தென் கொரியாவை பொறுத்தவரை அங்கு சமூகத்தோடு சேர்ந்து வாழாமல் தனிமையில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
குறிப்பாக அந்நாட்டில் நிலவும் பணவீக்கம் காரணமாக பல இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாடுகின்றனர்.
அமைச்சகத்தின் அறிக்கையின்படி, 19 முதல் 39 வயதுக்குட்பட்ட தென் கொரியர்களில் தோராயமாக 3.1 சதவீதம் பேர் "தனிமையான இளைஞர்கள்" என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தனிமையில் இருக்கும் இளைஞர்கள் மனச்சோர்வு உள்ளிட்ட மனநலக் கஷ்டங்களால் பாதிக்கப்படலாம் என்ற உண்மையை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
இந்த சிக்கலை சரி செய்ய சமூகத்தில் இருந்து தனியாக இருக்கும் இளைஞர்களுக்கு ஆதரவாக தென் கொரிய அரசு ஒரு புதிய முயற்சியை அறிவித்துள்ளது.
தனிமையில் இருக்கும் இளைஞர்கள் சமூகத்தோடு ஒன்றிணைய சுமார் 650,000 கொரியன் வோன் அல்லது மாதத்திற்கு சுமார் $500 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.41 ஆயிரம்) வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த முயற்சியால் தனிமையில் தவிக்கும் இளைஞர்களின் உளவியல் மற்றும் ஆரோக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய முடியும் என்று நம்புகின்றனர்.
ஏற்கனவே அந்நாட்டின் சில நகரங்ககளில் இதே போன்ற ஆதரவு திட்டங்கள் உள்ளன.
தென் கொரியாவில் தற்கொலை அதிகரித்து கொண்டே போகும் சூழலில் உலகளவில் அதிகம் தற்கொலை செய்து கொண்டுள்ளவர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது தென்கொரியா. இது போன்ற விஷயங்களை தவிர்க்கவும் நாடு இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust