John Henry: இயந்திரத்தை விஞ்சும் வேகம்; கறுப்பின மக்களுக்காக உயிர் போக உழைத்த இவர் யார்?

ஆனால், 1800களில் கருப்பின மக்களின் வேலை வாய்ப்புக்காக ஜான் ஹென்றி என்ற நபர் நீராவி துளையிடும் கருவியுடன் போட்டியிட்டார். அதில் அவர் வென்றாரா? தோற்றாரா? கடுமையான உடல் உழைப்பின் விளைவாக அவருக்கு என்ன நடந்தது?
Man Vs Machine : கருப்பின மக்களுக்காக இயந்திரத்துடன் போட்டியிட்ட ஹீரோ - John Henryன் கதை!
Man Vs Machine : கருப்பின மக்களுக்காக இயந்திரத்துடன் போட்டியிட்ட ஹீரோ - John Henryன் கதை!Twitter
Published on

ஒரு கணக்குக்கு கால்குலேட்டரும் மனிதனும் வெவ்வேறு பதில்களைக் கூறினால் கண்ணை மூடிக்கொண்டு கால்குலேட்டரை நம்புவோம்.

மனிதர்கள் எந்திரங்களை விட சிறப்பாக செயல்பட முடியும் என நாம் எப்போதும் நம்புவதில்லை.

ஆனால் செஸ் மாஸ்டர்கள் கம்பியூட்டரிடம் தோற்பதே இல்லை என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

மூளை விஷயத்தில் சரி, உடல் அளவிலும் இயந்திரங்களை மனிதர்கள் விஞ்ச முடியுமா? உசேன் போல்டால் நிச்சயமாக ஒரு பைக்கை தோற்கடிக்க முடியாது தான்.

ஆனால், 1800களில் கருப்பின மக்களின் வேலை வாய்ப்புக்காக ஜான் ஹென்றி என்ற நபர் நீராவி துளையிடும் கருவியுடன் போட்டியிட்டார்.

அதில் அவர் வென்றாரா? தோற்றாரா? கடுமையான உடல் உழைப்பின் விளைவாக அவருக்கு நடந்தது என்ன?

ரயில் பணி

1800களில் அமெரிக்கா விரைவாக ரயில் பாதைகளை அமைத்து வந்தது.

அதன் பகுதியாக வெர்ஜினா மாகாணத்தில் உள்ள ஒரு மலையில் கிரேட் பெண்ட் சுரங்கப்பாதையை அமைத்தனர். இதனை செசபிக் மற்றும் ஒஹியோ ரயில்வே நிறுவனம் மேற்கொண்டது. இவர்கள் அமைத்ததிலேயே மிகப் பெரிய பாதை இது தான்.

இந்த பணியில் 800 ஆண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் வேலை தேடி வெர்ஜினாவுக்கு இடம் பெயர்ந்து வந்தவர்கள்.

இவர்களில் ஜான் ஹென்றியும் ஒருவர். ஏழைக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் திடகாத்திரமான உடலமைப்பைப் பெற்றிருந்தார்.

மிகவும் வேகமாகவும் கடினமாகவும் உழைக்கக் கூடிய நபராக அவர் இருந்தார். உடன் பணியாற்றும் மக்கள் மீது அதிக அன்பு செலுத்தியும் வந்தார்.

ரயில் பாதை அமைக்கும் பணி மிகவும் ஆபத்தானதும் கூட.

பாறைகள் உயிருக்கு ஆபத்து விளைவிக்க முடியும். இந்த பணிக்கு மிகவும் குறைந்த ஊதியமே வழங்கப்பட்டது ஆனால் அதிகமாக வேலை செய்ய வேண்டியிருந்தது.

கடினமான பாறைகளை சுத்தியல் வைத்தே மனிதர்கள் உடைக்க வேண்டியிருந்தது.

வெடி மருந்து வைக்க ஏற்ற பாறைகளை வெடிக்கச் செய்து சிறிய துகள்களாக்கி பின்னர் மலையில் இருந்து அகற்றினர்.

பாறைகளில் துளையிடும் பணியை மேற்கொண்டு வந்தார் ஜான் ஹென்றி.

Man Vs Machine : கருப்பின மக்களுக்காக இயந்திரத்துடன் போட்டியிட்ட ஹீரோ - John Henryன் கதை!
மைக்கேல் ஜாக்சன் வரலாறு : கறுப்பின மக்களுக்கு துணை நின்றாரா அல்லது கைவிட்டாரா? |பகுதி 3

இயந்திரத்தால் வந்த ஆபத்து

என்ன தான் கருப்பின அமெரிக்கர்கள் மிகவும் குறைந்த ஊதியத்துக்கு பணியாற்றினாலும் ரயில்வே நிறுவனம் விரைவாக வேலைகளை முடிக்க இயந்திரங்களைப் பயன்படுத்த தொடங்கியது.

நீராவி துளையிடும் இயந்திரங்கள் மிகவும் வேகமாக பாறைகளை குடைந்தன.

இதனால் மனித சக்திகளின் தேவை வெகுவாக குறைந்தது. கறுப்பின மக்கள் வேலை இழந்தனர்.

அப்போது ஜான் ஹென்றி நீராவி இயந்திரத்துடன் போட்டியிட்டு அதனை விட வேகமாக தன்னால் பாறைகளை நொறுக்க முடியும் எனக் சவால் விட்டார்.

அப்படி இயந்திரத்துடனான போட்டியில் ஜான் ஹென்றி வென்றுவிட்டால் கருப்பின மக்களுக்கே தொடர்ந்து வேலை கொடுக்க வேண்டும் என உடன்படிக்கை செய்யப்பட்டது.

தொடர்ந்து 14 மீட்டர் நீளத்துக்கு யார் முதலில் சுரங்கத்தை அமைப்பார் என்ற இலக்குடன் போட்டி ஆரம்பமானது.

இயந்திரம் 9 மீட்டர் தோண்டுவதற்கு முன்னர் 14 மீட்டர் தோண்டி போட்டியை வென்றார் ஜான் ஹென்றி.

இதனால் கருப்பின மக்களுக்கே அங்கு வேலைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஜான் ஹென்றியின் கதையை பல எழுத்தாளர்கள் கதையாக எழுதியுள்ளனர்.

பல திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. கிரேட் பெண்ட் சுரங்கத்துக்கு முன்னால் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.

ஜான் ஹென்றியின் கதை கருப்பினத்தவர்களின் புராணமாக பாடப்படுகிறது. இந்த கதை வெறும் புராணம் மட்டுமே என்றும் சிலர் கூறுகின்றனர்.

Man Vs Machine : கருப்பின மக்களுக்காக இயந்திரத்துடன் போட்டியிட்ட ஹீரோ - John Henryன் கதை!
ஆப்ரிக்காவின் சேகுவேரா: சதியால் கொல்லப்பட்ட தலைவர் இளைஞர்களின் ஹீரோவான வரலாறு

ஜான் ஹென்றிக்கு என்ன நடந்தது?

ஜான் ஹென்றி அதிகப்படியான சோர்வினால் பாதிக்கப்பட்டார். மன அழுத்தத்துடன் உடலும் சீர் குலைந்ததால் விரைவிலேயே அவர் இறந்து போனார்.

இனப்பாகுபாடு மற்றும் நிதி பாரத்தால் கருப்பின மக்கள் இன்றளவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஒடுக்கப்படும் மக்களுக்கு ஜான் ஹென்றி போன்றவர்களை முன்னோடியாக உருவாக்குவது தனிமனித அளவிலான விடுதலையை நோக்கியே மக்களை இழுத்துச் செல்கிறது.

சமூக ரீதியிலான முன்னேற்றத்தை, இது மட்டுப்படுத்துகிறது.

கருப்பின மக்களின் புராணக்கதையாக இருந்தாலும் தற்காலத்தில் கருப்பின மக்களுக்கு எதிரான ஒன்றாகவே ஜான் ஹென்றியின் கதை இருக்கிறது.

ஜான் ஹென்றியிசம்

ஷெர்மன் ஜேம்ஸ் தொற்றுநோயியல் நிபுணர் கருப்பின மக்களின் ஆரோக்கியம் எப்போதுமே மிகவும் அபாயமான நிலையில் இருக்கிறது என கூறுவதாக பிபிசி செய்தி அறிக்கை கூறுகிறது.

ஜேம்ஸ் இதனை "ஜான் ஹென்றியிசம்" என்ற ஒரு கூற்றினைக் குறிப்பிடுகிறார்.

சமத்துவமின்மை, நிதிக் கஷ்டங்கள் மற்றும் இனப் பாகுபாடுகளுக்கு ஆளாகியிருக்கும் கருப்பின மக்கள் இவற்றை எதிர்த்து சாதாரணமான வாழ்க்கையை வாழ முற்படும் போது மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்பதே ஜான் ஹென்றியிசம்.

கோவிட் அலையில் கூட கருப்பின மக்களே அதிகப்படியாக பாதிக்கப்பட்டதாக பிபிசி தளம் கூறுகிறது. இது ஜான் ஹென்றியிசத்துடன் தொடர்புடைய ஒன்றே.

Man Vs Machine : கருப்பின மக்களுக்காக இயந்திரத்துடன் போட்டியிட்ட ஹீரோ - John Henryன் கதை!
மால்கம் எக்ஸ்: ஒரு போராளியின் வாழ்க்கை வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com