தழுவுதல் பற்றிய பள்ளியறைப் பாடத்தின் இயல்பே பரவசமானதுதான். இதைப் பற்றித் தெரியாமல் கேள்வி எழுப்புபவர்கள், மற்றவர்கள் சொல்லி அறிந்து கொள்பவர்கள், இதைப் பற்றிப் பேசுபவர்கள் என அனைவருக்குமே காம உறவில் ஈடுபட வேண்டும் என்ற ஆசையோ தூண்டுதலோ எழும். பேசுபவர்களுக்கே இப்படித் தோன்றினால், அனுபவிக்கிறவர்களுக்கு எவ்வளவு இன்பம் கிடைக்கும்? இதை வாத்ஸாயனர் சொல்லி இருக்கிறார்.
இதைப் பலர் கமர்ஷியலாக நீலப்படம் எடுத்துத் தொழில் வளர்ச்சியை அதிகப்படுத்துகின்றனர். பேசுவதும் கேட்பதும் சுகம் தரும் என்பதால், பார்ப்பதும் சுகம் தரும் என்ற நோக்கத்தில் நீலப்படங்கள் உருவாகின்றன. அந்தக் காலத்தில் இப்படியான தொழில்நுட்ப வளர்ச்சியோ அறிவியல் வளர்ச்சியோ இல்லாததால் காமசூத்திரத்தில் படம் பார்ப்பது பற்றி எதுவும் சொல்லவில்லை. இப்படியான படங்களை அந்தக் காலத்தில் யாரும் பார்க்க வாய்ப்பும் இல்லை. ஆனால், இந்தக் காலத்தில் வாய்ப்புகளும் கொட்டிகிடக்கின்றன. படங்களும் குவிந்து கிடக்கின்றன.
எந்த ஒரு பழக்கமும் தொடர்ந்து நீடித்தால் நிச்சயம் சலிப்பு வரத்தான் செய்யும். தினமும் பிரியாணி சாப்பிட்டால், ஒரு கட்டத்தில் போர் அடிக்கும். அலுப்பு தட்டும். அப்படி இயல்பான உங்களது துணையுடன் சேரும் செக்ஸ் வாழ்க்கை போர் அடிக்கும்போது, அலுக்கும்போது எப்போதாவது ஒருநாள் நீலப்படம் பார்ப்பது தவறில்லை. ஆனால், அதைப் பழக்கமாக மாற்றிக்கொண்டால் சிக்கல்தான். அளவுக்கு மிஞ்சும் போது பிரச்சனைகள் வரத்தானே செய்யும். அப்புறம் ஒருகட்டத்தில் இப்படிப் படங்கள் பார்ப்பதுமே சலிப்பு தட்டும். இதைக் கடந்து ஒன்னுமே இல்லையா என்ற கட்டத்துக்குத் தள்ளப்படலாம்.
தழுவுதலைத் தானே அனுபவித்தோ, சிலர் கற்பனையால் தானாக முயற்சி செய்தோ, வேறு எங்காவது கேள்விப்பட்டோ, புத்தகமோ, படங்களோ பார்த்தோ செயல்படும்போது அவர்களுக்கு இன்பம் கிடைக்கும். அனுபவத்தில் கடைப்பிடிக்கும் இந்தத் தழுவுதல் முறைகளை, காம உறவில் பயன்படுத்த இச்சையை அதிகரிக்கச் செய்ய உதவுகிறது. அறியாமையைப் போக்கக் கொஞ்சம் அறிவூட்ட காமச்சூத்திரம் உதவுகிறது.
நிறையப் பேர் காம உறவில் எப்படி இருந்தால் சரி? எந்த பொசிஷனில் இருந்தால் சரி? என்ன செய்தால் சரி? என்ற கேள்விகளோடே அலைகின்றனர். காம உறவை பொறுத்தவரை இந்த பொசிஷனில் இப்படிச் செய், அப்படிச் செய் எனச் சொல்லவிட முடியாது. மருத்துவர்கள்கூட இப்படிச் சொல்லித் தர முடியாது. மருத்துவர்கள் ஆலோசனைகளை மட்டுமே தருவார்கள். அன்பாகப் பேசு, தன் துணையைப் புரிந்து கொள், எல்லாம் ஒரே இரவில் நடந்துவிட வேண்டும் என்று நினைக்க வேண்டாம். எதையோ சாதித்துப் பெயர் வாங்கப் போகும் தவிப்பும் வேண்டாம். இயல்பாக இருக்கும் காம உறவே போதுமானது. நீங்கள் எதையோ படம் பார்த்தோ, புத்தகம் படித்துவிட்டோ அதை மனதில் வைத்துக்கொண்டு காம உறவில் ஈடுபடப் போனால், உங்களுக்கு இயல்பாக எழும் பரவச உணர்வுகள் மனதில் எழாமல் போய்விடலாம். பொசிஷனை சுற்றியே நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கலாம். அல்லது பொசிஷண் சுற்றியே மனம் இருக்கும். உங்களுக்கான இயல்பான உணர்வை நீங்கள் தவறவிடலாம்.
இதனால் சிலருக்குக் காம உறவில் ஈடுபடுகையில், பொசிஷன் சரியாக உள்ளதா என்ற சந்தேகம் எழும். இந்தச் சந்தேகத்தோடு காம உறவில் இணைந்தால் காம உறவு இன்பம் அளிக்காது. நீங்கள் எதிர்பார்க்கும் காம உறவு சாத்தியமாக்காமல் போகலாம். உணர்வுகளின் ஒருங்கிணைப்பு இல்லாமல் தவிக்கலாம். ஏதோ ஒரு விஷயத்தைப் பார்த்து அப்படியே காப்பி செய்வது என்பது காம உறவில் பொதுவாக வொர்க் அவுட் ஆகாது.
படமோ புத்தகமோ ஒருவருக்கு விபரம் தெரியாதபோது சொல்லிக் கொடுக்கலாம். காம இச்சை மிதமாக இருக்கும்வரை, புத்தகத்தில் சொல்வது படி நடப்பது சாத்தியமாக இருக்கலாம். ஆனால், காம இச்சை அதிகரித்து இன்பத்தில் மூழ்கிய பிறகு, படித்ததோ பார்த்ததோ மனதில் வைத்துக்கொண்டு இது சரியா, அது சரியா, இப்படிச் செய்யலாமா, அப்படிச் செய்யலாமா எனச் சந்தேகத்தில் ஈடுபடுவதில் அர்த்தமில்லாமல் போய்விடும். ஆணுக்கும் பெண்ணுக்குமான அந்தரங்க உறவை ‘ரதிசக்ரம்’ என அழகாகச் சொல்லியிருக்கிறார் வாத்ஸாயனர். காமசூத்திரத்தில் இவர் சொன்னவற்றை மேற்கத்திய செக்ஸ் அறிஞர்கள்கூடப் படித்திருக்கவில்லை.
ஆனாலும், மேற்கத்திய அறிஞர்கள் 1950களில் அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகளில் ஒரு உண்மையைக் கண்டுபிடித்துள்ளனர். செக்ஸ் செயல்பாடுகளில், செக்ஸ் செய்கையில் உடல் உறுப்புகளில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதுதான் அந்தக் கண்டுபிடிப்பு. அவர்கள் இந்த மாற்றங்களுக்குக் கொடுத்த பெயர், ‘உணர்ச்சி ஏற்கும் சுழற்சி’ என்பதுதான். அதாவது ஆங்கிலத்தில் ரெஸ்பான்ஸ் சைக்கிள். இந்தச் சுழற்சி நான்கு கட்டங்களாகப் பிரித்துச் சொல்லப்படுகிறதது. நான்கு கட்டங்களைக் கொண்டுள்ளது. முதலில் எக்ஸைட்மென்ட் எனும் உணர்ச்சிவசப்படுகின்ற நிலை. இரண்டாவதாக அந்தப் பரவச உணர்வு தொடரும் பிளாட்டூ என்கிற பீடபூமி நிலை. மூன்றாவதாக ஆர்கஸம் எனப்படுகின்ற உச்சக்கட்ட இன்பத்தை அடையும் நிலை. நான்காவது ஓய்வுநிலை. காம உறவில் இந்த நான்கும் நிகழும் என்பதை மேற்கத்திய அறிஞர்கள் சொல்கிறார்கள். இதைக் காமசூத்திரத்தில் சொல்லி இருக்கிறார்களா? அடுத்த பகுதியில்…
முந்தையப் பகுதியைப் படிக்க
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust