அதிகமாக உடலுறவு கொள்பவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்றும், தாம்பதிய உறவில் அதிகம் ஈடுபடும் தம்பதிகள் அன்னியோனியமாக இருக்கிறார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் மறுபுறம் இந்த உடலுறவில் ஈடுபடும் போது சிலர் மாரடைப்பு ஏற்பட்டு இறக்க நேரிடுகிறது.
இதற்கு என்ன காரணம், யாருக்கு உடலுறவின்போது மாரடைப்பு ஏற்படுகிறது என்பதை சமீபத்தில் நடந்த ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
சிடார்ஸ் சினாய் இதய கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர் சுமீத் மற்றும் அவரது குழுவினரும், கடந்த 2002 முதல் 2015 வரை மாரடைப்புக்கு உள்ளான இளைஞர்களின் மருத்துவ பதிவை ஆராய்ந்தனர்.
அதில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவானவர்களுக்கே உடலுறவினால் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இருதய நோய் இருந்தவர்கள், அல்லது நடுத்தர வயதினுடைய ஆண்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி,
மாரடைப்பு உடலுறவின் போது குறைவாகவே ஏற்படுகிறது. சுமார் 4500 மாரடைப்புகளை ஆராய்ந்ததில், 34 பேர் மட்டுமே கலவியின்போதும், உடலுறவுக்கு ஒரு மணி நேரத்துக்கு பிறகு மாரடைப்பால் பாதிப்படைகின்றனர். அதில் 32 பேர் ஆண்கள்.
முன்பே ஹார்ட் அட்டாக்கினால் பாதிக்கப்பட்டவர்கள், அல்லது இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் உடலுறவின்போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். இவர்கள் குறைந்தது ஆறு வாரங்களுக்கு உடலுறவு கொள்ளாமல் இருக்க பிரிட்டிஷ் இதய அறக்கட்டளை வலியுறுத்துகிறது.
இதனால் ஆரோக்கியமான உடல்நிலையில் மேற்கொள்ளும் உடலுறவு அபாயமற்றதாக இருக்கிறது என்று மகப்பேறு மற்றும் பாலியல் மருத்துவர் ஜெயராணி காமராஜ் தெரிவித்துள்ளார்.
இதை தவிர உடலுறவு பலருக்கு மன அழுத்ததை குறைக்க உதவுகிறது என்றும் மருத்துவர் ஜெயராணி குறிப்பிடுகிறார். நாள்தோறும் உடலுறவு கொள்ளும் தம்பதிகள் சண்டை சச்சரவுகள் மனக்கசப்புகள் இல்லாமல் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்றும் கூறுகிறார்.
இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், ரத்த அழுத்தம் சீராகும். குறிப்பிட்ட ஹார்மோன்கள் சுரப்பதால், இதயத் துடிப்பு நிலையாகி, சீராகி இதய பிரச்னைகள் குறையும். மேலும் உடலுறவு கொள்வதால் புத்துணர்ச்சி ஏற்பட்டு வயது முதிர்வை தள்ளிப்போடுகிறது. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் தூக்கமின்மை பிரச்னைக்கு உடலுறவு சிறந்த தீர்வாக இருக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust