காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உறுப்பு அளவு, ஆழம் பற்றி நவீன அறிவியல் சொல்வது என்ன? - 5

பெண்ணுடைய உறுப்பு ஆழம் குறைவாக இருந்து, ஆணுறுப்பு ஓரளவுக்குப் பெரிதாக இருந்தால், அது உறவின்போது பெண்ணுறுப்பில் ஆழமாகச் செல்லும். இந்த உறவு சரியான பிடிமானத்தைத் தரும். இந்த வகை உறவு உயர்தரமாகச் சொல்லப்படுகிறது.
Sex

Sex

Facebook

முந்தைய பகுதியில் சரியான சேர்க்கையைப் பற்றிப் பார்த்தோம். இப்பகுதியில் உறவில் ஈடுபடும் ஆணுக்கும் பெண்ணுக்கும் புணர்ச்சி உறுப்புகள் பொருத்தமாக அமையாவிட்டால், அதைத் தவறான பொருத்தமாகச் சொல்கிறது காமச்சூத்திரம்.

காளை வகை ஆண், பெண் மான் வகைப் பெண்ணுடன் கொள்ளும் உறவு; குதிரை வகை ஆண், பெண் குதிரை வகைப் பெண்ணுடன் கொள்ளும் உறவு ஆகிய இரண்டிலும் இதற்கான சாத்தியம் இருக்கிறது. கெட்டியான பிடிமானம் கிடைக்கும். இந்த உறவுகள் உயர் தரமானவை. மேலும், குதிரை வகை ஆண், பெண் மான் வகைப் பெண்ணுடன் கொள்ளும் உறவையும் உயர்தரமானதாகச் சொல்லலாம். இதில் ஆணுறுப்பு பெரிதாகவும், அதோடு ஒப்பிடும்போது பெண்ணுறுப்பு மிகச் சிறியதாகவும் இருக்கும். இதிலும் கெட்டியான பிடிமானம் கிடைக்கும்.

Sex

Sex

Facebook

மேலே சொன்னவை இல்லாமல், மற்ற வகைகளில் நடக்கும் பிணைப்புகளில் ஆணுக்கோ பெண்ணுக்கோ முழு இன்பம் கிடைப்பதில்லை. தளர்ந்தப் பிடிப்பு கொண்ட இவை எல்லாமே குறைவான தரமுள்ள செக்ஸ் உறவுகள்.

செக்ஸ் உறவில் ஈடுபடும் இருவரில் ஆணுடைய உறுப்பு எப்போதுமே பெண்ணுறுப்பை விடப் பெரியதாக இருக்க வேண்டும். பெண்ணுறுப்பின் ஆழம் அதிகமாக இருந்து, ஆணுறுப்புச் சிறிதாக இருந்தால், அது அடி ஆழம் வரை ஊடுருவிச் செல்லாது. ஆண், பெண் இருவராலுமே இந்த வகை உறவுகளில் இன்பம் அனுபவிக்க முடியாது.

Sex

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவும் மன உளைச்சலை தரலாம்! - 1

பெண் யானை வகைப் பெண், முயல் வகை ஆணுடன் உறவு கொள்வதுதான், இருக்கும் அத்தனை பிணைப்புகளிலும் மிக மோசமான உறவு எனச் சொல்லப்படுகிறது. எத்தனை வகைகள் இருந்தாலும் பெண்ணுறுப்பு, ஆணுறுப்பு ஆகிய இரண்டும் சம அளவிலிருந்து, அவர்கள் செக்ஸ் உறவில் ஈடுபடும்போதுதான் முழுமையான இன்பம் கிடைக்கும். ஆண் - பெண் இணைப்புகளில் இதுவே சிறந்த இணைப்பாகச் சொல்லப்படுகிறது.

Lust

Lust

Twitter

பொதுவாக, “சமரதமே சிறந்தது. இதுதான் முதல் தரம். அதற்கு அடுத்ததாக, கெட்டிமானப் பிடிமானம் கொண்ட உறவுகள் பரவாயில்லை. இது இரண்டாவது தரம்.

தளர்ந்த பிடிப்பு உள்ள உறவுகளைத் தவிர்க்கலாம்” எனப்படுகிறது.

Sex

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காமத்தில் நீங்க எந்த வகை? - பகுதி 2

குதிரை வகை ஆண், பெண் மான் வகைப் பெண்ணுடன் கொள்ளும் உறவை உயர்தரமாகச் சொல்லப்பட்டாலும் பெண்ணில் உறுப்புச் சிறியதாக இருப்பதால் உறவின் போது வலி இருக்கும். சிலருக்கு வலி அதிகமாகவும் இருக்கலாம்.

பெண் யானை வகைப் பெண், முயல் வகை ஆணுடன் உறவுகொண்டால் அதில் இருவருக்குமே இன்பமும் சுகமும் கிடைக்காது. பெண்ணுறுப்பின் ஆழத்தில் பாதி அளவு கூட ஆணுறுப்பு இருக்காது. பெண்ணுறுப்பு அகலமாக இருந்து, ஆணுறுப்பின் பரிமாணம் குறைவாக இருப்பதால் பிடிமானம் கிடைக்காது. உராய்வில் மூலம் கிடைக்கும் இன்பமோ ஆழமான உறவால் கிடைக்கும் திருப்தியோ இருவருக்குமே கிடைக்காது.

Romance

Romance

Twitter

இவ்வகை உறவுகளில் ஒவ்வொன்றுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. எனினும், தளர்ந்த பிடிமானமுள்ள உறவுகளைவிடக் கெட்டியான பிடிமானமுள்ள உறவுகள் மேல்தரம். ஏனெனில் இதுவே இருவருக்கும் அதிக இன்பத்தைக் கொடுக்கும். திருப்தியைத் தரும். இந்த வகைகள், அளவு, ஆழம் எல்லாம் அந்தக்கால ஆசிரியர்களுக்குக் கிடைத்த அனுபவம், நூலில் படித்துத் தெரிந்துகொண்டவை. ஆனால், நவீன செக்ஸ் அறிவியல், உறுப்பின் அளவைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உறுப்பின் அளவைவிட, இருக்கும் உறுப்பை எப்படிப் பயன்படுத்துவது என்பதற்கே முக்கியத்துவம் தருகிறார்கள்.

Sex

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : 4 நிலைகளைக் கடப்பதே ‘செக்ஸ்’ - பகுதி 3

எங்கேயோ அரிதாகச் சிலருக்குப் பிறப்புக் கோளாறால், ‘மைக்ரோபெனிஸ்’ எனும் மிகச் சிறிய அளவிலான ஆணுறுப்பு என்ற குறைபாடு இருக்கலாம். இந்தக் குறைபாடு இல்லை என்பது உறுதியானால், எந்த ஆணும் தனது ஆணுறுப்பின் அளவு பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அப்படியும் இதுபோன்ற பழைய விஷயங்களை வைத்துக் குழம்பிக்கொள்ளத் தேவையில்லை என்கிறது நவீன அறிவியல்.

Condom

Condom

Twitter

நவீன அறிவியலும் சரி பழைய விஷயங்கள் நூல்களில் சொல்வது சரி. இந்த விஷயம் இரண்டு காலங்களிலுமே ஒரே விஷயமாகச் சொல்லப்படுகிறது. அது என்னவென்றால்? செக்ஸ் உறவில் தம்பதியருக்கு மத்தியில் திருப்தி இல்லாமல் போனால், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். முழுமையான திருப்தி கிடைக்காததால் எழும் தவிப்பு, அவர்களுக்கிடையே அன்பையும் நேசத்தையும் குறைக்கக்கூடும்.

Sex

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவு - சில வகைகள்! - இது ச்ச்சீசீ விஷயம் அல்ல| பகுதி 4

திருப்தி கிடைக்காத தம்பதியர் பலரும் கருத்து வேறுபாடு, உறவுகளில் சிக்கல், முரண்பாடுகள், புரிதலின்மை போன்ற இன்னும் பல காரணங்களுக்காக கோர்ட் வாசலில் நிற்கத்தான் செய்கின்றனர். திருப்தி கிடைக்கப் பெண், ஆண் இருவருமே ஒத்துழைத்தால்தான் அவை சாத்தியம் ஆகும். அதிலும், ஆண் அவசியம் ஆரோக்கியத்தை மேம்படுத்தித்தான் ஆக வேண்டும். ஆண்மையைப் பெருக்கும் உணவுகள், பயிற்சிகள் ஆகியவற்றை மேற்கொள்வது நல்லது. தங்களது வாழ்வியலையும் சரி செய்துகொள்வது சிறப்பு.

Lust

Lust

Facebook

ஆண்களுக்கான சிறந்த பயிற்சியாக நீச்சல் பயிற்சி, சொல்லப்படுகிறது. இதை ஆண்மையைப் பெருக்கும் உடற்பயிற்சி என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும் குடிப்பவர்களுக்கும் புகைபிடிப்பவர்களுக்கும் மற்ற புகையிலைத் தொடர்பான பழக்கத்தில் இருப்பவர்களுக்கும் உடலுறவில் சரியாக ஈடுபட முடியாத சிக்கல் வரும் என்கின்றனர் நிபுணர்கள்.

குழந்தைக்கு முயற்சி செய்வோராக இருந்தால், குழந்தையின்மையைப் பிரச்சனையைக் கொடுக்கும் என ஷேக்ஸ்பியர் முதல் மாத்ருபூதம் வரை சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

Sex

மரங்களிலிருந்து இவ்வளவு மருத்துவ பொருட்கள் தயாரிக்க முடியுமா ?

உடல் எடை அதிகரிப்பால், புதைந்துபோகும் ஆண் உறுப்பும் (Buried Penis), கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோயில் ஏற்படும் ஆண்மைக்குறைவும் மற்றும் குடி, புகையிலைப்பழக்கத்தாலும் (Erectile Dysfunction) சமீபத்தில் ஆண்களுக்கான பெரும் நோய்ச் சிக்கல்களாகச் சொல்லப்படுகின்றன. ஆனால், இதற்கெல்லாம் சிகிச்சைகள் உண்டு. செக்ஸாலஜிஸ்ட் நிபுணர்களைச் சந்தித்துச் சிகிச்சை பெற்றுக் குணமடையலாம். ஆனால், முக்கியமாக இவ்வித பழக்கங்களைக் கைவிட்டால் மட்டுமே சரியான செக்ஸ் உறவில் ஈடுபட முடியும். இல்லையெனில், ஆணால் பெண்ணுக்கும் அவஸ்தைதான். செக்ஸ் உறவில் கிடைக்க வேண்டியவை கிடைக்காமல் போவதால் உறவுகளில் சிக்கல் எழலாம். கவனம் தேவை!

Sex

திருடர்கள் சொன்ன வைத்தியத்தத்தால் குறைந்த தொற்று நோய் !

ஆணுக்கும் பெண்ணுக்கும் எழும் காம இச்சை இயற்கையானது, இயல்பானது. இது தீர்த்துக் கொள்ளவேண்டியவைதான். அந்த வேட்கையைப் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

(-தொடரும்)

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com