கோவிட் பரவல் காரணமாக இந்தியாவுடனான அனைத்து விமானங்களையும் சவுதி அரேபியா ரத்து செய்துள்ளது. அத்துடன் 15 நாடுகளுக்கும் பயணங்களை ரத்து செய்திருக்கிறது.
துருக்கி, வியட்நாம், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, ஆப்கானிஸ்தான், ஏமன், லெபனான், எத்தியோப்பியா, காங்கோ ஜனநாயக குடியரசு, இந்தோனேசியா, ஆர்மீனியா, பெலாரஸ் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளிலும் கோவிட் தொற்று பரவல் அதிகரித்திருக்கிறது.
கடந்த சில வாரங்களாக இந்த 16 நாடுகளிலும் கோவிட் பரவல் அதிகரித்திருப்பதே தடைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் கடந்த ஞாயிறு அன்று 2000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பும் ஓமிக்ரான் அலையுடன் கோவிட் தொற்று முடிவுக்கு வந்துவிடவில்லை எனக் கூறியுள்ளது. இது குறித்து உலக சுகாதார மையம் பொது இயக்குநர் கூறியதாவது, “நாம் ஆபத்திலிருக்கும் போது பாதுகாப்பைக் குறைக்கிறோம். சோதனை செய்வதைக் குறைப்பது என்பது வைரஸின் பரிமாணத்தைக் கவனிக்காமல் நம் கண்களை மூடிக்கொள்வதைப் போன்றது.” எனக் கூறியுள்ளார்.
கோவிட் தொற்று குறைந்து ஊரடங்கு முதலிய தடுப்பு நடவடிக்கையிலிருந்து சில மாதங்களாகத் தப்பியிருக்கும் நாம் மீண்டும் அவற்றைச் சந்திக்க நேரிடலாம். இந்த அபாயத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளத் தடுப்பூசி உள்ளிட்ட அரசின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டியது அவசியம். இது வரை பல நாடுகளில் மக்கள் தடுப்பூசிகளைக் கூட முறையாகப் போட்டுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சவுதி அரசின் இந்த நடவடிக்கைக்குக் குரங்கு அம்மைத் தொற்றும் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust