முட்டை பச்சையாக சாப்பிடுவது ஆண்களின் பாலியல் நலனுக்கு உதவுமா?

பச்சை முட்டையை சாப்பிடுவது அல்லது முட்டையை தேனுடன் சாப்பிடுவது பாலியல் நலனுக்கு பலனளிக்கும் என சிலர் நம்புகின்றனர்.
முட்டை பச்சையாக சாப்பிடுவது ஆண்களின் பாலியல் நலனுக்கு உதவுமா?
முட்டை பச்சையாக சாப்பிடுவது ஆண்களின் பாலியல் நலனுக்கு உதவுமா?Twitter

முட்டை சாப்பிடுவது பற்றி நமக்கு ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கின்றன. முட்டையை இரவில் சாப்பிடலாமா? ஒரு நாளுக்கு எத்தனை சாப்பிடலாம்?, தினமும் சாப்பிடலாமா? உடல் எடையைக் குறைக்க உதவுமா? இப்படி பல சந்தேகங்கள்.

முட்டை சாப்பிடுவது நம் ஆரோக்கியத்துக்கு நல்லது என நாம் அறிவோம். ஜிம்முக்கு செல்பவர்கள் டயட்டில் நிச்சயமாக முட்டை இடம்பெறும். ஆனால் இது பாலியல் ஆரோக்கியத்துக்கும் பலனளிக்குமா என்றும் பலருக்கு சந்தேகம் இருக்கிறது.

பச்சை முட்டையை சாப்பிடுவது அல்லது முட்டையை தேனுடன் சாப்பிடுவது பாலியல் நலனுக்கு பலனளிக்கும் என சிலர் நம்புகின்றனர். உண்மை என்ன என்று தெரிந்துகொள்ளலாம்!

முட்டை ஊட்டச்சத்துகள் நிறைந்தது. நாம் பொதுவாக சாப்பிடும் கோழி முட்டையில் புரதம், லிப்பிடுகள்(கொழுப்பு), கால்சியம், வைட்டமின்கள் ஏ, பி, சி, குளுசிட், இரும்பு மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற சத்துகள் இருக்கின்றன.

இந்த சத்துகள் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்குமேத் தவிர பாலியல் நலனில் உதவாது.

முட்டையை பச்சையாக சாப்பிடும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்திக்க வேண்டும் ஏனென்றால் முட்டை ஓடுகளில் சால்மோனெல்லா என்ற தீங்கு விளைவிக்கக் கூடிய பாக்டீரியா இருக்கிறது. இதனால் ஃபுட் பாயிசன் ஏற்படலாம்.

65 கிலோ எடைக்கு மேல் இருப்பவர்கள் பச்சை முட்டை சாப்பிடுவதை தவிர்க்கலாம். நோயெதிர்ப்பு சக்தியில் குறைபாடு இருப்பவர்கள், நீரிழிவு நோய், எச்.ஐ.வி அல்லது மெலனோமா வியாதிகள் இருப்பவர்கள் முட்டையை பச்சையாக சாப்பிடாமல் இருக்கலாம்.

முட்டையில் கொழுப்பு மற்றும் புரத சத்துகள் அதிகமாக இருப்பதனால் ஆண்கள் அதிகப்படியான முட்டையை உட்கொள்வது கேடுகளை விளைவிக்கும்.

முட்டை பச்சையாக சாப்பிடுவது ஆண்களின் பாலியல் நலனுக்கு உதவுமா?
அகோரிகள் இறந்த உடலுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வர்களா? - விரிவான தகவல்கள்

வாரத்துக்கு மூன்றுக்கு மேற்பட்ட முட்டை மஞ்சள் கரு சாப்பிடுவது அல்லது ஒரு நாளில் இரண்டுக்கு மேற்பட்ட மஞ்சள் கரு சாப்பிடுவது உடல் எடை அதிகரிப்பு, பக்கவாதம் மற்றும் இன்னும் சில பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம்.

குறிப்பாக உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் கொழுப்பு அதிகம் இருத்தல், உடல் பருமன் அல்லது இருதய நோய் இருப்பவர்கள் அதிகமான முட்டையை சாப்பிடவேக் கூடாது.

சமைத்த முட்டையில் இருக்கும் புரதசத்து எளிதாக செரிமானமடைந்துவிடும். ஆனால் பச்சை முட்டையில் இருக்கும் புரதம் சிலருக்கு செரிமானமாகாமல் இருக்கலாம். இதனால் வாயுத்தொல்லை ஏற்படும்.

முட்டை பச்சையாக சாப்பிடுவது ஆண்களின் பாலியல் நலனுக்கு உதவுமா?
Health: மீன், முட்டை, நட்ஸ் - மூளை நலனைக் காக்க எந்த உணவுகள் சிறந்தது?

அதிகப்படியான முட்டைக்கு பதிலாக வெங்காயம், முளைகட்டிய பயிறுகள், பாதாம், மற்றும் இறால், நண்டு, சிப்பிகள் மற்றும் கணவாய் போன்ற கடல் உணவுகளை உண்ணலாம்.

பாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படும் ஆண்கள் மது பழக்கத்தை கைவிடுவது நல்லது. தினசரி உடற்பயிற்சி செய்வதும் மன அழுத்தம் இல்லாமல் இருப்பதும் நல்லது.

முட்டை பச்சையாக சாப்பிடுவது ஆண்களின் பாலியல் நலனுக்கு உதவுமா?
குளிர்காலத்தில் முட்டை சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com