சந்திரயான் 3: சைக்கிளில் தொடங்கி சந்திரன் வரை! இந்தியாவின் ’நிலவு’ பயணம் - ஒரு பார்வை

இந்தியாவின் இந்த சாதனையை கொண்டாடும் வேளையில், கொஞ்சம் பின்னோக்கி சென்று, சந்திரயானின் பயணத்தை தெரிந்துகொள்வோம்
சந்திரயான் 3: சைக்கிளில் தொடங்கி சந்திரன் வரை! இந்தியாவின் ’நிலவு’ பயணம் - ஒரு பார்வை
சந்திரயான் 3: சைக்கிளில் தொடங்கி சந்திரன் வரை! இந்தியாவின் ’நிலவு’ பயணம் - ஒரு பார்வைtwitter

சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்கியது

இதன் மூலம் நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற வரலாற்று சாதனை படைத்தது.

விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்டு, ப்ரக்யான் ரோவர் நிலவில் தனது ஆராய்ச்சிகளை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக நிலவின் சில புகைப்படங்களையும் வெளியிட்டது ரோவர்.

இந்தியாவின் இந்த சாதனையை கொண்டாடும் வேளையில், கொஞ்சம் பின்னோக்கி சென்று, சந்திரயானின் பயணத்தை தெரிந்துகொள்வோம்

சந்திராயன் என்றால் என்ன?

சந்திரயான் என்பது சமஸ்கிருத மற்றும் இந்தி மொழி வார்த்தையாகும். இதன் பொருள் நிலவு வாகனம் எனப்படுகிறது.

இந்தியா இதுவரை நிலவுக்கு மூன்று மிஷன்களை மேற்கொண்டுள்ளது. சந்திரயான் 1, 2, 3.

இதில் சந்திரயான் 2 மிஷன் மட்டும் எதிர்பார்த்த விளைவுகளை அளிக்கவில்லை. எனினும், சந்திரயான் 2 ஆர்பிட்டர் இன்னும் நிலவின் சுற்ருவட்ட பாதையில் செயலாற்றிக் கொண்டு தான் இருக்கிறது

சந்திரயான் 3: சைக்கிளில் தொடங்கி சந்திரன் வரை! இந்தியாவின் ’நிலவு’ பயணம் - ஒரு பார்வை
Chandrayaan 3: சரித்திரம் படைத்த இந்தியா - நிலவில் கால் பதித்தது விக்ரம் லேண்டர்

சந்திரயான் 1

நவம்பர் 2008ல் தொடங்கிய இந்த மிஷன், ஆகஸ்ட் 2009 வரை நீடித்தது. 2008 ஆகஸ்ட்டில் சந்திரயான் ஆர்பிட்டர் உடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இன்றுவரை அதன் மூலம் வேறு எந்த தகவலும் கிடைப்பதில்லை எனினும், ஆர்பிட்டர் நிலவின் பாதையை சுற்றி வருகிறது.

சுற்றுவட்ட பாதையை அடைந்த அதே மாதத்தில், மூன் இம்பாக்ட் ப்ரோப் (எம்ஐபி) ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து நிலவின் தென் துருவத்தில் மோதியது.

இதன் விளைவாக நிலவின் மணல்பரப்பில் சிறிய இடமாற்றம் ஏற்பட்டது எனலாம். இதுவே நிலவின் தரையின் அடியில் நீர் பனியைக் கண்டறிய வழிவகுத்தது. அதாவது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை உறுதிப்படுத்தியது

எம்ஐபி முடிவுகள் மற்றும் சந்திரயான் -1 இல் நாசா பேலோடுகளின் முடிவுகள் இரண்டும் இந்த கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்தின.

நிலவில் தண்ணீர் இருப்பதையும், சந்திரன் கடந்த காலத்தில் திரவ பாறையின் பந்து என்று கூறும் மாக்மா கடல் ஹைபாதீசிஸையும் இது உறுதிப்படுத்தியது.

தகவல் தொடர்பு ஆகஸ்ட் 2009ல் துண்டானப் பிறகு இந்த மிஷன் முடிவடைந்ததாக இஸ்ரோ தெரிவித்தது. 2016ஆம் ஆண்டு இந்த ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் உலவி வருவதை மீண்டும் கண்டறிந்தது இஸ்ரோ

சந்திரயான் 3: சைக்கிளில் தொடங்கி சந்திரன் வரை! இந்தியாவின் ’நிலவு’ பயணம் - ஒரு பார்வை
Chandrayaan 3: இஸ்ரோ மிஷனால் ஒன்றிணைந்த இந்தியா - இணையத்தில் குவியும் வாழ்த்துகள்

சந்திரயான் 2

ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய மூன்றையும் ஏந்திச் சென்றது சந்திரயான் 2 வாகனம்.

2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் சந்திரயான் 2 விண்ணில் பாய்ந்தது. இதன் லேண்டரை விக்ரம் எனவும், ரோவரை ப்ரக்யான் எனவும் அழைத்தனர்.

இந்த மிஷனின் முதன்மையான நோக்கமே, நிலவின் தரைப்பரப்பின் காம்போசிஷன் மற்றும் நீர் பனிகட்டிகள் குறித்து ஆய்வு செய்வதும் தான்.

ஆனால் இந்த விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு சற்று நேரம் முன்னர் செயலிழந்தது. குறிப்பிட்ட இலக்கிற்கு 750மீ தொலைவில் செயலிழந்தது விக்ரம் லேண்டர்

எனினும் மனந்தளராமல், அடுத்த மிஷனுக்கான பணிகளை மேற்கொள்ள தொடங்கினர் இஸ்ரோ விஞ்ஞானிகள்

சந்திரயான் 3

சந்திரயான் 2ஐ போலவே லேண்டர் விக்ரம், மற்றும் ரோவர் ப்ரக்யானை ஏந்திச் சென்றுள்ளது சந்திரயான் 3. இதில் ஆர்பிட்டர் இல்லை. அதற்கு மாற்றாக சந்திரனைச் சுற்றிவரும் மற்றும் பூமியின் வளிமண்டலத்தை ஆய்வு செய்யும் உந்துவிசை தொகுதி உள்ளது.

இந்த லேண்டர், நேற்று மாலை சரியாக 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.

நிலவின் சுற்றுச்சூழல் வாயுக்கள், பிளாஸ்மா மற்றும் அதன் மாறுபாடுகள், நிலவின் வெப்ப கடத்துத்திறன் மற்றும் மேற்பரப்பு வெப்பநிலை உள்ளிட்டவற்றை ஆராயவுள்ளது இந்த விண்கலம்.

இந்தியா சந்திரயான் 4 மூலம் ஜப்பானுடன் கைக்கோர்க்கவுள்ளதாக தி பிரிண்ட் தள அறிக்கை குறிப்பிடுகிறது.

2026ல் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் இந்த இரு நாட்டு விண்கலம், நிலவின் தரையில் துளையிட்டு, அதன் அடிப்பகுதியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவுள்ளது.

இஸ்ரோ தனது முதல் ராக்கெட்டை சைக்கிளிலும் மாட்டு வண்டியிலும் எடுத்துவந்தது. இன்று நிலவில் வாக்கிங் சென்றுகொண்டிருக்கிறோம்!

இந்த வளர்ச்சி நமக்கு பெருமை தானே?

சந்திரயான் 3: சைக்கிளில் தொடங்கி சந்திரன் வரை! இந்தியாவின் ’நிலவு’ பயணம் - ஒரு பார்வை
Chandrayaan 3: விண்ணில் பாய தயாராக இருக்கிறது சந்திரயான் 3 - விண்கலம் எப்போது புறப்படும்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com