French Fries சாப்பிட்டால் Depression வருமா? ஆய்வறிக்கை கூறும் அதிர்ச்சி தகவல்

மன உளைச்சல், கவலை போன்ற பிரச்னைகளும், பொறிக்கப்பட்ட உணவுகளும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
French Fries சாப்பிட்டால் டிப்ரஷன் வருமா? ஆய்வறிக்கை கூறும் அதிர்ச்சி தகவல்
French Fries சாப்பிட்டால் டிப்ரஷன் வருமா? ஆய்வறிக்கை கூறும் அதிர்ச்சி தகவல்ட்விட்டர்
Published on

பிரபல துரித உணவான ஃபிரெஞ்சு ஃப்ரைஸ் அதிகமாக சாப்பிடுவதால், மன உளைச்சல், கவலை போன்ற பாதிப்புகள் ஏற்படும் என சீனாவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் ஹாங்சொவிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். தொடர்ந்து பொறிக்கப்பட்ட உணவுகள், குறிப்பாக பொறிக்கப்பட்ட உருளைக்கிழங்கை சாப்பிடுவது மனிதர்களுக்கு டிப்ரஷன் மற்றும் மனக்கவலையை அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் அறிக்கையானது Proceedings of the National Academy of Sciences of the United States of America என்கிற பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்தது.

தவிர இளம் வயதினர் அதிகமாக பொறிக்கப்பட்ட உணவை உட்கொள்வதால், மன ரீதியில் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், உடல் பருமன், ரத்தக் கொதிப்பு போன்ற உடல் ரீதியிலான பாதிப்புகள் ஏற்படுகிறது என அவர்கள் கூறியுள்ளனர்.

ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து கூறுகையில், இது முதற்கட்ட ஆராய்ச்சி தான் எனக் கூறியுள்ளனர். அதாவது மன உளைச்சல், கவலை போன்ற பிரச்னைகளும், பொறிக்கப்பட்ட உணவுகளும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால், மன உளைச்சல் இருப்பதால் மனிதர்கள் இப்படி பொறிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுகிறார்களா, அல்லது இவற்றை சாப்பிடுவதால் மன உளைச்சல் ஏற்படுகிறதா என்பதை அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகள் தெரிவிக்கும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

French Fries சாப்பிட்டால் டிப்ரஷன் வருமா? ஆய்வறிக்கை கூறும் அதிர்ச்சி தகவல்
"எப்போதும் தனிமையாக இருக்கிறது!" 24 வயது இளைஞர் இணையத்தில் பகிர்ந்த கதை வைரல்

இந்த ஆராய்ச்சி மொத்தம் 11.3 ஆண்டுகள் நடைபெற்றது. இதில் 140,728 பேர் உட்படுத்தப்பட்டனர். முதல் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, டிப்ரஷனால் பாதிக்கப்பட்டவர்களை தனியாக பிரித்தனர்.

அதில், கவலையால் (anxiety) பாதிக்கப்பட்ட 8,294 பேரும் டிப்ரஷனால் பாதிக்கப்பட்டிருந்த 12,735 பேரும் அதிகபடியாக பொறிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுபவர்களாக இருந்தனர்.

இதன் மூலம், அளவுக்கு அதிகமாக பொறிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுபவர்கள் அதிகமாக மன உளைச்சல் போன்ற மன ரீதியிலான பிரச்னைகள் ஏற்படுத்த வாய்ப்பிருப்பதை இது குறிக்கிறது என்றார் ஆராய்ச்சியை மேற்கொண்ட டாக்டர் டேவிட் கர்ட்ஸ்.

இது ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சுயமாக தங்களுடைய நிலைக்கு தீர்வு காணும் விதம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த கட்ட ஆராய்ச்சிகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை!

French Fries சாப்பிட்டால் டிப்ரஷன் வருமா? ஆய்வறிக்கை கூறும் அதிர்ச்சி தகவல்
தனிமையில் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.41 ஆயிரம் கொடுக்கும் நாடு - என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com