Back Pain : முதுகுவலி ஆரம்பமா.. தப்பிக்க என்ன வழி?

சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டால், இது போன்ற வலிகளைத் தவிர்க்கலாம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்போம்.ஆனால் சாதாரணமாக நாம் சாப்பிடும் உணவு வகைகளிலேயே நமது எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்து இருக்கிறது.
Back Pain
Back PainTwitter

முன்பெல்லாம் முதுகுவலி வயதானவர்களுக்கு வரும். ஆனால் தற்போது இளம் வயதினர்களுக்கு ஏற்படுகிறது. இன்றைய கால கட்டத்தில் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பது அதிக முதுகுவலியை உண்டாக்குகிறது. 80% இளம் வயதினர்கள் இந்த Back pain-யால் பாதிக்கப்படுகின்றனர்.

முதுகின் தசைகள் மற்றும் முதுகெலும்புகள் தான் நம் உடலின் எடையைப் பாதுகாக்க உதவுகிறது. உட்கார்வது, நடப்பது மற்றும் நிற்பது போன்ற அன்றாட இயக்கங்களுக்குத் தசைகளைப் பயன்படுத்துகின்றனர்.

உடம்பில் உள்ள அனைத்துத் தசைகளின் அழுத்தமும் முதுகுத் தண்டில் குவிவதால் இது போன்ற பிரச்னை ஏற்படுவதாக எலும்பு மூட்டு நிபுணர்கள் கூறுகின்றனர்.

முதுகு வலி வருவதற்கான காரணம்

பொதுவான உடலின் அசைவுகள் இல்லாமலும், உடற்பயிற்சி இல்லாமலும் இருப்பது தான் முதுகு வலி வருவதற்குக் காரணம். தற்போது அனைத்து டிஜிட்டல் மயமாகிவிட்டதால் மனிதர்கள் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்தபடி வேலை செய்ய வேண்டிய சூழல் உருவாகிவிட்டது.

மேலும் தினமும் இரு சக்கர வாகனங்களில் பயணித்தல், உடல் எடை கூடுதல் போன்ற சில காரணங்களால் உடல் தசைகள் பலவீனம் அடைவதோடு, முதுகெலும்புகளில் உள்ள 'டிஸ்க்’ அமைப்புகளிலும் அதீத அழுத்தமும் தேய்மானமும் ஏற்படுகிறது.

இதனால் தண்டுவட நரம்புகளும் அழுத்தப்பட்டு வலி ஏற்படுகிறது. தவிர, எலும்புகளில் ஏற்படும் சத்துக் குறைவுப் பாதிப்புகளாலும் முதுகு வலி வரும்.

Back Pain
அல்சர் : வயிற்றுப் புண்கள் யாருக்கு வராது? யாருக்கு வரும்? - தெரிந்து கொள்ள வேண்டியவை

முதுகு வலியிலிருந்து விடுபட என்ன செய்யலாம்?

சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டால், இது போன்ற வலிகளைத் தவிர்க்கலாம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்போம்.ஆனால் சாதாரணமாக நாம் சாப்பிடும் உணவு வகைகளிலேயே நமது எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்து இருக்கிறது.

முதுகு வலிக்காக தனியாக எந்த உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் உடற்பயிற்சி செய்வது தான் ஒரே வழி.

உடற்பயிற்சி செய்யும்போதுதான், எலும்புகள் தங்களுக்குத் தேவையான கால்சியத்தை உறிஞ்சும். நீச்சல், ஓட்டம், சைக்கிளிங் போன்ற எலும்பு மூட்டுகளுக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய ஏரோபிக்ஸ் (Aerobics Exercise) வகை உடற்பயிற்சிகள் நல்லது. இவை தவிர, உடலின் வளைவுத்தன்மைக்கு உதவும் யோகாவும் எலும்பின் ஆரோக்கியத்தை பாதுகாக்கச் சிறந்தது.

Back Pain
கல்லீரல் : உடலின் கெமிக்கல் தொழிற்சாலைக்கு ஆயிரம் நோய்கள் - எளிதான தீர்வு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com