டோலோ 650 ஊழல் : வழக்கறிஞர் சொன்ன பகீர் தகவல் - அதிர்ந்த நீதிபதிகள்

நீதிமன்றத்தில் டோலோ மாத்திரைகளை விற்க அந்த நிறுவனம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கு 1000 கோடி ரூபாய் வரை பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்தது எடுத்துரைக்கப்பட்டது.
டோலோ 650
டோலோ 650Twitter
Published on

மருத்துவ நிறுவனங்கள் தங்கள் மருந்துகளைப் பரிந்துரைக்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கு பணம் பரிசு, பொருட்களை வழங்கி வருகிறது. இந்த பரிசு பொருட்களுக்கு செலவழிக்கும் பணத்துக்கு மருத்துவ நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

அந்த வழக்கில் டோலோ 650 மாத்திரைகள் மேற்கோள்காட்டப்பது. டோலோ மாத்திரைகளை விற்க அந்த நிறுவனம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கு 1000 கோடி ரூபாய் வரை பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்தது எடுத்துரைக்கப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி டி.ஒய்.சந்திரசுத் மற்றும் ஏ.எஸ்.பொப்பன்னா இது "தீவிரமான விஷயம்" என்று கூறியதுடன் மத்திய அரசு 10 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.

நீதிபதி டி.ஒய்.சந்திரசுத் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த போதும் இந்த மாத்திரை பரிந்துரைக்கப் பட்டதாக கூறினார்.

இந்திய மருத்துவ மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் இந்த மனுவைத் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Dolo 650
Dolo 650Twitter

மனுதாரர் சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பரிக், "டோலோ மாத்திரைகளை தயாரிக்கும் நிறுவனம் மருத்துவர்கள் இந்த மாத்திரையை பரிந்துரைக்க 1000 கோடி முதலீடு செய்துள்ளனர். அதனால் மருத்துவர்களும் இதனை பரிந்துரை செய்கின்றனர்" என்று வாதாடினார்.

முன்னதாக மத்திய நேரடி வரி வாரியம் டோலோ தயாரிப்பு நிறுவனம் மற்றும் உரிமையாளர்கள் தொடர்பான இடங்களில் கடந்த மாதம் சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் நிறுவனம் முறையற்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. மேலும், வரிஏய்ப்பு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

டோலோ 650
கொரோனா : பாதிக்கப்பட்டது 4 பேர், அவதியில் 11 லட்சம் பேர் - இதுதான் சீனாவின் நிலை

"இந்த பிரச்னையால் அதிகமாக மருந்துகள் பயன்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், இது நோயாளிகளின் உடலை பாதிக்கக் கூடியது. இந்த ஊழல் சமூகத்தில் பகுத்தறிவில்லாமல் மாத்திரைகளை உபயோகிக்கும் போக்கையும் அதிகரிக்கும். மாருந்துகளின் விலை அதிகரிக்கவும் காரணமாக இருக்கும்" என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறையற்ற போக்கு கோவிட் காலத்தில் அதிகரித்ததாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தனியார் வசமிருக்கும் மருத்துவத் துறையில் மருந்து விற்பனை வெளிப்படைத் தன்மையுடனும் பொறுப்புணர்வுடன் நடைபெற வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கு செப்டம்பர் 29ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

டோலோ 650
குழந்தைகளின் லைஃப்ஸ்டைல் நோய்கள் முதல் தாய்மார்களின் புற்றுநோய் வரை தடுக்கும் ஒரு மருந்து!

மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு எவ்வித இலவசத்தையும் வழங்கக்கூடாது என இந்திய மருத்துவக் கழகம் கூறியுள்ள போதும் மருத்துவர்களுக்கு மருந்துகளை பரிந்துரைக்க பணம் கோடிக்கணக்கில் பணம் வழங்கப்பட்டு வருகிறது.

மருந்துகள் தயாரிப்பு தனியார் வசம் இருப்பதே இது போன்ற செயல்களுக்கு காரணமாக அமைகிறது. இதனால் சில மருத்துவர்கள் சேல்ஸ் மேன் வேலையும் செய்துவரும் சூழல் நிலவுகிறது.

மருத்துவர்கள் பணம் மட்டுமின்றி பரிசுப் பொருட்கள் வெளிநாட்டுச் சுற்றுலா என பல வழிகளில் மருந்து நிறுவனங்களால் கவனிக்கப்படுகின்றனர்.

மருத்துவர்கள் சொல்லும் மருந்துகளை எந்த கேள்வியும் இல்லாமல் மக்கள் எடுத்துக்கொள்வதுடன் சிலர் தாங்களே மருத்துவராக மாறி இந்த மாதிரியான மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர்.

டோலோ 650
கொரோனா கால துணைவன் டோலோ 650 : நிறுவனம் மீது ரெய்டு - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com