அனகோண்டா வகை பெண் பாம்புகள் கலவி முடிந்ததும் தங்களின் ஆண் இணையை விழுங்கி விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மனிதர்கள் முதல் விலங்கினங்கள், பறவைகள், ஊர்வனங்கள் என அனைவருக்குமே பசி, தூக்கம் போன்று உடலுறவு என்ற செயல்பாடும் பொதுவானதாக இருக்கிறது. இதில் உடலுறவு என்ற செயல்பாடு ஒவ்வொரு உயிரினத்திடமும் மாறுபடுகிறது.
இதில் சில அதிர்ச்சியளிக்கும் வழக்கங்களையும் நாம் காணமுடிகிறது. அதில் ஒன்று தான் ஒரு உயிரினம், உடலுறவு முடிந்ததும் தன் இணையை சாப்பிடுவது!
அனகோண்டா வகை பாம்புகள் இந்த பட்டியலில் இடம்பெறுகின்றன. ஜீசஸ் ரிவாஸ் என்பவர் அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ ஹைலேண்ட்ஸ் பல்கலையில் பூச்சியியலாளர் ஆக இருக்கிறார்.
இவர் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சியில் ராட்சத அனகோண்டா பாம்புகளின் பாலியல் செயல்பாடுகளில் ஒரு அதிர்ச்சிகர தகவலை கண்டறிந்துள்ளார். இந்த வகை பெண் பாம்புகள், இனச்சேர்க்கைக்கு பிறகு உடலுறுவு வைத்துக்கொண்ட ஆண் பாம்புகளை நசுக்கி கொன்று விழுங்கிவிடும் என்பது தான் அந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பு.
இவரது ஆராய்ச்சியில் கண்டறியப்பட்ட தகவல்கள் என்ன என்பதை கீழே தெரிந்துகொள்ளலாம்
பொதுவாக எந்த ஒரு உயிரினத்திலும், ஆண்கள் உடலளவில் பெரியதாக இருப்பதை நாம் கவனித்திருப்போம். உடலுறவின்போதும் பெரும்பாலும் ஆண் வகைகளே ஆதிக்கமும் செலுத்துகின்றன.
ஆனால் அனகோண்டாவில் இது மாறுபடுகிறது. ஆண் அனகோண்டாக்களை விட பல இடங்களில் பெண்கள் உருவ அமைப்பு பெரியதாக இருக்கின்றன. இந்த பெண் பாம்புகள் ஆண்களை விட ஐந்து மடங்கு அளவில் பெரியதாக இருக்கின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் பெண்களே உடலுறவின் போதும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இனச்சேர்க்கை முடிந்த பின்னர் பெண் பாம்புகள் ஆண் பாம்புகளை நசுக்கி விழுங்கிவிடுகின்றன.
அனகோண்டா வகை பாம்புகளில் பெண் பாம்புகள் தான் முதலில் இனச்சேர்க்கைக்கு ஆர்வம் காட்டுவதாக ஆராய்ச்சி கூறுகிறது.
பெண் பாம்புகள் உறக்கநிலையில் இருந்து வெளியே வரும்போது, தோல் உறிக்கின்றன. இந்த சமயத்தில் அவற்றின் உடலில் இருந்து ஃபெரோமோன் என்ற ஹார்மோன் வெளியாகிறது. இதன் வாசனையை வைத்து ஆண் பாம்புகள் ஈர்க்கப்படுகின்றன. ஆண் பாம்புகள் இந்த வாடையை வைத்தே பெண் பாம்புகளின் அளவையும் கணித்துவிடுகின்றன.
பொதுவாகவே ஆண் பாம்புகள் அளவில் பெரிதாக இருக்கும் பெண் பாம்புகளையே தேர்ந்தும் எடுக்கின்றன. அதே சமயத்தில் ஒரு பெண் பாம்பு பல ஆண் பாம்புகளுடன் உடலுறவில் இருந்தாலும், பெரும்பாலும் ஆண் பாம்புகள் ஒரு பெண்ணிடம் மட்டுமே இனச்சேர்க்கை செய்வதாகவும் கண்டறிந்துள்ளனர்.
பெண் பாம்புகள் எல்லா சமயத்திலும் ஆண் பாம்புகளை உடலுறவுக்கு பிறகு விழுங்கும் என்பதை நாம் உறுதிப்படுத்தவில்லை என்று கூறுகிறார் ஆராய்ச்சியாளர். ஆனால் பெரும்பாலான சமயங்களில் இந்த செயல்பாடு காணப்படுகிறது.
அனகோண்டா பாம்புகளை தவிர, சிலந்திகள், ஆக்டோபஸ்களிலும் இனச்சேர்க்கைக்கு பிறகு துணையை விழுங்கும் செயல்பாடு காணப்படுகிறது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust