தேனுக்கான சட்டம்! Label பார்த்து ஏமாறாதீங்க | எந்த வகைத் தேன் என எப்படிக் கண்டுபிடிப்பது?

தேனில் வேறு எதாவது கலக்கப்பட்டாலோ அல்லது அதன் தன்மையில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டாலோ அது விற்கப்படும் புட்டிகளின் மேல் ‘தேன்’ என்ற வார்த்தையை மட்டும் தனியாகக் குறிப்பிடக் கூடாது என்ற சட்டமே உள்ளது.
தேன்

தேன்

Twitter

Published on

தேன் பாட்டிலில் பெயரும் இருக்காது. ஊரும் இருக்காது. இப்படித்தான் பல கடைகளில் தேனை விற்கிறார்கள். ஆனால், அது என்ன வகைத் தேன் என நமக்குத் தெரியாது. அதிக விலை கொடுத்து வாங்கி விடுவோம். தேனில் அவ்வளவு வகை இருக்கின்றன. அது தெரியாமல் நாம் இதுவரை பயன்படுத்துகிறோம். தேன் எப்படியெல்லாம் பிராசஸ் செய்யப்படுகிறது எனத் தெரிந்துகொள்ளுங்கள். நீங்க வாங்கும் தேன் எந்த வகை சேர்ந்தது என உங்களுக்குத் தெரியவேண்டுமல்லவா… அதிக விலை கொடுத்து வாங்கும் தேன் உங்களுக்குத் தேவையான பலன்களைக் கொடுக்க வேண்டும்தானே…

தேனில் வேறு எதாவது கலக்கப்பட்டாலோ அல்லது அதன் தன்மையில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டாலோ அது விற்கப்படும் புட்டிகளின் மேல் ‘தேன்’ என்ற வார்த்தையை மட்டும் தனியாகக் குறிப்பிடக் கூடாது என்ற சட்டமே உள்ளது.

தேன்

தேன்

Twitter

Mono Floral Honey

ஒரே விதமான மலர்களிலிருந்து சேமிக்கப்படும் தேன். இது கிடைப்பது அரிது. 75% ஒரே மலரிலிருந்து எடுக்கப்பட்டதுடன், 25% வேறு மலர்களிலிருந்து எடுக்கப்பட்ட தேனைக் கலப்பார்கள். இதில் 75% தேனைச் சுவைத்தால் எந்த மலர்த் தேனோ, அதை மோனோ ஃபோளரல் எனச் சொல்வார்கள்.

Floral Honey

பலவிதமான மலர்களிலிருந்து தேனீக்களால் எடுக்கப்படும் தேன்.

தேன்

வெளியே எடுத்த இதயத்தையே சீராக துடிக்க வைத்த ‘ஒரு உணவு’!

Non-Floral Honey

பூக்களிலிருந்து சேகரிக்கப்படாத தேன் இது.

ஒன்று, சர்க்கரைப்பாகு ஊட்டப்பட்டு விரைவு முறையில் எடுக்கப்படும் தேன்.

இரண்டாவது, சர்க்கரை பாகில் பால், முட்டை, கேரட் ஜூஸ், பழச்சாறு போன்றவை தேனீக்களுக்கு ஊட்டப்பட்டு உருவாக்கப்படும் தேன்.

பூச்சிகள் செடிகளின் மேல் வெளியாக்கும் கழிவான பனித்துளி போன்ற இனிப்புத் திரவச் சொட்டை தேனீக்கள் குடித்துவிட்டு உருவாக்கும் தேன். இது Honey dew என்பார்கள்.

தேன்

தேன்

Twitter

Comb Honey

அடையோடு உள்ள தேன். தேனீக்களின் அடைகளின் கீழே புழுக்களை வைத்திருக்கும். மேல் பகுதி தேனால் நிரம்பி இருக்கும். மேல் பகுதியை வெட்டி, சொட்ட சொட்ட அடையோடு புட்டியில் அடைக்கப்படும்.

தேன்

உங்கள் தினசரி உணவு பழக்கம் சரியானது தானா?

Raw Honey

சுத்திகரிக்கப்படாத தேன் இது. தேனில் ஈஸ்ட் என்ற காளான்கள் இருக்கும். இவை தேனைப் புளிக்கச் செய்யும். இதை அழிக்கத் தேனை 140-170 டிகிரி தண்ணீரிலோ சூடான காற்றிலோ வைத்து எடுப்பார்கள். இந்தச் செயல்பாட்டைச் செய்யப்படாத தேன் வகைதான் இது.

Blended Honey

பல நிறத்தில். பல மலர்களில். பல வாசனையுடைய பல தன்மைகளுடைய பல இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட பல முறைகளில் உருவாக்கப்படும் தேன்களை ஒன்றாகக் கலந்து தயாரிக்கப்படும் தேன். இதை ‘கலப்பு தேன்’ எனச் சொல்வார்கள்.

தேன்

தேன்

Twitter

Organic Honey

பல சத்துக்கள் கொண்ட தேன். தேனீக்களுக்கு விரைவு முறையில் சத்துள்ள பொருள்களை ஊட்டி எடுப்பது இல்லை. மாறாக, தேனில் கலக்கப்பட வேண்டிய சத்துக்களை மின்சாரச் சாதனங்கள் மூலம் தேனில் கலக்கச் செய்து தயாரிக்கிறார்கள்.

Filtered Honey

தேனில் கலந்துள்ள மகரந்த துகள்களை மட்டும் வடிகட்டி, நீக்கப்பட்ட தேன். இந்தத் தேனில் வைட்டமின் இருக்காது. மகரந்தத்தை நீக்கிவிடுவதால் வைட்டமின் இருக்காது. எந்த அளவுக்கு மகரந்தம் இருக்கிறதோ அந்த அளவுக்குத் தேனில் வைட்டமின்கள் இருக்கும். சிலருக்கு மகரந்த அலர்ஜி இருக்கும். அவர்களுக்கு இந்தத் தேன் பயன்படும்.

Strained Honey

மகரந்த துகள்களைத் தவிரத் தேனில் கலந்துள்ள மெழுகுகள், துகள்கள், பசை, தூசி, அழுக்கு ஆகியவை வடிகட்டி சுத்தப்படுத்தப்பட்ட தேனாகும்.

தேன்

தேன்

Twitter

Churned Honey / Creamed Honey / Whipped honey

இயற்கையிலே தேன் உறையும். ஏற்கெனவே உறைந்து படிகங்களாக மாறிய தேனைச் சுத்தமான தேனில் கலப்பார்கள். அது இன்னும் வேகமாக உறையும். இந்தத் தன்மையில் அது சர்க்கரையைப் போல நெய்யின் வழவழப்புத் தன்மையாக மாறும். அதை பிரட்டில் தடவிச் சாப்பிடுவார்கள்.

Deionized Honey

சில அயனிகளை மட்டும் நீக்கப்பட்ட தேன்

Deprotenized Honey

தேனில் உள்ள புரதங்களை மட்டும் நீக்கப்பட்டது

Dried Honey

உலர்த்தப்பட்ட தேன். தேனில் உள்ள நீர் அகற்றப்பட்டுக் கெட்டுப்போகாமல் இருக்கப் பல பொருட்கள் சேர்க்கப்பட்டுச் சிறிய கற்கண்டு துண்டுகளைப் போல் ஆக்கப்பட்டிருக்கும் துகள்கள்.

தேன்

உணவு மருத்துவம் : ஒவ்வொரு நோய்க்கும் ஒரு உணவால் தீர்வு !

Honey extract

தேனில் உள்ள நிறம், மணம் போன்றவை பிரித்து நீக்கப்பட்ட தேன்

Honey Spread

தடவும் தன்மையுள்ள தேன். தேனை நெய் போல உறைய வைத்து அதில் பழங்கள், பருப்புகள், நிறம், மணம் கலந்து தயாரிக்கப்படுவது.

Natural Honey flavor

தேனிலிருந்து எடுக்கப்பட்ட மணம் கொடுக்கும் பொருள்.

Ultrafiltered Sweetener honey

தேனில் உள்ள சர்க்கரைகளைத் தவிர வேறு எல்லாப் பொருட்களும் நீக்கப்பட்டுச் செய்யப்படுகின்ற தேன்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com