நாள் முழுவதும் கணினி பார்ப்பவர்களுக்கு Blue Light கண்ணாடி அவசியமா? - ஆய்வு சொல்வதென்ன?

மொபைல் அல்லது கம்பியூட்டரில் இருந்து வரும் நீலஒளி கண்ணில்படுவது நம் தூக்கத்தை பாதிக்கிறது. அதாவது நாம் மூளையில் தூங்குவதற்கு தேவையான மெலடோனின் என்ற ஹார்மோன் சுரப்பதை அதிகப்படியான நீலஒளி தடுக்கிறது. நீலஒளி தடுப்பு லென்ஸ் அணிவதால் தூக்கம் மேம்படுமா?
நாள் முழுவதும் கணினி, மொபைல் பார்ப்பவர்கள் Blue Light கண்ணாடி அவசியமா? - ஆய்வு சொல்வதென்ன?
நாள் முழுவதும் கணினி, மொபைல் பார்ப்பவர்கள் Blue Light கண்ணாடி அவசியமா? - ஆய்வு சொல்வதென்ன?Twitter
Published on

இன்றைய வாழ்க்கைமுறையில் நாம் அனைவருமே கம்பியூட்டர், லேப்டாப், மொபைல், டேப் என ஏதோ ஒரு வகையில் டிஜிட்டல் திரைகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதனால் நம் கண்கள் அயர்ச்சியாக காணப்படுவதுடன் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.

பொதுவில் இந்த கண்பிரச்னைக்கு தீர்வாக பலரும் ப்ளூ லைட் கண்ணாடிகளை முன்வைக்கின்றனர். இந்த கண்ணாடிகள் உண்மையாகவே நம் கண்ணின் பிரச்னைகளைத் தடுக்கிறதா என்பதை புதிய ஆய்வுகள் வெளிக்கொண்டுவந்துள்ளன.

ப்ளூ லைட் கண்களில் படும்போது ரெட்டினாவை பாதிக்கிறது என்றும் இது நம் பார்வைத் திறனைப் பாதிக்கும் என்றும் நம்பப்படுகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் இந்த ஊதா ஒளியைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.

"ஊதா நிறஒளி பகலில் நம் கவனத்தை அதிகரிக்கும். நம் மனநிலையை சீராக வைத்திருக்கும். ஆனால் இரவில் இடையூறு விளைவிப்பதாக இருக்கும்" என ஹாவர்ட் அறிக்கை கூறியிருக்கிறது.

நீலஒளிக் கண்ணாடியை அணியும் போது புற ஊதாக்கதிர்கள் மற்றும் யுவி லைட் கண்ணில் நேரடியாகபடாமல் பாதுகாக்கும். இதனால் நாம் நீண்ட நேரம் கம்பியூட்டர் பார்த்தாலும் குறைவான அளவே ஊதா ஒளி கண்ணில்படும்.

லண்டனில் உள்ள காக்ரேன் நூலகம் 156 நபர்கள் மீது 17 ஆய்வுகளை மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன் படி சாதாரண (Standerd) லென்ஸ்களை ஒப்பிடும் போது நீலஒளி லென்ஸ்கள் கண் அழுத்தத்தைக் குறைப்பதில்லை.

மொபைல் மற்றும் கண்ணாடியில் இருந்து வெளியாகும் நீல ஒளி குறைவு என்பதால் அதனைத் தடுப்பதன் மூலம் கண் அழுத்தத்தை குறைக்க முடியாது. ஆனால், ஒரு நாளைக்கு நான்கு மணி நேரத்துக்கு மேல் நாம் கணினியில் செலவழித்தால், கண் எரிச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது.

நாள் முழுவதும் கணினி, மொபைல் பார்ப்பவர்கள் Blue Light கண்ணாடி அவசியமா? - ஆய்வு சொல்வதென்ன?
மொபைல் ஃபோன்கள் தடைசெய்யப்பட்ட இடங்கள் பற்றி தெரியுமா?

மேலும் நீலஒளி கண்ணில்படுவது நம் தூக்கத்தை பாதிக்கிறது. அதாவது நாம் மூளையில் தூங்குவதற்கு தேவையான மெலடோனின் என்ற ஹார்மோன் சுரப்பதை அதிகப்படியான நீலஒளி தடுக்கிறது.

இந்த ஆய்வில் நீலஒளிக் கண்ணாடி பயன்படுத்துவதால் தூக்கம் சிலருக்கு மேம்பட்டிருக்கிறது. சிலருக்கு மாற்றம் எதுவும் இல்லை. நீலஒளியில் இருந்து வேறு எப்படித்தான் கண்களைப் பாதுகாப்பது எனக் கேட்பவர்களுக்கு சில அறிவுரைகளையும் ஆய்வில் கொடுத்திருக்கின்றனர்.

20-20-20விதி: ஒவ்வொரு 20 நிமிடம் கணினியில் வேலை செய்த பிறகு 20 வினாடிகள் கண்ணுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அந்த நேரத்தில் 20 மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு பொருளைப் பார்க்க வேண்டும்.

கண்ணை lubricate செய்ய நல்ல சொட்டுமருந்தை உபயோகிக்கலாம். கண் வறட்சியாக இருந்தால் தேவையில்லாத அழுத்தம் ஏற்படும்.

நாள் முழுவதும் கணினி, மொபைல் பார்ப்பவர்கள் Blue Light கண்ணாடி அவசியமா? - ஆய்வு சொல்வதென்ன?
சந்திரயான் 3: சைக்கிளில் தொடங்கி சந்திரன் வரை! இந்தியாவின் ’நிலவு’ பயணம் - ஒரு பார்வை

நல்ல தூக்கத்தைத் தவிர கண்களுக்கு சிறந்த நிவாரணி இருக்க முடியாது. தினசரி தவறாமல் 7-8 மணி நேரம் தூங்க வேண்டும்.

உங்கள் கணினியின் திரை உங்களிடம் இருந்து குறைந்தது 30 இன்ச் அதாவது 2.5 அடி தள்ளி வைக்க வேண்டும். மொபைலாக இருந்தால் 1.25 அடி தள்ளி வைக்கவும். கணினியின் திரை கண்ணின் மட்டத்துக்கு கீழே இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.

நாள் முழுவதும் கணினி, மொபைல் பார்ப்பவர்கள் Blue Light கண்ணாடி அவசியமா? - ஆய்வு சொல்வதென்ன?
கண்ணாடியை கழற்றி வைக்க உதவும் கண் பயிற்சிகள் : 60 + வயதிலும் கண்ணாடி அணிய தேவை இருக்காது!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com