பூடான் டு மலேசியா: இங்கு சாதாரணமாக சிகரெட் பிடிக்க முடியாது - கடுமையான சட்டங்கள் என்ன?

உலக சுகாதார மையம் கூறுவதன் படி, ஆண்டுக்கு 6,00,000 பேர் புகைக்காமல் அருகில் இருப்பவர் வெளிப்படுத்தும் புகையினால் மரணிக்கின்றனர். புகைப்பிடிப்பதற்கு எதிராக கடுமையான சட்டங்களைக் கொண்டிருக்கும் நாடுகள் குறித்துப் பார்க்கலாம்.
பூடான் டு மலேசியா: இங்கு சாதாரணமாக சிகரெட் பிடிக்க முடியாது - கடுமையான சட்டங்கள் என்ன?
பூடான் டு மலேசியா: இங்கு சாதாரணமாக சிகரெட் பிடிக்க முடியாது - கடுமையான சட்டங்கள் என்ன?Twitter

புகைப்பிடிப்பது உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் பின்பற்றும் மோசமான பழக்கமாகும். ஆசிய நாடுகளில் ஆண்கள் அதிகமாக, பாலின பாகுபாடு இல்லாமல் சில இடங்களிலும் மக்கள் புகைப்பிடிக்கின்றனர்.

புகைப்பிடிப்பதனால் புற்றுநோய் வரும் என்பது உலகறிந்த விஷயம். சிகரெட் அட்டைகளில் கூட இது குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் அந்த பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கும் மக்கள் தொடர்ந்து புகைக்கின்றனர். 

புகைப்பிடிக்கும் பழக்கம் புகைப்பவர் மட்டுமின்றி அருகில் இருப்பவர்களையும் பாதிக்கிறது. உலக சுகாதார மையம் கூறுவதன் படி, ஆண்டுக்கு 6,00,000 பேர் புகைக்காமல் அருகில் இருப்பவர் வெளிப்படுத்தும் புகையினால் மரணிக்கின்றனர்.

புகையிலைக் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியன் விளைவாக ஸ்வீடனில் புகைபிடிப்பவர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. மொத்த மக்கள் தொகையில் 5 %க்கும் குறைவான மக்களே புகைக்கின்றனர்.

புகைப்பது ஒரு மோசமான விஷயம் என்பதை முழுமையாக ஏற்றுக்கொண்டு சில நாடுகள் அதற்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றியிருக்கின்றன.

சில நாடுகளில் புகைபிடிப்பது தடை செய்யக்கூடபட்டிருக்கிறது. அப்படி எந்தெந்த நாடுகளில் எந்தெந்த வரைமுறைகள் நடைமுறையில் இருக்கின்றன எனப் பார்க்கலாம்.

பூடான்

2004ம் ஆண்டு உலகின் முதல் நாடாக புகையிலை விற்பனையை தடை செய்தது பூடான். இருந்தும் கள்ளச்சந்தையில் வலம் வந்த புகையிலைக்கு எதிராக 2010ல் கடுமையான சட்டங்களை உருவாக்கியது.

புகையிலை தொடர்பான குற்றங்களில் சிக்குபவர்கள் ஜாமின் இல்லாமல் 3 முதல் 5 ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டனர்.

கோஸ்டா ரிக்கா

2012ம் ஆண்டில் புகைப்பிடிப்பதற்கு கராரான விதிமுறைகளை வகுத்தது கோஸ்டா ரிக்கா. டாக்சிகள், பேருந்துகள், ரயில்கள், பொது கட்டிடங்கள், பார்கள், கேசினோக்கள் மற்றும் பணியிடங்களில் புகைப்பிடிக்க தடை விதித்தது. 

பொதுமக்கள் அணுகக் கூடிய எந்த இடத்திலும் புகைப்பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இங்கு புகைப்பிடிப்பதற்கென தனியான அறைகள் அமைக்கவும் தடை விதிக்கப்பட்டது.

இந்த தடைக்கு பிறகு வியக்கத்தக்க வகையில் மக்களின் ஆரோக்கியம் முன்னேற்றம் கண்டதாக கூறப்படுகிறது.

பூடான் டு மலேசியா: இங்கு சாதாரணமாக சிகரெட் பிடிக்க முடியாது - கடுமையான சட்டங்கள் என்ன?
ஆஸ்திரியா முதல் பின்லாந்து வரை : உலகின் மகிழ்ச்சியான நாடுகள் எவை தெரியுமா?

கொலம்பியா

2009ம் ஆண்டு புகைப்பிடித்தலைக் கட்டுப்படுத்த விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. பொது இடங்கள் மற்றும் பணியிடங்களில் சிகரெட் பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

புகையிலை விளம்பரத்துக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.

பூடான் டு மலேசியா: இங்கு சாதாரணமாக சிகரெட் பிடிக்க முடியாது - கடுமையான சட்டங்கள் என்ன?
இந்தியா முதல் ஆஸ்திரேலியா வரை: உலகின் 5 அழகான நாடாளுமன்ற கட்டிடங்கள்

உருகுவே

உணவகங்கள், பார்கள், பணியிடங்கள் போன்ற பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்த முதல் தென்னமெரிக்க நாடு உருகுவே. 2004ம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்த முடிவு மிகவும் அவசியமானதாக கருதப்பட்டது.

2008 முதல் வீடுகளில், கார்களில் குழந்தைகள் முன்னிலையில் புகைப்பிடிப்பதை குறைக்க விழிப்புணர்வுகள் அதிகமாக செய்யப்பட்டு வருகின்றன.

பூடான் டு மலேசியா: இங்கு சாதாரணமாக சிகரெட் பிடிக்க முடியாது - கடுமையான சட்டங்கள் என்ன?
வட கொரியா கிம் ஜாங் நம் மரணம்: அதிபரின் அண்ணனுக்கு மலேசிய விமான நிலையத்தில் என்ன நடந்தது?

மலேசியா

மருத்துவமனைகள், விமான நிலையங்கள், பொது கழிப்பறைகள், அரசு வளாகங்கள், கஃபேக்கள் மற்றும் அரசு வளாகங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்துள்ளது மலேசிய அரசு. 

2010 முதல் தனியார் அலுவலகங்களில் ஏசி இருக்கும் போது புகைப்பிடிப்பவர்களுக்கு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டது. 

சமீபத்தில் ஆஸ்திரேலியா எதிர்கால சந்ததியினருக்காக புகைப்பிடிப்பதை தடை செய்தது.

பூடான் டு மலேசியா: இங்கு சாதாரணமாக சிகரெட் பிடிக்க முடியாது - கடுமையான சட்டங்கள் என்ன?
பின்லாந்து எனும் பூலோக சொர்க்கம் - உலகிலேயே மகிழ்ச்சியான நாடாக இருப்பது ஏன் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com