும் உடலமைப்பில் வெவ்வேறாக இருந்தாலும், அவர்களது இயல்புகள் ஒன்றுதான். அவர்கள் ஒருவர் மீது இன்னொருவர் அன்போடு இருக்கின்றனர். எனவே, காம உறவில் இருவரும் சமமான இன்பத்தையே அனுபவிக்கிறார்கள். உறவில், உடலமைப்பில் வித்தியாசம் இருந்தாலும் கிடைக்கும் சுகம் சமம். இதற்கான காரணம்? ஒரே காரியத்தில் ஈடுபடும் இரண்டு பேருக்கும் ஒரே மாதிரியான சமமான பலன்களே கிடைக்கும் என்பது உலக நியதி. எந்த செக்ஸ் சிறந்தது? எது சரியல்ல என்பதை அடுத்தப் பகுதியில் பார்க்கலாம்.

முந்தைய பகுதியைப் படிக்க

Sex

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காம இச்சை பெருகுவதை எப்படிக் கண்டுபிடிப்பது ?- பகுதி 14

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com