Depression : எதிர்காலத்தில் பக்கவாதம் ஏற்படுவதற்கான அறிகுறியா? - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்

பல அளவுருக்கள் மற்றும் பகுப்பாய்வுகளின் அடிப்படையில், மனச்சோர்வு என்பது பக்கவாதத்திற்குப் பிந்தைய நிகழ்வு மட்டுமல்ல, பக்கவாதத்திற்கு முந்தைய நிகழ்வும் ஆகும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
Depression : எதிர்காலத்தில் பக்கவாதம் ஏற்படுவதற்கான அறிகுறியா?
Depression : எதிர்காலத்தில் பக்கவாதம் ஏற்படுவதற்கான அறிகுறியா? NewsSense

பலர் நம்புவதற்கு மாறாக, பக்கவாதம் (ஸ்ட்ரோக்) வருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே மனச்சோர்வு அல்லது மன அழுத்த அறிகுறிகளைக் காணலாம் என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. மனச்சோர்வின் ஆரம்பம் பொதுவாகப் பக்கவாதத்தைத் தொடர்ந்து வரும் மக்களிடத்தில் காணப்படுகிறது.

பக்கவாதம் என்பது ஒருவரின் மருத்துவ ரீதியான அவசரநிலையைக் குறிக்கிறது. ஸ்ட்ரோக் அல்லது பக்கவாதம் என்பது மூளைக்குச் செல்லும் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால் உடலின் செயல்பாடு முடக்கப்படுவதைக் குறிக்கிறது. இதன் அறிகுறிகளில் நடப்பதற்குச் சிரமப்படுதல், முகம், கை, கால் முடக்கம் அல்லது உணர்வின்மை ஆகியவை அடங்கும். டிபிஏ (கிளாட் பஸ்டர் - ரத்த உடைப்புத் திறப்பி) போன்ற மருந்துகளுடன் ஆரம்பக்கால சிகிச்சை மூளையின் பாதிப்பைக் குறைக்கலாம்.

நான்கு பேரில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தில் உள்ளனர்

"பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனச்சோர்வு மிகவும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகும். மேலும் இது பக்கவாதத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு என்று குறிப்பிடப்படுகிறது" என்று ஜெர்மனியில் உள்ள மன்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட ஆய்வின் ஆசிரியர் மரியா ப்லோச்ல் கூறுகிறார். "ஆனால் எங்கள் ஆய்வில் பக்கவாதத்திற்குப் பிறகு மனச்சோர்வு அறிகுறிகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பது மட்டுமல்லாமல், பக்கவாதம் ஏற்படுவதற்கு முன்பே மக்கள் ஏற்கனவே சில மனச்சோர்வு அறிகுறிகளைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்துள்ளது." என்று மேலும் கூறுகிறார்.

ஆய்வில் என்ன கண்டுபிடிக்கப்பட்டது?

12 ஆண்டுகள் வரை பின்பற்றப்பட்ட இந்த ஆய்வில் 10,797 பெரியவர்கள் பங்கேற்றார்கள். பங்கேற்பாளர்களின் சராசரி வயது 65 ஆண்டுகள். ஆய்வின் போது மொத்தம் 425 பேருக்குப் பக்கவாதம் ஏற்பட்டது.

பல அளவுருக்கள் மற்றும் பகுப்பாய்வுகளின் அடிப்படையில், மனச்சோர்வு என்பது பக்கவாதத்திற்குப் பிந்தைய நிகழ்வு மட்டுமல்ல, பக்கவாதத்திற்கு முந்தைய நிகழ்வும் ஆகும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பங்கேற்பாளர்களை ஆய்வு எவ்வாறு பகுப்பாய்வு செய்தது?

பங்கேற்பாளர்கள் மனச்சோர்வு போன்ற மன அழுத்த அறிகுறிகளைப் பற்றி ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒரு கணக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அவர்கள் கூறியவை தனிமையாக உணர்கிறேன்; வருத்தமாக உணர்கிறேன்; எல்லாம் ஒரு முயற்சிக்கு பிறகுதான் நடக்கிறது; மற்றும் ஓய்வற்ற தூக்கம்.


பங்கேற்பாளர்களுக்கு அவர்கள் அனுபவித்த அறிகுறிகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டன. பங்கேற்பாளர்கள் அனுபவித்த அறிகுறிகள் அதிகம் இருந்தால் அதிக மதிப்பெண் கொடுக்கப்பட்டன.

Depression : எதிர்காலத்தில் பக்கவாதம் ஏற்படுவதற்கான அறிகுறியா?
Depression : இந்த செய்திகள் உங்களுக்கு மன உளைச்சலை தரலாம் - அதிர்ச்சி தரும் ஆய்வு

ஆய்வின் முடிவு என்ன?

பக்கவாதத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பங்கேற்பாளர்களின் மதிப்பெண்கள் சராசரியாக 0.33 புள்ளிகள் அதிகரித்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். பக்கவாதத்திற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, பக்கவாதம் வந்தவர்களின் மதிப்பெண்கள் பக்கவாதம் இல்லாதவர்களின் மதிப்பெண்களைப் போலவே இருந்தது.

பக்கவாதம் ஏற்படுவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு மனச்சோர்வின் அறிகுறிகளின் நிகழ்வு அதிகரித்திருப்பதை இது தெளிவாகக் காட்டுகிறது, இது இரண்டு உடல்நல நிலைமைகளுக்கு இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்துகிறது.

பக்கவாதத்தைத் தொடர்ந்து, மனச்சோர்வு அறிகுறிகள் அதிகரித்து, 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகமாக இருந்தன.

ஒரு போதும் பக்கவாதம் ஏற்படாதவர்கள், ஆய்வு முழுவதும் அவர்களின் மதிப்பெண்களில் ஒரு நிலைத் தன்மையைக் கொண்டிருந்தனர்.

மனச்சோர்வின் அறிகுறிகள் என்ன?

மனச்சோர்வு அறிகுறிகள் ஆரம்பத்தில் மிகவும் நுட்பமானவை. ஆரம்பக் கட்டங்களில், அவை ஒரு நபரின் வாழ்க்கையைப் பாதிக்காதபோது, ​​​​அவர்கள் அவற்றைக் கவனிக்காமல் விடுவது நடக்கும். இருப்பினும், இந்த அலட்சியம் மனச்சோர்வு வளர சரியான சூழலை அளிக்கிறது.

மன அழுத்தம்
மன அழுத்தம்Twitter

மனச்சோர்வின் அறிகுறிகள்


கவனம் செலுத்துவதில் சிக்கல், சோர்வு மற்றும் தீவிர சோர்வு, எந்த காரணமும் இல்லாமல் குற்ற உணர்வு அடைதல் மற்றும் நாம் பயனற்றவர்கள் என்று நினைப்பது, எதிர்மறை மற்றும் அவநம்பிக்கை, ஒழுங்கற்ற தூங்கும் பழக்கம், ஓய்வின்மை, முன்பு நீங்கள் விரும்பியதைச் செய்வதில் ஆர்வமின்மை, உணவுப் பழக்கத்தில் மாற்றம், வழக்கமான தலைவலி, குடல் தொடர்பான பிரச்சினைகள், வெறுமை உணர்வு போன்றவை மனச்சோர்வின் அறிகுறிகள்.

"பக்கவாதத்திற்கு முன்பு மனச்சோர்வின் அறிகுறிகள் அதிகரிப்பது நுட்பமாக நடக்கிறது. இவை பெரும்பாலும் மருத்துவ ரீதியாகக் கண்டறியப்படாமல் இருக்கலாம் என்று இந்த ஆய்வு அறிவுறுத்துகிறது. ஆனால் மனச்சோர்வு அறிகுறிகளில் சிறிதளவு அதிகரிப்பு கூட, குறிப்பாக மனநிலை மற்றும் சோர்வு தொடர்பான அறிகுறிகள், ஏற்படவிருக்கும் பக்கவாதத்தின் முக்கிய அறிகுறியாக இருக்கலாம்" என்று ஆராய்ச்சி ஆய்வின் ஆசிரியர் மரியா ப்லோச்ல் கூறினார்.

உலகளவில், ஆண்டுதோறும் 1.5 கோடி மக்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர்

Depression : எதிர்காலத்தில் பக்கவாதம் ஏற்படுவதற்கான அறிகுறியா?
திருடர்கள் சொன்ன வைத்தியத்தத்தால் குறைந்த தொற்று நோய் !

இரத்த விநியோகத்தில் தடங்கல் ஏற்படும் போது பக்கவாதம் அல்லது மூளைத் தாக்குதல் ஏற்படுகிறது. உலகளவில் இது இறப்புக்கான இரண்டாவது முக்கிய காரணியாகவும், உடல் முடக்கத்திற்கான மூன்றாவது முக்கிய காரணமாகவும் உள்ளது.

தென்கிழக்கு ஆசியாவிற்கான WHO உலக சுகாதார நிறுவனத்தின் பிராந்திய இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கருத்துப்படி, நான்கு பேரில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தில் உள்ளனர்.

FAST method எனப்படும் சிகிச்சை முறை முகத்தில் தொய்வு, கை பலவீனம், பேசுவதில் சிரமம் போன்றவற்றைப் பக்கவாதம் வந்த உடனேயே சரியான நேரத்தில் அவசரச் சேவையாக அளிப்பதன் மூலம், பக்கவாதத்தின் தாக்கத்தைக் குறைக்கும்.

Depression : எதிர்காலத்தில் பக்கவாதம் ஏற்படுவதற்கான அறிகுறியா?
Obesity : "டீ-யினால் உடல் எடையை குறைக்க முடியும்" - சித்த மருத்துவர் அமுதா | Herbal Tea

பக்கவாதத்திற்கான ஆபத்தான காரணிகள்

பக்கவாதத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக வாழ்க்கைமுறை உள்ளது. மருத்துவ ஆபத்து காரணிகளாக உயர் இரத்த அழுத்தம், உயர் கொழுப்பு, குடும்ப ரீதியாக நீரிழிவு மற்றும் பக்கவாதம் வந்த வரலாறு போன்றவை இருக்கின்றது.

பக்கவாதம் தொடர்பான அகால மரணங்களில் ஐந்தில் இரண்டு பங்கு புகைபிடிப்பதால் ஏற்படுகிறது.

உடற்பயிற்சி இல்லாமை அல்லது உடல் செயல்பாடு குறைவாக இருப்பது, அதிகப்படியான மது அருந்துதல், சட்டவிரோத மருந்துகள் மற்றும் பிற ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள் ஆகியவை பக்கவாதம் ஏற்படுவதற்குப் பங்களிக்கும். அதிக எடை மற்றும் உடல் பருமன் ஆகியவை பக்கவாதத்திற்கான சாத்தியமான ஆபத்து உள்ள காரணியாக இருக்கலாம்.

Depression : எதிர்காலத்தில் பக்கவாதம் ஏற்படுவதற்கான அறிகுறியா?
Depression - மன அழுத்தம் தப்பிப்பது எப்படி? | Nalam 360

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com