ஸ்நாக்ஸூக்காக தனி டைம்மா… இல்லை, நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஸ்நாக்ஸ் டைம் தான் என்றளவுக்கு நொறுக்குத் தீனி பழக்கம் அதிகரித்து வருகிறது. காரணம் ஸ்நாக்ஸில் உள்ள உப்பு, இனிப்பு, தன்மை மற்றும் அதன் சுவை… இந்தச் சுவைக்குக் காரணம், கண்களுக்குத் தெரியாத உப்புக்கள்தான்..
இவைத் திரும்பத் திரும்ப சாப்பிட வைக்கும் உணவு ரசாயனங்கள். லேபிளில் பல கெமிஸ்ட்ரி வார்த்தைகளிலும் சில ஆங்கில கோட்களாலும் நிரப்பப்பட்டிருக்கும். பாக்கெட் உணவுகளின் சுவைக்கு இந்த உப்புக்கள்தான் காரணம். தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு, சில பக்கவிளைவுகளைத் தரத்தான் செய்கிறது.
கொழுப்பு சேராமல், உடலுக்கு கெடுதி இல்லாத சில நொறுக்குத் தீனிகள் உள்ளன. அவற்றை இங்குப் பார்க்கலாம்.
வெண்ணெய் சேர்க்காத பாப்கார்ன் உடலில் கொழுப்பை சேர்க்காது. ஹெல்தி ஸ்நாக்காகவே இருக்கும். 5000 ஆண்டுகளுக்கு முன்னர் நியூ மெக்சிகோவில் இந்த பாப்கார்ன் கண்டுபிடிக்கப்பட்டது. விலை குறைவு காரணமாக, உலகெங்கிலும் பாப்கார்ன் பரவியது.
ஆனால், தியேட்டர்களில் விற்கப்படும் பாப்கார்ன் மட்டும், எப்பவுமே காஸ்ட்லிதான். அதிகச் சூட்டால் ‘பாப்ஸ்’ ஆகுவதால் பாப்கார்ன் எனப் பெயர் வந்தது. 387 கலோரிகள் கொண்டது. 5 கிராம் கொழுப்பு, 13 கிராம் புரோட்டீன், 78 கிராம் மாவுச்சத்து, 25 கிராம் நார்ச்சத்துக் கொண்டது.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. தற்போது சூப்பர் மார்க்கெட்டுகளில் கம்பு, திணை, கோதுமை பாப்கார்ன்களும் கிடைக்கின்றன.
தாமரை விதையை lotus seed (makhana) என்கிறார்கள். ஒரு கப் மக்கானாவில் 50% மாங்கனீஸ் சத்து உள்ளது. இது ஒரு மனிதருக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவு, இந்தச் சத்து மக்கானாவில் கிடைக்கிறது.
வளரும் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய உணவு என குழந்தை நல மருத்துவர்கள் சொல்கிறார்கள். மூளை வளர்ச்சிக்கு உதவும் ஒரு வகை உணவு.
முர்முரா, குர்முரா, முர்ரி, மராமராலு, பஃப்டு ரைஸ் எனப் பல ஊர்களிலும் இந்தப் பொரி பிரபலம். பேல்-பொரி, மசாலா பொரி எனச் சுவைப்பவர்களும் பொரிக்கான ரசிகர்களாக இருப்பார்கள்.
எண்ணெய் இல்லாத ஸ்நாக்ஸ் எனும் பட்டியலில் வருகிறது. 100 கிராம் பொரியில் 402 கலோரிகள் உள்ளன. நார்ச்சத்து உள்ளது. இவை எளிதில் செரிமானமாகும். எடை குறைய நினைப்போர், பொரியை ஸ்நாக்ஸாக சாப்பிடலாம். 90 கிராம் மாவுச்சத்து இருப்பதால், உடனடி எனர்ஜி கிடைக்கும்.
ஃப்ளாக்ஸ் விதைகள், சப்ஜா விதைகள், பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள், வெள்ளை, கருப்பு எள், சியா விதைகள் ஆகியவை சிறந்த ஸ்நாக்ஸ். வாரம் 3 முறை இந்த விதைகளை சாப்பிட்டாலே முடி வளர்ச்சி, சரும அழகு அதிகரிக்கும்.
கர்ப்பிணிகள், குழந்தைகள், சர்க்கரை நோயாளிகள் என அனைவருமே சாப்பிடலாம். ஸ்மூத்தியில் கலந்து, வெறும் விதைகளாக கூட சாப்பிடலாம். நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. எனர்ஜி பாராக, சத்து உருண்டைகளாகவும் செய்து சாப்பிடலாம்.
வறுத்த கடலைகளுக்குச் சுவை அதிகம். கலோரிகள் குறைவு. சாலட்டில், பொரியில் கூடக் கலந்து சாப்பிடலாம். வயிற்று மண்டலத்தைப் பாதுகாக்கும் சத்துக்கள் இதில் உள்ளன.
தலா 3 டேபிள் ஸ்பூன் வறுத்த பட்டாணி, மூக்கடலை, கடலை சாப்பிட ஒரு வேளை உணவுக்கு இணையானது. வெயிட் லாஸ் செய்வோருக்கு அடிக்கடி பசி வராமல் இந்த ஸ்நாக்ஸ் தடுக்கும்.ரத்த அழுத்த நோயாளிகளுக்கு நல்லது.
பொதுவாகப் பழங்களுக்கு, இனிப்பு சுவை இயற்கையாகவே இருக்கும். கூடுதலாக இந்தப் பழங்களுக்கு டிப்பாக பீநட் பட்டர் தொட்டு சாப்பிட ‘ஸ்வீட் டூத் கிரேவிங்’கை சமாளிக்கலாம். இனிப்பு விரும்பிகளுக்கு, சிறந்த சாய்ஸ் இது. ஆப்பிள் துண்டுகளும் பீநட் பட்டரும், அன்னாசிப் பழ துண்டுகளும் பீநள பட்டரும் சாப்பிட சுவையாக இருக்கும்.
6-7 பாதாம் பருப்புகளுடன் 2 பீஸ் டார்க் சாக்லேட் சேர்த்து சாப்பிடுவது, இதய நோய்கள் வராமல் தடுத்திட உதவும். சருமம், முடி, நகம் வளர்ச்சி சீராகும்.
பார்வைத் திறன் மேம்படும். நல்ல கொழுப்பு உடலில் சேரும். ஹேர் தின்னிங் எனப்படும் முன் நெற்றியில் முடி கொட்டுதல் தடுக்கப்படும். இவற்றைத் தேங்காய்ப் பாலுடன் கலந்து ஸ்மூத்தியாகவும் குடிக்கலாம்.
வெள்ளரி, கேரட்டை நீளவாக்கில் கட் செய்துகொள்ளவும். அதாவது ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் அளவுகளில்… அதில் லேசாக, உப்பு, மிளகுதூள், எலுமிச்சை சாறு சேர்க்கலாம். இதனுடன் டிப்பாக 10 முந்திரி, ஒரு மிளகு, ஒரு பல் பூண்டு சேர்த்து அரைத்து, இதை டிப்பாக தொட்டுச் சாப்பிடலாம் அல்லது சாலட்டில் கலந்துகொள்ளலாம். சுவை மிகுதியாக இருக்கும். எடையும் அதிகரிக்காது. உடலுக்கும் மிக நல்லது.
வாழைப்பழம் தேங்காய் துருவல், ஒரு பேரீச்சை கலந்து மிக்ஸியில் அரைக்கவும். இதைக் கப்பில் போட்டுக்கொள்ளவும், 50-70 கிராம் அவல் சேர்த்து மிக்ஸ் செய்து ஃபிரிட்ஜில் வைக்கலாம். மறுநாள் அதைக் காலை உணவாகவே சாப்பிடலாம். சுவையான ஹெல்தியான பிரேக்ஃபாஸ்ட் ரெடி. இதை மாலை நேர ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம். சீசன் சமயங்களில் மாம்பழம், பலா, கிர்ணி, ஆப்பிள் எனப் பழங்களை மாற்றிக் கொள்ளலாம். சுவையும் மாறும். ருசியாக இருக்கும். இது ஒரு ஹெல்தி சர்ட்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust