விந்தணுக்கள் குறைவது எதனால்? அதிகரிக்க என்ன செய்யலாம்? | Nalam 360

விந்தணுக்கள் உற்பத்தியாவது விந்துப்பையில்… ஒவ்வொரு ஆணுக்கும் இவை நடக்கும். ஆனால், சிலருக்கு எண்ணிக்கையில் குறைபாடு ஏற்படுகிறது. இரு முக்கியக் காரணங்கள் வாழ்வியல் பழக்கமும் உணவுப் பழக்கமும்.
ஸ்பெர்ம்
ஸ்பெர்ம்Twitter

ஆண்களின் முக்கியப் பிரச்சனையாகச் சொல்லப்படுவது விந்தணு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதுதான். ஏன் முன்பு போல இயற்கையாகக் குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி அவ்வளவு பிரச்சனைகள் உடலில்… இந்தப் பதிவில் ஆண்களுக்கான விந்தணுக்கள் குறைவது ஏன் என்பதைப் பார்க்கலாம். தீர்வுகளையும் பார்க்கலாம்.

விந்தணுக்கள் உற்பத்தியாவது விந்துப்பையில்… ஒவ்வொரு ஆணுக்கும் இவை நடக்கும். ஆனால், சிலருக்கு எண்ணிக்கையில் குறைபாடு ஏற்படுகிறது. இரு முக்கியக் காரணங்கள் வாழ்வியல் பழக்கமும் உணவுப் பழக்கமும்.

தொடர் கூட்டணி நோய்கள்

சிலருக்கு விந்து வீணாகுவதும் உண்டு. விந்து வீணாவதற்கும் விரைந்து வெளியேறுவதற்கும் மலச்சிக்கலும் அதன் வாயு அழுத்தமும் முக்கியக் காரணம். மலச்சிக்கல், வாயு பிரச்சனை, செரிமானக் குறைபாடு இது மூன்றும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது. கழிவுகள் சேர்வது பசியில்லாமல் சாப்பிடுவதால், பிறகு பசியில்லாமல் சாப்பிட்ட சாப்பாடு செரிமானக் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இப்போது இந்தச் செரிமானக் குறைபாடு உடலில் மலச்சிக்கலை ஏற்படுத்தும். எனவே மூலக்காரணம் ஒவ்வொரு வேளையும் பசியில்லாமலே சாப்பிடுவதுதான். பசிஎடுத்து சாப்பிட்டால் இந்த 3 தொடர் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். இதனால் விந்தணுக்கள் வீணாகாது.

Sperm
SpermTwitter

கொழுப்பு தவிர்க்க

உணவில் கொழுப்புச் சத்து அதிகம் இருந்தால், விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும் என ஆய்வுகள் சொல்கிறது. அமெரிக்காவில் கருவுறுதல் மருத்துவமனை ஒன்றில் 99 ஆண்களிடம் நடத்திய ஆய்வுகளில் நொறுக்குத்தீனிகள், துரித உணவுகள் (ஜங்க் ஃபுட்) அதிகம் சாப்பிடுபவர்களின், விந்தணுக்களின் தரம் பலவீனம் அடைகிறது எனக் கண்டறியப்பட்டது. மைதா உணவுகளால் செய்யப்பட்ட அனைத்து பேக்கரி மற்றும் இனிப்பு, கார உணவுகளால் விந்தணுக்கள் தரம் குறைகிறது. நாளடைவில் விந்தணுக்கள் எண்ணிக்கையும் குறைகிறது.

உடலில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போதுமான அளவில் இருப்பவர்களின் விந்தணுக்களின் தரம் சிறப்பாக இருக்கிறது. அனைத்து மீன்கள் மற்றும் காய்கறி, பழங்கள், நட்ஸ், விதைகளில் ஒமேகா-3 சத்துகள் அதிக அளவில் உள்ளது.

மேலே விவரித்த ஆய்வின்படி, கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகளான எண்ணெயில் பொரித்த உணவுகள், மைதா உணவுகள், இனிப்புகள், ரெடிமேட் உணவுகள், பதப்படுத்தியவை, பால், தயிர், வெண்ணெய், சீஸ், பனீர், சிக்கன் போன்ற அதிகக் கொழுப்புள்ள உணவு உட்கொள்பவர்களின் விந்தணுக்களின் தரம் 43 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது. ஒமேகா-3 சத்துகள் அதிகமாக உள்ள உணவுகளைச் சாப்பிடுபவர்களின் விந்தணுக்கள் அதிகத் தரமுள்ளதாக இருக்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) கருத்துப்படி, ஒரு மில்லிலிட்டர் விந்துவில், 1.5 முதல் 3.9 மில்லியன் அளவிலான விந்தணுக்களின் எண்ணிக்கை இருப்பது இயல்பானது. ஆனால், இந்த எண்ணிக்கையை மனதில் வைத்துக்கொண்டு அனைவரும் சிக்கிகொள்ள வேண்டாம். சரியான வாழ்வியலும் சரியான உணவுப் பழக்கமும் இருந்தால் அவரவரின் உடலுக்கு ஏற்ற தரமான விந்தணுக்கள் உருவாகும். கவலையைத் தவிர்க்கவும்.

உடல் சூடு குறைக்கலாம்

உடல் வெப்பமடைதல் ஒரு முக்கியக் காரணம். விந்தணுக்களின் தரம் குறையவும் எண்ணிக்கை குறையவும். மடியில் லேப்டாப் வைத்து ஒரு மணி நேரம் வேலை செய்தாலே விந்தணுக்களின் நீந்தும் தன்மை நீங்கி ஒரே இடத்தில் நகராமல் இருக்கும் பிரச்சனை வருகிறது. மடியில் லேப்டாப் வைத்து வேலை செய்வதைக் கட்டாயம் தவிர்க்கவும். இதுக்கு ஒரு எச்சரிக்கையாக ஒரு ஆய்வும் வெளிவந்தது. கடந்த 40 ஆண்டுகளில் வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் ஆண்களின் விந்தணுக்களின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இது நீடித்தால் பிரச்சனை அதிகமாகும். மேலும், ஆண்களுக்குக் கீழ் பாக்கெட்டில் செல்போன் வைக்கும் பழக்கமும் உண்டு. இதனாலும் விந்தணுக்களின் (மொபிலிட்டி) நகரும் தன்மை அழிக்கப்படுகிறது. நாளடைவில் பிரச்சனையும் அதிகமாகி விந்தணுக்கள் குறைகிறது. செல்போன், லேப் டாப் இவற்றை மடியிலோ பாக்கெட்டில் வைப்பதோ தவிர்க்கவும்.

ஸ்பெர்ம்
உடலுறவு : உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் எவ்வளவு தெரியுமா?
குளியல்
குளியல்Twitter

வெந்நீர் எதிரி

வெயில் காலத்தில் சில்லென்ற சாதாரணக் குழாய் தண்ணீரில் இருமுறை குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவும். பனிக்காலம், மழைக்காலத்தில் இளஞ்சூடான நீரில் குளிக்கவும். வெந்நீரில் குளிக்கவே கூடாது. இதனால் விந்தணுக்கள் அழியும் வாய்ப்பு மிக அதிகம். வெந்நீர் விந்தணுக்களின் எதிரி. உயிர்தன்மையைச் சிதைக்கும்.

இரவு தாமதமாகத் தூங்குவதால் உடல் தானாக வெப்பம் அதிகமாகும். இரவு 9 மணிக்கு தூங்கும் பழக்கத்துக்கு வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தலாம். உடலின் வெப்பநிலை சீராகும். விந்தணுக்கள் உற்பத்தியாகச் சீரான வெப்பநிலை உடலுக்கு மிக அவசியம். இரவு தூக்கம்தான் உடலை குளிர்ச்சியாக்கும். ஹார்மோன்களை சீராக வைக்கும்.

Sperm
SpermTwitter

ஆடை கவனம்

ஜீன்ஸ், மிக இறுக்கமான ஆடைகள், உள்ளாடைகளை அதிக நேரத்துக்கு அணிய வேண்டாம். சில மணி நேரங்களிலே கழற்றிவிடும் தருவாயில் மட்டும் இவற்றை பயன்படுத்துங்கள். மற்ற நேரங்களில் காட்டன், லினன் போன்ற காற்றுபோகும் வசதி உள்ள துணியால் செய்யப்பட்ட ஆடைகள் அணியும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.

குடி, சிகரெட், மற்ற புகையிலை பழக்கங்கள் இருப்பவர்களின் விந்தணுக்கள் அழியும். தரமும் மிக வேகமாக குறையும். 0 எண்ணிக்கைக்குக்கூட வரும். இவற்றைத் தவிர்ப்பது கட்டாயம்.

உடலுக்கு அசைவுகள் முக்கியம். ஆதலால் நடைபயிற்சி, யோகா, நீச்சல் என உங்களுக்குப் பிடித்த உடற்பயிற்சியைத் தினமும் 30-40 நிமிடங்கள் செய்திட விந்தணுக்கள் உற்பத்தியும் தரமும் உயரும். மற்ற தொந்தரவுகளும் நீங்கும்.

ஸ்பெர்ம்
ஆண்கள் உச்சக்கட்டத்தை அடைந்த பின் என்ன நிகழும்?

இயற்கை சிகிச்சை

அடிவயிற்றில் அதாவது தொப்புளுக்குக் கீழே தண்ணீரில் நனைத்த ஈரமான, கனமாகத் துண்டு அல்லது மடித்த வேட்டியை சுற்றிக் கட்டிக்கொள்ள வேண்டும். ஒரு மணி நேரம் வரை கட்டி இருக்க அடிவயிறு குளிர்ச்சியாகும். ஈரம் காய்ந்துவிட்டாலும் மீண்டும் ஈரப்படுத்தி நனைத்துக் கட்டிக் கொள்ளலாம். இதனால் வெப்பம் நீங்கும். உடல் குளிர்ச்சியாகும். உடலில் உயிர்தன்மை அதாவது விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். விந்தணுக்களை அதிகரிக்கச் செலவில்லாத இயற்கை சிகிச்சை இது.

பழங்கள்
பழங்கள்Pexels

உணவுகள்

காலை, இரவில் டிபன் சாப்பிடும் பழக்கத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். வாரம் 3 முறையாவது இயற்கை உணவுகளைக் காலையும் இரவும் சாப்பிடலாம். அதாவது பசித்தபிறகு சாப்பிடுவது. பசிக்காமல் சாப்பிடுவது அல்ல… தேங்காய், தேங்காய் பூ, அனைத்துப் பழங்கள், அவல், நட்ஸ், முளைக்கட்டிய தானியங்கள், கேரட், வெள்ளரிக்காய், நட்ஸ், விதைகளை உணவாக உட்கொண்டால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் மிக விரைவில் உயரும்.

ஸ்பெர்ம்
உடலுறவு : எந்த பொசிஷனில் உடலுறவு கொள்வது நல்லது? - Doctor Explains

துவரம் பருப்பு, கடலப்பருப்பு சாம்பார், கூட்டு, வடை, வடகறி மிகவும் குறைத்துக்கொள்ள வேண்டும். கீரையிலும் பருப்பு சேர்ப்பதைத் தவிர்க்கவும்.

நீர்க்காய்கள், வெள்ளைப்பூசணி, சுரை, புடல், பீர்க்கு, நாட்டு வெண்டை, சௌ சௌ, முள்ளங்கி, அனைத்து கீரைகளும் விந்தணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும். முருங்கை கீரை சிறப்பானது.

கம்பு, ராகி, சோளம், எள், நிலக்கடலை, மாப்பிள்ளை சம்பா, வரகு, குதிரைவாலி, திணை, கைக்குத்தல் அரிசியைச் சாப்பிடலாம்.

ஸ்பெர்ம்
தாய்மை அடைய சரியான வயது இது தான் - காரணமும் விளக்கமும் | Nalam 360

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com