Power Naps என்பது என்ன? எப்போது குட்டி தூக்கம் போடலாம்? நன்மைகளும் மாற்றங்களும்

இந்த Power Napகளை நிமிடங்கள் கணக்கில் எடுத்துக்கொள்வது சிறந்தது. மணிக்கணக்கில் உறங்குவதால், நமக்கு கிடைக்கும் புத்துணர்ச்சியும் கிடைக்காமல் போகலாம்.
Power Naps என்பது என்ன? எப்போது பவர் நேப் எடுக்கலாம்? நன்மைகளும் மாற்றங்களும்
Power Naps என்பது என்ன? எப்போது பவர் நேப் எடுக்கலாம்? நன்மைகளும் மாற்றங்களும்canva
Published on

காலில் சுடுத் தண்ணி ஊத்திட்டு ஓடிட்டிருக்கேன், நிக்க கூட நேரமில்ல என்பது போல தான் இருக்கிறார்கள் இந்த காலத்தில் இளைஞர்கள். யாரைக் கேட்டாலும், தூங்கவில்லை, தூக்கம் வருவதில்லை, இன்சாம்னியா என்றளவுக்கு வந்துவிட்டது.

இந்த தூக்கமின்மையால், நமது உடல்நலம் நாளடைவில் குன்ற வழிவகுக்கும். இதனை சமாளிக்க தான் பவர் நேப் (Power Nap) நமக்கு தேவைப்படுகிறது.

இந்த பவர் நேப் என்பது என்ன? இதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?

Power Nap என்றால் என்ன?

Power Nap என்பது, நாளின் ஏதாவது ஒரு நேரத்தில் ஒரு குட்டித் தூக்கம் போடுவது. இது 5 நிமிடம், 10 நிமிடம், 15 நிமிடம் என்று நாம் தூங்கலாம். எங்கு இடம் கிடைக்கிறதோ, எப்போது நேரம் கிடைக்கிறதோ, கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தால், நாள் முழுவதும் ஏற்படும் சோர்வு இல்லாமல், புத்துணர்ச்சி பெறலாம்.

இந்த குட்டி தூக்கம் பெறுவதால் பல நன்மைகள் ஏற்படுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்

Power Nap-ன் நன்மைகள் என்ன?

இந்த பவர் நேப் எடுப்பதால் நமது நினைவாற்றல் மேம்படுவதாக கூறப்படுகிறது. நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும் நினைவுகள், நமது அறிவாற்றல், மற்றும் கிரியேட்டிவிட்டியை மேம்படுத்த உதவுகிறது.

மேலும் இவை நமது இதயத்தின் நலனை காக்கிறது. இதயம் தொடர்பான பிரச்னைகள், பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது.

ரத்த அழுத்தம் சமநிலையாகி, மன அழுத்தம், பயம், ஸ்ட்ரெஸ்

இந்த Power Napகளை நிமிடங்கள் கணக்கில் எடுத்துக்கொள்வது சிறந்தது. மணிக்கணக்கில் உறங்குவதால், நமக்கு கிடைக்கும் புத்துணர்ச்சியும் கிடைக்காமல் போகலாம்.

Power Naps என்பது என்ன? எப்போது பவர் நேப் எடுக்கலாம்? நன்மைகளும் மாற்றங்களும்
Health: இந்த வேர் காய்கறிகளை தினமும் சாப்பிட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

Power Nap-க்கு சிறந்த நேரம் எது?

வல்லுநர்களின் கூற்றுப்படி பவர் நேப் எடுக்க சிறந்த நேரம் என்ற ஒன்று இல்லை. நாளின் எந்த நேரத்திலும், நாம் பணியாற்றுகிறோம். அதற்கேற்றவாறு, நமது குட்டி தூக்கத்தை நாம் எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால், பகலில் வேலை செய்து இரவில் உறங்குபவர் நீங்கள் என்றால், மாலை 4 மணிக்கு முன்னர் தூங்கி எழுவது நல்லது. 4 மணிக்கு மேல் தூங்கும்போது இரவு தூக்கம் தடைபடுகிறது. இதனால் உடல்நலம் பாதிக்கலாம்.

Power Nap, Meditation - இரண்டும் ஒன்று தானா?

மனம் அமைதி பெற, நமக்கு இருக்கும் அலுப்பு குறைய நம்மை தியானம் செய்யச் சொல்லி சொல்லுவார்கள். இந்த பவர் நேப் எடுப்பதும் கிட்ட தட்ட அதே கணக்கு தான் என்றாலும் இரண்டும் வெவ்வேறு செயல்பாடுகள்.

தியானம் செய்யும்போது நாம் சுய நினைவில் இருக்கிறோம். ஆனால், Power Nap என்பது உறங்குவது. நம்மைச் சுற்றி உள்ள நிலையை மறந்துவிடுவோம்.

ஆனால் இந்த இரண்டையுமே ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால், உடல்நலத்தில் கணிசமான மாற்றங்களை நாம் கவனிக்கலாம்.

Power Naps என்பது என்ன? எப்போது பவர் நேப் எடுக்கலாம்? நன்மைகளும் மாற்றங்களும்
Health: சரியாக தூங்காமல் இருந்தால் என்ன ஆகும்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com