மூலம் : கோடைக்காலத்தில் உடலை தற்காத்துக்கொள்ள என்ன செய்யலாம்?

கோடைக்காலத்தில் மூலநோய் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. உடல் உஷ்ணம் அதிகரிப்பது குறித்து கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது.
மூலம் : கோடைக்காலத்தில் உடலை தற்காத்துக்கொள்ள என்ன செய்யலாம்?
மூலம் : கோடைக்காலத்தில் உடலை தற்காத்துக்கொள்ள என்ன செய்யலாம்?Twitter
Published on

பெருங்குடல் முடியும் பகுதியான ஆசன வாயைச் சுற்றி இருக்கும் மிருதுவான 'குஷன்' போன்ற தசை அமைப்பில் தான் மூலம் ஏற்படுகிறது.

ஆசனவாயில் தொடர்ந்து அழுத்தம் ஏற்பட்டால் இந்தத் தசைப்பகுதி வீக்கமடையும். மூல நோய் ஏற்பட்டுள்ள பகுதிகளில் வெடிப்புகள் ஏற்பட்டு இரத்தம் கசியவும் வாய்ப்புள்ளது. 

நாட்பட்ட மலச்சிக்கல் மற்றும் அதிக அழுத்தம் கொடுத்து மலம் கழித்தல் ஆகியவை மூல நோய்' ஏற்பட முக்கிய காரணங்களாகும். கர்ப்பம், அதிக பளு தூக்குதல் மற்றும் நாட்பட்ட வயிற்றுப்போக்கு ஆகியவையும் மூல நோயை ஏற்படுத்த வாய்ப்புண்டு, வயது ஆக ஆக மூலநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

கோடைக்காலத்தில் மூலநோய் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. உடல் உஷ்ணம் அதிகரிப்பது குறித்து கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. 

“நம் உடல்நலம் நம் வயிற்றின் நலத்துடன் நேரடித் தொடர்புடையது” எனச் சொல்லிக் கேட்டிருப்போம். மூலத்தில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை கவனிக்க வேண்டியது அவசியம்.

தினமும் பாஸ்புட் உணவுகள், காரசாரமான சிக்கன் வெரைட்டிகள், பொறித்த உணவுகளைச் சாப்பிடுபவர்கள் பைல்ஸால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

குளிர்பிரதேசங்களில் வசிப்பவர்களின் உணவுவகைகள், சுவையூட்டிகள் நம் தட்டுகளுக்கு எளிதாக வந்துவிட்டன. ஆனால் அவை நம் தட்பவெப்பநிலைக்கு ஒத்துவராதவை என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும். 

மூலம் : கோடைக்காலத்தில் உடலை தற்காத்துக்கொள்ள என்ன செய்யலாம்?
கல்லீரல் நோய்: இந்த அறிகுறிகளை கவனித்திருக்கிறீர்களா? | Nalam 360

இட்லி, பொங்கல் போன்ற ஆரோக்கியமான, உடலுக்கு தீங்கு விளைவிக்காத உணவுகளை நாம் தேர்வு செய்ய வேண்டும். உப்புத்தன்மை குறைவாக உள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது.

சாம்பார் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம் போன்ற கலவை சாதங்களைச் சாப்பிடுவது நல்லது. அவற்றுடன் சேர்ந்து மோர் அருந்தினால் வயிறு கெட்டுப் போகாது. வறுவல் உணவுகளைத் தவிர்த்து சுரைக்காய், பீர்க்கங்காய், அவரைக்காய், புடலங்காய், பூசணிக்காய் ஆகிய நீர்ச்சத்து நிறைந்த காய்கறிக் கூட்டுகளைச் சாப்பிடலாம். 

மூலம் : கோடைக்காலத்தில் உடலை தற்காத்துக்கொள்ள என்ன செய்யலாம்?
சம்மர் வரப்போகுது! டீஹைட்ரேஷனை தடுக்க என்ன சாப்பிடலாம்?

கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடிக்கடித் தண்ணீர் அருந்த வேண்டும். இளநீர், பதநீர், நுங்கு, மோர், ஐஸ் சேர்க்காத பழச்சாறு அருந்தலாம்.

உடல் உஷ்ணத்தைக் குறைக்க எண்ணெய்த் தேய்த்துக் குளிக்கலாம். உடலில் சூடு அதிகமாக இருந்தால், கால் கட்டைவிரல், தொப்புளில் விளக்கெண்ணெய் தடவினால் சூடு குறையும். 

உடல்சூடு அதிகமாக இருந்தால், வெள்ளைப் பூசணிக்காயை மோரில் போட்டு பச்சடியாகச் சாப்பிடலாம். தினமும் வெந்தயம் சேர்த்துக்கொள்ளலாம். வெள்ளரிக்காய், வெள்ளரி விதைகளைச் சாப்பிடுவதும் உடலுக்குக் குளிர்ச்சி தரும். 

மூலம் : கோடைக்காலத்தில் உடலை தற்காத்துக்கொள்ள என்ன செய்யலாம்?
உஷ்ணம் முதல் மூலம் வரை - சுட்டெறிக்கும் சம்மரை சமாளிக்க எளிய வழிகள் | Nalam 360

ஆசனவாயில் எரிச்சல், வலி இருந்தால் அந்த இடத்தில் விளக்கெண்ணெய் தடவலாம். துத்தி இலையில் சின்ன வெங்காயம் சேர்த்து கூட்டு, பொரியல் செய்து சாப்பிடலாம். துத்தி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, பொறுக்கும் சூட்டில் ஆசனவாயில் வைத்துக் கட்டிவந்தால் எரிச்சல், வலி சரியாகும். 

இவற்றையும் கடந்து உங்கள் மூல நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தால் அவற்றை வீட்டில் குணப்படுத்தவும் சில வழிகள் இருக்கின்றன.

மூலம் : கோடைக்காலத்தில் உடலை தற்காத்துக்கொள்ள என்ன செய்யலாம்?
மூலம் : ஆரம்ப கட்டத்தில் வீட்டிலிருந்தே குணப்படுத்தும் சில வழிமுறைகள் | Nalam 360

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com