காதல், காமம், கொஞ்சம் உளவியல் : 4 நிலைகளைக் கடப்பதே ‘செக்ஸ்’ - பகுதி 3

இயற்கை மூன்று விதமான உந்துதல், உணர்ச்சிகளைக் கொடுத்துள்ளது. பசி, தூக்கம், காமம். இந்த மூன்றும் இல்லாத மனிதன் இவ்வுலகில் இல்லை. இந்த மூன்றும் உரிய நேரங்களில் கிடைக்காமல் போனால் என்னவாகும்?
Sex

Sex

Twitter

இயற்கை மூன்று விதமான உந்துதல், உணர்ச்சிகளைக் கொடுத்துள்ளது. பசி, தூக்கம், காமம். இந்த மூன்றும் இல்லாத மனிதன் இவ்வுலகில் இல்லை. இந்த மூன்றும் உரிய நேரங்களில் கிடைக்காமல் போனால் என்னவாகும்? பாலுணர்ச்சியின் உந்துதலுக்கு ஒரு மனிதன் ஆட்படும்போது அவனுக்கு உரிய வடிகால் கிடைக்க வேண்டும். அப்படிக் கிடைக்காவிட்டால்? இதற்கான பதிலை நீண்ட ஆராய்ச்சிக்குப் பின், ஃபிராய்டு இருபதாம் நூற்றாண்டில் கண்டுபிடித்தார். ஆனால், 600 ஆண்டுகளுக்கு முன்பே வாத்ஸாயனர் இவ்வுலக்குக்குச் சொல்லியிருக்கிறார்.

Sex

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவும் மன உளைச்சலை தரலாம்! - 1

hysteria

hysteria

Facebook

மெக்கானிக்கல் வைப்ரேட்டர்

பசிக்கையில் சாப்பிடாவிட்டால் உடல் களைத்துப் போகுமோ, சோர்வடைகையில் தூங்காவிட்டால் எப்படி மன அவஸ்தையாக இருக்குமோ, அப்படி பாலுணர்ச்சியின் உந்துதலுக்கு ஆட்படும்போது சுகம் கிடைக்காவிட்டால் உடலும் மனசும் தளர்ந்து போகும். அவஸ்தையைத் தரும். சரியான வயதில் முறையாக செக்ஸ் கிடைக்காத பெண்களுக்கு ‘ஹிஸ்டீரியா’ எனப்படும் மனரீதியான பாதிப்புக்கு ஆளாகி, எதற்கெடுத்தாலும் எரிந்துவிழுந்து முரட்டுத்தனமாக நடந்துகொள்வர்.

‘ஹிஸ்டிரா’ என்றால் கிரேக்க வார்த்தைக்கு ‘கர்ப்பப்பை’ என்று பொருள். கர்ப்பப்பை தொடர்பான தொல்லைகள் வரும். செக்ஸ் இன்பம் முழுமையாகக் கிடைக்காததால், பெண்களுக்கு ‘மெக்கானிக்கல் வைப்ரேட்டர்’ கருவியைக் கண்டுபிடித்தார் மகப்பேறு மருத்துவர் ஜார்ஜ் டெய்லர். செயற்கையாக இன்பம் கிடைத்த பெண்களுக்கு ‘ஹிஸ்டீரியா’ குணமானது.

Mutual Sex Attraction

Mutual Sex Attraction

Facebook

செக்ஸ் ஆசையில் ஆண்,பெண் இருவருமே சமம்

ஆண், பெண் இருவருக்குமே முறையான செக்ஸ் இன்பம் கிடைப்பது அவரவரின் உரிமை. பெண்களுக்கு ஒன்றும் தெரியாது. வீட்டில் இருப்பவள் தானே… அப்படியே ஆபிஸ் போனாலும் வேலை, சமையல், பிள்ளைகள் வளர்ப்பு என பிஸியாகி இருப்பாள் என மேம்போக்காக நினைக்கவும் கூடாது. ஆணுக்கு இணையான பெண்ணுக்கு உணவு, தூக்கம், இருப்பிடம் எவ்வளவு அவசியமோ அந்தளவுக்கு செக்ஸ் இன்பமும் அவசியம். ஆண் எல்லாம் தெரிந்தவனாக இருக்க வேண்டும். பெண் ஒன்றும் அறியாதவளாக இருக்கணும் என்ற கருத்துச் சமூகத்தில் பரவி கிடக்கிறது. ஆண்தான் முதலில் எல்லா விஷயத்தையும் ஆரம்பிக்கணும்… பெண்கள் தொடங்க கூடாது. அப்படிப் பெண் செக்ஸுக்கு முதலில் ஆர்வம் காட்டினால் தவறான பார்வையும் பார்க்கும் ஆண்களும் உள்ளனர். பொதுவாகப் பெண் கொடுப்பவளாக, ஆண் பெறுபவனாகவே இருந்து வரும் அவலம் நீடித்து வருகிறது. வாழ்க்கையிலும் சரி செக்ஸிலும் சரி. இது மாற வேண்டும்.

Dont eat before sex

Dont eat before sex

Twitter

செக்ஸ் வைக்கும்போது வயிற்றில் உணவு இருக்கக் கூடாது

தற்போது நமக்கு இருக்கும் பொருளாதார நெருக்கடி, வாழ்வியல் கட்டமைப்பு ஆகியவை கொஞ்சம் சிக்கலான விஷயம்தான். ஆனால், உண்மை என்னெவெனில்… மனசு எப்போது உற்சாகமாக, உல்லாசமாக இருக்கிறதோ, அப்போதுதான் செக்ஸ் மீது ஆசை, ஆர்வம் வரும். அப்போது செக்ஸில் ஈடுபட்டால்தான் இருவருக்கும் உற்சாகமும் சந்தோஷமும் கிடைக்கும். இரண்டு பேரும் ரிலாக்ஸான மனநிலையில் இணையும்போதுதான் பரிபூரணமாக இன்பத்தை அடைய முடியும்.

ரிலாக்ஸான மனநிலைக்கு எப்படி வருவது? செக்ஸ் வைக்கும்போது வயிற்றில் உணவு இருக்கக் கூடாது. வயிற்றில் உணவும் அதைச் செரிக்கச் செரிமானமும் நடந்துகொண்டிருந்தால் சீரான உடலுறவும் அதன் சுகமும் பலனும் கிடைக்காமல் போகலாம். செக்ஸ் வைப்பதற்கு 2-3 மணி நேரம் முன்னரே உணவை உண்டிருப்பது முக்கியம். மேலும், மலச்சிக்கலும் வாயு பிரச்சனையும் இருந்தாலும் ஆண்களுக்கு விரைவில் விந்தணு வெளியேறும் பிரச்சனையும் இருக்கும். பெண்களுக்கு மலச்சிக்கல் இருந்தால், குழந்தைக்குத் திட்டமிடுபவளாக இருந்தால் கரு உருவாவதில் சிக்கல்களும் தாமதங்களும் உண்டாகும். மனசு எப்படி முக்கியமோ அதுபோல உடல்நலமும் செக்ஸூக்கு முக்கியம். குறிப்பாகக் குழந்தைக்குத் திட்டமிடுவோர் இவற்றை மனதில் கொள்வது நல்லது.

கழிவு நீக்கத்துக்கு செக்ஸூக்கும்தொடர்பு இருக்கிறதா? ஆம், கட்டாயமாக இருக்கிறது. கழிவுகள் முறையாக உடலில் நீங்காவிட்டால் செக்ஸ் தொடர்பானது மட்டுமல்ல மனத்தொந்தரவுகள் கூட வரும். செரிமானமும் வயிற்றுக்கும் எவ்வளவு நெருங்கிய தொடர்புண்டோ அதுபோல செக்ஸூக்கும் கழிவு நீக்கத்துக்கும் தொடர்பு உண்டு. செக்ஸூம் உணர்வு ஒருவித கழிவு நீக்கம்தான். நம் உடலின் தேவை, செக்ஸ். உடலின் ஒருவகைக் கழிவு, செக்ஸ். பாலுணர்வின் விருப்பம் இது.

Pre Mature Ejaculaton

Pre Mature Ejaculaton

Twitter

2 மினிட்ஸ் நூடுல்ஸ் தயாரிப்பு கதைதான்

கல்யாணம் ஆகி குழந்தைகள் இருக்கு, இனிமே எதுக்கு செக்ஸ் என முன்பெல்லாம் சில பெண்களும் சொல்ல கேட்டிருக்கிறோம். தற்போது ஆண்கள், ‘வயசாயிடுச்சேப்பா, நமக்கு எதுக்கு செக்ஸ்’ என்று கேட்பதாக, மனைவி வந்து புலம்புவதையும் பார்க்க முடிகிறது. ‘வயதானதும் செக்ஸைக் குறைக்க வேண்டும்’ என யார் சொன்னது? ‘உடல் ஒத்துழைத்து, ஆர்வம் இருப்பின் எண்பது வயதிலும் கணவன் மனைவி இருவரும் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

செக்ஸ் என்பது ஏதோ குழந்தை பெறுவதற்காக, உணர்ச்சிக்களைக் கொட்டி தீர்ப்பதற்காக மட்டுமான விஷயம் இல்லை. அது உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒரு பழக்கம். அந்த நெருக்கமான உறவின் மூலம் ஆணும் பெண்ணும் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வதுதான் சமூக நியதி.

செக்ஸில் ஆண்களைப் போலவே பெண்களும் பரவச நிலையை அனுபவிக்கிறார்கள். ஆண்களுக்கு விரைவாகப் பாலுணர்வு கிளர்ந்து எழுகிறது. ஆனால், பெண்களுக்கோ இந்தக் கிளர்ச்சி தாமதமாகவே வருகிறது. பல சந்தர்ப்பங்களில் பெண்கள் இப்படிக் கிளர்ச்சி அடைய தொடங்குவதற்குள் ஆண்கள் முடித்து விடுகின்றனர். இதனால், திருமணமான பெண்களில் நான்கில் ஒருவர் பல ஆண்டுகள் உறவுக்குப் பிறகு கூட, அந்த பரவசத்தை அனுபவித்ததில்லை. இதைக் கேலியாகச் சொன்னால், ‘2 மினிட்ஸ் நூடுல்ஸ் தயாரிப்பு கதைதான்’. பெரும்பாலான ஆண்கள் இப்படிப் பெண்களின் உணர்வுகளை மதிக்காததால் ஏற்படும் வெறுப்புதான் உடலுறவின் மீது பலருக்கும் ஆர்வமே இல்லாமல் செய்து விட முக்கியக் காரணம்.

Foreplay

Foreplay

Twitter

உணர்ச்சிவசப்படும் கட்டம்

அப்போ செக்ஸ் என்பது எப்படி இருக்க வேண்டும்? நான்கு நிலைகளைக் கடக்க வேண்டும். நேரம், நிமிடங்கள் எல்லாம் அவரவரின் மனம், உடல்நலம், சூழல், ஆர்வம், புரிதல், இருவரும் இருவரின் மேல் வைத்துள்ள மரியாதை, காதல், காமம் இறுதியாக இருவரும் திருப்தி அடைய வேண்டும் என்ற நோக்கத்தைப் பொறுத்தது… இருவரின் உணர்வுகளை மதித்து உடல் தேவையின் அவசியத்தைப் புரிந்து நடந்துகொள்வது… செக்ஸின் நேரத்தை அதிகரிக்கச் செய்யும். இதையெல்லாம் மனதில் வைத்து செயல்படுவது நல்லது. எனக்கு இப்போ செக்ஸ் தேவை என மெஷின் போல செய்தால், 2 மினிட்ஸ் நூடுல்ஸ் கதைக்கு முக்கியக் கதாபாத்திரமே நீங்கள்தான் என்பதை மறந்துவிடாதீங்க…

செக்ஸின் முதல் நிலை, ‘உணர்ச்சிவசப்படும் கட்டம்’ இதற்குக் கடந்த பகுதிகளில் பார்த்த முன்விளையாட்டுக்களும் தூண்டுதலும் முக்கியம். இதற்கு அடுத்தது, ‘இந்த உணர்ச்சியை அப்படியே நிலைநிறுத்தி வைக்கும் கட்டம்’. மூன்றாவது நிலையோ, உச்சக்கட்ட இன்பத்தை அடைவது, ஆண் மட்டுமல்ல பெண்ணும்தான். நான்காவது நிலை, ஓய்வெடுப்பது. இந்த நான்கு நிலைகளையும் கடப்பது முழுமையான செக்ஸ் இன்பத்தைத் தரும் என நிபுணர்களால் சொல்லப்படுகிறது.

Three types of Men

Three types of Men

Twitter

காமசூத்திரம் ஆண்களை எத்தனை வகையாக பிரிக்கிறது ?

பொதுவாக, ஆண்களுடைய பிறப்பு உறுப்பின் அளவை வைத்து, அவர்களை 3 வகைகளாகப் பிரிக்கிறது காமச்சூத்திரம். முயல் வகை, காளை வகை மற்றும் ஆண் குதிரை வகை என்று… இது ஆணுறுப்பைக் குறிக்கிறது. ஒருவருடைய ஆணுறுப்புச் சிறியதாக இருந்தால் அவர் முயல் வகை என்றும்… நடுத்தர அளவில் இருந்தால் அவரை காளை வகை என்றும்… நீளமாக இருந்தால் அவரைக் குதிரை வகை என்றும் பிரிக்கலாம்.

எதற்காக இப்படி வகைப் பிரிக்கின்றனர் என்பது விவாதத்துக்கு உரிய விஷயம். செக்ஸ் உறுப்புகளின் அளவுக்கு, நவீன செக்ஸ் அறிவியல் முக்கியத்துவம் தருவது இல்லை. ஒருவர் உறவு கொள்ளும் முறையையும் திறமையையும் பொறுத்தே அவர் சுகம் அனுபவிக்கிறார். ஆணுறுப்பின் நீளத்துக்கும் சுகத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்கிறது செக்ஸ் அறிவியல்.

இப்படி உறுப்புகளை வைத்து பெண்களையும் வகைப்படுத்தலாம் என்று விளக்குகிறது காமச்சூத்திரம்… பெண்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். என்னென்ன வகைகள்?

(-தொடரும்)

பகுதி இரண்டைப் படிக்க

Sex

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காமத்தில் நீங்க எந்த வகை? - பகுதி 2

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com