கல்லீரல் : உடலின் கெமிக்கல் தொழிற்சாலைக்கு ஆயிரம் நோய்கள் - எளிதான தீர்வு!

உடலில் வடிகட்டியாக செயல்படும் கல்லீரலை ஆரோக்கியமாக பராமறிக்க வேண்டியது அவசியம். கல்லீரல் பிரச்னைகளிலிருந்து உடலைப் பாதுகாக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. ரிஸ்கான வேலையை செய்யும் கல்லீரலுக்கு ஆபத்துகளும் அதிகம். வரும் ஆபத்திலிருந்து கல்லீரலை எப்படிப் பாதுகாக்கலாம் எனக் காணலாம்!
கல்லீரல்
கல்லீரல்Twitter
Published on

வெளியே எப்படிக் கெமிக்கல் ஃபாக்டரி செயல்படுகிறதோ, உடலுக்குள்ளே கல்லீரல்தான் கெமிக்கல் ஃபாக்டரியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நச்சுக்களை நீக்குவது, வெளியே அனுப்புவது, கழிவுகளை நீக்கி சுத்தப்படுவது எனப் பல வேலைகளைக் கல்லீரல் செய்து கொண்டிருக்கும். வாழ்நாள் முழுக்க இந்த உறுப்புக்கு வேலைதான். மருந்துகள், உணவு ரசாயனங்கள், காய்கறிகளில் உள்ள ரசாயனங்கள், மற்ற கெமிக்கல்ஸ், புகை, குடிப்பழக்கம் போன்ற மோசமான கெமிக்கல்களையும் நீக்குவது கல்லீரல்தான்.

மாவுச் சத்து, கொழுப்பு, புரோட்டீன், விட்டமின், ஹார்மோன் ஆகியவற்றை உடம்பு பயன்படுத்துவதற்கு ஏற்றதுபோலச் சரியான முறையில் மாறுதல் அடையச் செய்து உடலுக்கு உதவி செய்வது, கல்லீரல். அதிகமான செரிமான பொருட்கள் இங்குதான் உற்பத்தியாகிறது. கரோட்டின், விட்டமின் ஏ ஆக மாறுவதற்கும் கல்லீரல் உதவி செய்யும். ரத்த உறவுக்கு உதவி செய்யும் புரோத்ராமின் விட்டமின் கே - வாக மாறுவதற்கும் கல்லீரலே உதவி செய்கிறது. மேலும், ஹார்மோன்களை வீரியம் அடையச் செய்வதும் கல்லீரலில்தான் நடைபெறுகிறது.

கல்லீரல்
கல்லீரல்Twitter

உணவு உண்ட பிறகு அதிலிருந்து எடுக்கப்பட்ட சத்துக்களைக் குடலிலிருந்து உறிஞ்சப்பட்டு ரத்தத்தின் மூலம் கல்லீரலுக்கு எடுத்து செல்லப்பட்டுச் சேமித்து வைக்கப்படுகிறது. உடலுக்குத் தேவையான போது, மீண்டும் பயன்படுத்த உதவி செய்யும். நாம் அன்றாடம் உணவு உண்ட பின் அதிக அளவு குளுகோஸோ, அமினோ அமிலங்களோ அதிகரித்து விடாமல் பார்த்துக் கொள்கிறது. உண்ட உணவு செறிப்பதற்குப் பல பொருட்களை உற்பத்தி செய்து கொடுக்கிறது.

ரத்தத்தில் உள்ள செல்கள் உடம்பில் உள்ள மற்ற செல்களைப் போலப் பிரிந்து பெருகுவது இல்லை. அது நம் உடலில் எலும்பின் உள்ளே காலியிடத்தில் நிரப்பப்பட்டிருக்கும் எலும்பு மஜ்ஜை என்ற பொருளால் ஒரு நிமிடத்துக்கு 140000 செல்கள் விகிதம் உருவாக்கப்படுகிறது. சில நாட்கள் உபயோகத்திற்குப் பிறகு அது அழிக்கப்பட்டுப் புதிய செல்கள் ரத்தத்தில் சேர வேண்டும். உபயோகப்படுத்தப்பட்ட அந்தப் பழைய செல்களை அழிக்கும் வேலையையும் ரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்களையும் நீக்கும். இன்னும் நிறைய நிறைய வேலைகளைக் கல்லீரல் செய்கிறது.

<div class="paragraphs"><p><em><strong>கல்லீரல்</strong></em></p></div>

கல்லீரல்

Facebook

பால், காபி, டீ வடிகட்டி போல, ‘கல்லீரல்’ உடம்பின் வடிகட்டியாகச் செயல்படுகிறது. நச்சுக்கள், பாக்டீரியாக்களை செயல் இழக்க செய்கிறது. இந்தச் செயலை இன்னும் வேகப்படுத்துவதற்காக உணவிலிருந்து கிடைக்கும் குளுகோஸை கிளைகோஹனாக மாற்றுகிறது. எனவே, குளுகோஸாலும் பழ சர்க்கரையாலும் நிரம்பப்பட்டிருக்கும். கல்லீரல் நோய்களைக் குணப்படுத்த வேண்டுமானாலும், முதலில் செய்ய வேண்டியது. ரசாயன மருந்துகளை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும் மேலும் கெமிக்கல்களை உடலில் சேர்க்க அனுமதிக்கக் கூடாது.

கல்லீரல்
கல்லீரல், குடலில் தேங்கியுள்ள கழிவுகளை நீக்கும் 4 பானங்கள்

அனைத்து கல்லீரல் நோய்களும் குணமாக…

ஹெபடைடிஸ் என்ற கல்லீரல் அலர்ஜி நோயை அதாவது மஞ்சள் காமாலையினால் பாதிக்கப்பட்ட பலருக்கு எந்த மருந்தை கொடுத்தும் பலன் கிடைக்காமல் தேன் மட்டுமே கொடுக்கப்பட்டது. எல்லோரும் குணமடைந்தார்கள் என டாக்டர் யோயேரிஷ் நிரூபித்தார்.

கல்லீரல் நோய்களுக்குத் தேன், எலுமிச்சைச்சாறு, ஆலிவ் எண்ணெய் நல்ல மருந்தாகச் செயல்படும்.

கீழாநெல்லி, மணத்தக்காளி இலை, பொற்றலை கரப்பான், தேன், அதிமதுரம் கலந்து கொடுத்தாலும் கல்லீரல் நோய் குணமாகும்.

கல்லீரல்
கல்லீரல் : ஆரோக்கியமாக்கும் உணவுகள் என்னென்ன தெரியுமா?

வெண்ணெய், கோதுமை கஞ்சி, பார்லி, ஆப்பிள் ஆகியவற்றைச் சாப்பிடும் போதெல்லாம் தேன் கலந்து சாப்பிடுங்கள். ஆப்பிள் - தேன் சாலட், பார்லி கஞ்சியின் தேன் ஊற்றிக் குடியுங்கள். அதேபோலக் கோதுமை கஞ்சியிலும்… வெண்ணெய்யுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.

கருந்துளசி, ஆட்டுப்பால், தேன் கலந்து குடிக்கக் கல்லீரல் நோய்கள் குணமாகும்.

சுக்குபொடியோடு தேன் கலந்து குடிக்க, ஈரல் நோய் குணமாகும்.

தக்காளி ஜூஸோடு தேன் கலந்து குடித்தாலும் கல்லீரல் நோய் சரியாகும். கல்லீரலும் ஆரோக்கியமாகும்.

கல்லீரல்
கல்லீரல் நோய்: இந்த அறிகுறிகளை கவனித்திருக்கிறீர்களா? | Nalam 360

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com