காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவு - சில வகைகள்! - இது ச்ச்சீசீ விஷயம் அல்ல| பகுதி 4

ஆண்களைப் போல உறுப்புகளை வைத்து பெண்களையும் வகைப்படுத்தலாம் என்று விளக்குகிறது காமச்சூத்திரம்… பெண்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். என்னென்ன வகைகள்?
Love,Lust and Pschology

Love,Lust and Pschology

Twitter

ஆண்களைப் போல உறுப்புகளை வைத்து பெண்களையும் வகைப்படுத்தலாம் என்று விளக்குகிறது காமச்சூத்திரம்… பெண்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். என்னென்ன வகைகள்?

முதல் வகையாக ‘ம்ருகி’ எனப்படும் பெண் மான் வகை. இரண்டாவதாக, ‘வடவா’ எனப்படும் பெண் குதிரை வகை. மூன்றாவதாக, ‘அஸ்தினி’ எனப்படும் பெண் யானை வகை. பெண்களின் பிறப்புறுப்பின் ஆழத்தை வைத்து இப்படி வகைப் பிரிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

Love,Lust and Pschology

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காமத்தில் நீங்க எந்த வகை? - பகுதி 2

Kamasutra Book

Kamasutra Book

Twitter

காமச்சூத்திர நூல்

முதல் சூத்திரத்தில் நீளம் எனச் சொல்வது விறைப்புத்தன்மை வந்த பிறகு இருக்கும் ஆணுறுப்பின் நீளத்தையே… இங்கு ஆழம் பற்றி சொல்வது, செக்ஸ் உணர்வு தூண்டப்பட்ட பிறகு பெண்ணுறுப்பு இருக்கும் ஆழத்தையே… ஒரே அளவான உறுப்புகளைக் கொண்ட ஆணும் பெண்ணும் உறவில் இணைவது ‘சமரதம்’ என்பார்கள். சமப் பிடிமானமுள்ள சேர்க்கை என்று சொல்வார்கள்.

பெண்ணுறுப்பின் அளவும் ஆணுறுப்பின் அளவும் ஒரேமாதிரி இருந்தால்தான் அவர்களுக்குள் ஏற்படும் உறவு சரியாக இருக்கும் என்கிறது காமச்சூத்திர நூல். சில உதாரணங்களை நூல் சுட்டிக்காட்டுகிறது.

Perfect Pair

Perfect Pair

Newssense

பொருத்தமான உடலுறவு அவசியம்

முயல் வகை ஆணும் பெண் மான் வகைப் பெண்ணும் இணைவது.

காளை வகை ஆணும் பெண் குதிரை வகைப் பெண்ணும் இணைவது.

குதிரை வகை ஆணும் பெண் யானை வகைப் பெண்ணும் இணைவது ஆகிய மூன்றுவித உறவுகள் சரியாக இருக்கும் என்கிறது நூல். இந்த மூன்று விதத்திலும் ஆணுறுப்பின் நீளமும் பரிமாணமும் பெண்ணுறுப்பின் ஆழத்துக்கும் அகலத்துக்கும் பொருத்தமானதாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இருவருடைய உறுப்புகளும் நன்கு உராய்வதும் இறுக்கமாக இணைவதும் இவ்விதச் சேர்க்கையில் சரியாக அமைகிறது. இவ்வித சேர்கையில் சேரும்போது உடலுறவில் இன்பம் அளிக்கும்.

Mouth Order

Mouth Order

Twitter

அந்தக் காலத்து 'மவுத் ஃப்ரஷ்னர்’

இல்லறம் இனிமையாக இருக்க வெறுமனே கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இருக்கும் அன்பு மட்டுமே போதாது. தேவையான அனைத்து கலைகளையும் இருவரும் கற்றிருக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது. பெண்களுக்கு ஏற்ற படுக்கை அறை இருப்பது முக்கியம் எனச் சொல்கிறது நூல். நல்ல சிற்பங்கள் செதுக்கப்பட்ட அழகிய பெரிய கட்டில் இருப்பது முக்கியம். அதன்மேல் படுக்கை போட்டு தூய்மையான வெந்நிற அல்லது அடர்நிறம் இல்லாத மைல்ட் நிற படுக்கையின் விரிப்பு இருத்தல் அவசியம். தலைப்பக்கமும் கால்பக்கமும் இதமான தலையணைகள் இருக்க வேண்டும். தலையணை உறைகள், படுக்கை விரிப்புகள் ஆகியன 2-3 நாட்களுக்கு ஒருமுறை மாற்றுதல் நல்லது. படுக்கை அறையில் ஊதுவத்தி, சாம்பிராணி போன்ற வாசனை திரவியங்கள் இருப்பது நல்லது. இக்காலத்துக்கு ரூம் ஸ்ப்ரே, எஸன்ஷியல் ஆயில்ஸ் நல்ல நறுமணங்களைக் கொடுக்கும்.

படுக்கை அறை சுத்தமாக இருந்தால்தான் தாம்பத்யத்தில் விருப்பம் வரும். அறைக்காற்று வெளியே செல்லவதற்கே வழி இல்லாத வெக்கையான சூழலில் படுக்கை அறை இருந்தால் தூக்கமும் தாம்பத்யமும் கொடுமையாகத்தான் இருக்கும். நல்ல ஹோட்டல்கள் இதற்குச் சிறந்த உதாரணம்… தாம்பத்ய உறவுக்கும் நல்ல தூக்கத்துக்கும் சூழல் அவ்வளவு முக்கியம். நறுமணம் தரும் பூக்கள், இயற்கையான செடிகள் படுக்கை அறையில் இருப்பது நல்லது.

இதுபோல செக்ஸில் தனி மனித சுத்தமும் அவசியம். துர்நாற்றம் இருந்தால் அடுத்தவருக்குச் சங்கடமாக இருக்கும். அதனால்தான் வாய் துர்நாற்றத்தைப் போக்க தாம்பூலம் தரிக்கச் சொல்லப்படுகிறது. லவங்கம் போட்டுகொள்ளச் சொல்கிறது காமச்சூத்திரம். இதுதான் ‘மவுத் ஃப்ரஷ்னர்’ அந்தக் காலத்துக்கு… இன்றைக்கும் இது பொருந்தும்தானே.

Cleanliness

Cleanliness

Twitter

தினமும் குளித்தல் நல்லது

கணவன் மனைவி இருவருமே தினமும் குளித்தல் நல்லது. அதுவும் இருமுறை குளித்தல் சிறந்தது. வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் ஏற்றது. வாரம் ஒருமுறை அந்தரங்க இடங்களில் உள்ள முடிகளை நீக்குவது. முடிந்தவரை அக்குள் இடங்களைக் காற்றோட்டமாக வைத்துக்கொள்வது. மூடி வைத்தால் வியர்வை வரும். துர்நாற்றம் வரும். என்னத்தான் இருவரும் மனமொத்த தம்பதிகளாக இருந்தாலும் அதிகபட்ச அன்பை பொழிந்து விரகத் தாபத்தோடு ஒருவரை ஒருவர் நெருங்கி நேசித்தாலும் உடல் துர்நாற்றமும் முடி குத்துவதும் போன்ற அவஸ்தைகள் இருந்தால் அவை செக்ஸ் தூண்டுதலுக்கு எதிராக இருக்கும். துர்நாற்றம் ஏற்படாமல் தடுப்பதும் செக்ஸூக்கு உதவியாக இருக்கும்.

Healthy Food

Healthy Food

Twitter

உடல் வலிமையாக இருக்க உணவு முக்கியம்

உடல் வலிமையாக இருக்க உணவு முக்கியம். என்ன சாப்பிடுவது? எப்படிச் சாப்பிடுவது? ஒவ்வொருவரின் வேலை, சூழ்நிலை பொறுத்து மாறுபடும். ஒரு நாளைக்கு எத்தனை வேளை சாப்பிடுவது? அதுவும் உடலுழைப்பு பொறுத்து மாறுப்படும். எந்த வேளை சாப்பிட்டாலும் பசித்த பிறகே சாப்பிட வேண்டும். பசிக்காமல் சாப்பிட கூடாது. மருத்துவ ரீதியாக இரவு உணவை சீக்கிரம் உண்ண வேண்டும். இதையே செக்ஸ் அறிவியலும் சொல்கிறது. படுக்கையில் தூங்க செல்வதாக இருந்தாலும் செக்ஸ் வைத்துக்கொள்வதாக இருந்தாலும் சாப்பிட்ட உணவு செரிமானமாகி வயிறு காலியாக இருக்க வேண்டுமாம். காரணம்… சாப்பிட்ட உணவு வயிற்றில் இருந்தால் அதைச் செரிக்கும் வேலைக்காக உடலில் இருக்கும் ரத்தத்தில் பெருமளவு வயிற்றை நோக்கி செல்லும். இந்த நேரத்தில் செக்ஸ் வைத்துக்கொண்டால் பிறப்பு உறுப்புக்கு போதுமான ரத்தம் ஓட்டம் இருக்காது.

பிறப்பு உறுப்புக்கு முறையான ரத்தம் ஓட்டம் இருந்தால்தான் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை ஏற்படும். பெண்களுக்குத் திரவக் கசிவு ஏற்படும். இருவருக்குமே விரகதாபம் முழுமையாக உண்டாகும். இதைப் புரிந்துக்கொள்ளாமல் பத்து மணிக்கு சாப்பிட்டுவிட்டு பத்தரைக்கு செக்ஸ் வைத்துக்கொண்டு ‘விறைப்புத்தன்மை வரவில்லை’ என மருத்துவரிடம் செல்பவர்கள் அதிகம்.

இதோடு சிலர் வயிறு முட்ட ‘ஃபுல் கட்டு’ கட்டுவார்கள். உணவு தொண்டைவரை இருக்கும் வரை சாப்பிட்டு விடுவார்கள். இது செரிக்கவே 3-4 மணி நேரம் ஆகும். இவர்கள் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு செக்ஸ் வைக்க முயற்சி செய்வார்கள். மூச்சு வாங்கும். சரியாக செக்ஸில் ஈடுபடவும் முடியாது. எனவே, இரவு உணவை சீக்கிரமாக முடித்துக்கொள்ள வேண்டும். உணவுக்குப் பிறகு 3 மணி நேரம் கழித்து செக்ஸ் வைத்துக்கொள்வதே சிறந்தது. மீண்டும் நாம் உறுப்புகள் தொடர்பானவற்றைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

உறவில் ஈடுபடும் ஆணுக்கும் பெண்ணுக்கும் புணர்ச்சி உறுப்புகள் பொருத்தமாக அமையாவிட்டால், அதைத் தவறான பொருத்தமாகச் சொல்கிறது காமச்சூத்திரம். இப்படிப்பட்ட வகைகளைப் பற்றி அடுத்தப் பகுதியில் பார்க்கலாம்.

(தொடரும்)

பகுதி மூன்றை படிக்க

Love,Lust and Pschology

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : 4 நிலைகளைக் கடப்பதே ‘செக்ஸ்’ - பகுதி 3

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com