அளவுக்கு அதிகமாக தூங்குகிறீர்களா? Hypersomniaவால் ஏற்படும் விளைவுகள் என்ன?

இந்த ஹைபர்சோம்னியாவால் ஏற்படும் விளைவுகள் என்ன? இந்த பதிவில்...
அளவுக்கு அதிகமாக தூங்குகிறீர்களா? Hypersomniaவால் ஏற்படும் விளைவுகள் என்ன?
அளவுக்கு அதிகமாக தூங்குகிறீர்களா? Hypersomniaவால் ஏற்படும் விளைவுகள் என்ன?canva
Published on

தூக்கம் நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிக அவசியமான செயல்பாடு. நம் வயதிற்கு ஏற்றவாறு இவ்வளவு மணி நேர உறக்கம் நமக்கு அவசியம். ஆனால் சில சமயங்களில் அந்த தூக்கம் என்பது தேவைக்கு அதிகமாக அல்லது, குறைவாகவே கிடைக்கிறது.

இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மை, ஹைப்பர்சோம்னியா எனப்படும் அதிகமான உறக்கம் இரண்டுமே இன்று நம்மில் பலருக்கு இருக்கிறது.

இந்த ஹைபர்சோம்னியாவால் ஏற்படும் விளைவுகள் என்ன? இந்த பதிவில்...

தலைவலி

அளவுக்கு அதிகமாக தூங்கினால், நமது மூளையில் இருக்கும் நியூரோடிரான்ஸ்மிட்டரின் அளவுகள் பாதிக்கப்படுகிறது. இதனால் அவ்வப்போது தலையில் வலி ஏற்பட்டு மறையும்

தூக்க சுழற்சியில் பாதிப்பு

இரவு உறங்கி 8 மணி நேரம் கழித்து விழிக்கிறோம். மீண்டும் உறங்கினால் நமது தினசரி தூக்க சுழற்சி பாதிப்படையலாம்.

பகலில் சிறிது நேரம் உறங்கினாலும் இரவு அந்த உறக்கம் வராமல் போகும். இதனால், இதனை சரி செய்ய நாம் பகலில் தூங்க வேண்டிய கட்டாயம் ஏற்படாலாம்,

இந்த சுழற்சிக்கு உடல் வசப்பட தொடங்கிவிடலாம்.

அளவுக்கு அதிகமாக தூங்குகிறீர்களா? Hypersomniaவால் ஏற்படும் விளைவுகள் என்ன?
உறங்கும் போது வாசனை தெரியாது, தும்மல் வராது: தூக்கம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

நீண்ட நாள் நோய்கள்

அதிகமாக தூங்கினால், க்ரானிக் டிசீஸ் எனப்படும் நீண்ட நாள் நோய்கள் ஏற்படலாம் என்று வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

குறைவான உடல் உழைப்பின் காரணமாக, அதிகமாக தூங்குவதால், உடல் பருமன் ஆகும் வாய்ப்புகள் அதிகம். இதனால், ஒபிசிட்டி, இருதய பிரச்சினைகள், நீரிழிவு நோய் போன்றவை ஏற்படலாம்

மூட் ஸ்விங்ஸ்

எப்படி தூக்கமின்மை நமது உணர்வுகளை பாதிக்கிறதோ, அப்படியே அதிக தூக்கமும் பாதிக்கும்.

மன உளைச்சல், எரிச்சல், பயம் போன்றவை அதிகமாக இருக்கும். மன நிலையில் அமைதி இருக்காது

அளவுக்கு அதிகமாக தூங்குகிறீர்களா? Hypersomniaவால் ஏற்படும் விளைவுகள் என்ன?
அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால் தீமைகள் ஏற்படுமா? - நிபுணர்கள் விளக்கம் என்ன?

தசைகளில் வலி

நீண்ட நேரத்திற்கு நாம் மெத்தையில் படுத்து இருப்பதால், நம் உடல் பாகங்களுக்கு, தேவையான அசைவுகள் கிடைப்பதில்லை.

இதனால் தசைகள் இறுகி, வலியை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருக்கிறது

மூளை செயல்பாடுகள் பாதிக்கும்

அதிகமாக உறங்குவதால் நமது கவன சக்தி குறைகிறது. இதனால், ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வைத்திருக்கும் திறன் பாதிப்படைந்து மூளை செயல்பாடுகள் மாறுபடுகின்றன.

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு தான். அளவாக சாப்பிட்டு, தேவையான நேரத்திற்கு உறங்கி, உடற்பயிற்சிகள் செய்து உடல்நலத்தை பேணிக்காக்கலாம்

அளவுக்கு அதிகமாக தூங்குகிறீர்களா? Hypersomniaவால் ஏற்படும் விளைவுகள் என்ன?
Power Naps என்பது என்ன? எப்போது குட்டி தூக்கம் போடலாம்? நன்மைகளும் மாற்றங்களும்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com