கின்னஸ் உலக சாதனை: 24 மணி நேரத்தில் 8000 'புல்-அப்ஸ்' - வியக்கவைத்த இளைஞர்

கடந்த 8 மாதங்களாக தனது உடலை கடுமையாக வருத்தியுள்ளார் ஜாக்சன். இந்த முயற்சியில் இரண்டு கின்னஸ் சாதனைகளை முறியடித்திருக்கிறார். இந்த கடுமையான உழைப்பின் மூலம் அவர் செய்த நன்மை மிகவும் பாராட்டுக்குரியது.
கின்னஸ் உலக சாதனை: 24 மணி நேரத்தில் 8000 'புல்-அப்ஸ்' - வியக்கவைத்த இளைஞர்
கின்னஸ் உலக சாதனை: 24 மணி நேரத்தில் 8000 'புல்-அப்ஸ்' - வியக்கவைத்த இளைஞர்Twitter
Published on

புல்அப்ஸ் மிகவும் பிரபலமான உடற்பயிற்சி முறையாகும். ஆனால் மிகவும் குறைந்த அளவு தான் உபயோகப்படுத்தப்படும்.

புல்அப்ஸ் செய்வதனால் உடற்கட்டுகள் செம்மையாகாது. மாறாக நம் தசைகள் சிறப்பாக இயங்கும். இதனால் புல்அப்ஸ் எப்போதும் அளவாகவே எடுத்துக்கொள்ளப்படும்.

ஆனால் அதிகபட்சமாக எத்தனை புல்அப்ஸ் எடுக்கலாம்? அல்லது எடுக்க முடியும்? தினசரி பயிற்சி இல்லாதவர்கள் 20 புல்அப்ஸ் எடுப்பதே மிகவும் சவாலானதாக இருக்கும்.

ஆனால் உடற்பயிற்சியாளராலும் கூட ஒரு நாளுக்கு 1000 புல்அப்ஸ் எடுக்க முடியுமா? ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உடற்பயிற்சி ஆர்வலர் 24 மணி நேரத்தில் 8008 புல்அப்ஸ் எடுத்துள்ளார்.

சிட்னியைச் சேர்ந்த ஜாக்சன் இத்தாலியானோ, டிமென்ஷியா ஆஸ்திரேலியா என்ற அறக்கட்டளைக்கு நன்கொடை திரட்டும் முயற்சியாக இந்த சாதனையை மேற்கொண்டார்.

அவர் 24 மணிநேரம் புல்அப்ஸ் எடுத்ததன் மூலம் கின்னஸ் சாதனையை முறியடித்திருக்கிறார்.

கின்னஸ் உலக சாதனை: 24 மணி நேரத்தில் 8000 'புல்-அப்ஸ்' - வியக்கவைத்த இளைஞர்
John Henry: இயந்திரத்தை விஞ்சும் வேகம்; கறுப்பின மக்களுக்காக உயிர் போக உழைத்த இவர் யார்?

அதுமட்டுமல்லாமல் வெற்றிகரமாக 6000 அமெரிக்க டாலர்கள் அதாவது 4.9 லட்சம் ரூபாய் நன்கொடையும் திரட்டியிருக்கிறார்.

முன்னதாக 24 மணிநேரத்தில் 7,715 புல்அப்ஸ் செய்தது உலக சாதனையாக இருந்திருக்கிறது.

கின்னஸ் உலக சாதனை: 24 மணி நேரத்தில் 8000 'புல்-அப்ஸ்' - வியக்கவைத்த இளைஞர்
ரெனே பர்ன்ஸ் : ஒரே ஆண்டில் 55 நாடுகள் சுற்றிய பெண் - அங்கீகரித்த கின்னஸ் சாதனைகள்!

இதனை முறியடிக்க 8 மாதங்கள் தனது உடலை சோதனை செய்துள்ளார் ஜாக்சன்.

இருந்தாலும் சோர்வு காரணமாக 24 மணிநேரத்தின் கடைசி 3.5 மணி நேரத்தில் அவர் ஒரு புல்அப்ஸ் கூட எடுக்கவில்லை.

ஆனால் 12 மணிநேரத்தில் 5,900 புல்அப்ஸ் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

கின்னஸ் உலக சாதனை: 24 மணி நேரத்தில் 8000 'புல்-அப்ஸ்' - வியக்கவைத்த இளைஞர்
கின்னஸ் உலக சாதனை : வெறும் 4 மாத கர்ப்பத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் - எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com