ரியல் கஜினி : 2 மணி நேரத்துக்குள் அனைத்தையும் மறக்கும் பெண் - எங்கே?

ஜூலை 11, 2019 அன்று விபத்து நடந்ததில் இருந்து ரிலே ஒரு 'நேர சுழற்சியில்' சிக்கியுள்ளார், ஒவ்வொரு நாளும் அது இன்னும் ஜூலை 11, 2019 என்று நம்புகிறார்.
ரியல் கஜினி : 2 மணி நேரத்துக்குள் அனைத்தையும் மறக்கும் பெண் - எங்கே?
ரியல் கஜினி : 2 மணி நேரத்துக்குள் அனைத்தையும் மறக்கும் பெண் - எங்கே?Twitter
Published on

கஜினி படத்தில் வரும் சூர்யா போல மணிக்கு மணி நடந்த அனைத்தையும் மறக்கும் "ஷார்ட் டைம் மெம்மரி லாஸ்" பிரச்னையால் அவதிப்படுகிறார் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர்.

இந்த மனநல பிரச்னை மிகவும் வினோதமானதாகத் தெரியலாம். இப்படி வாழ்வது இயலக்கூடிய காரியமா என்று கூடத் தோன்றும்.

ஆனால், இந்தப் பெண் கடந்த சில ஆண்டுகளாக இந்த பிரச்னையுடன் தான் போராடிவருகிறார். அவர் சந்திக்கும் சிக்கல்கள் என்னென்ன? காணலாம்...

எப்படி இந்த பிரச்னை ஏற்பட்டது?

ரிலே ஹார்னர் என்ற பெண் இப்போது கல்லூரியில் படித்துவருகிறார்.

இந்த இளம் பெண், 16 வயதில் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்துக்கு பிறகு இந்த பிரச்னையை எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்.

ஜூலை 11, 2019 அன்று விபத்து நடந்ததில் இருந்து ரிலே ஒரு 'நேர சுழற்சியில்' சிக்கியுள்ளார், ஒவ்வொரு நாளும் அது இன்னும் ஜூலை 11, 2019 என்று நம்புகிறார்.

ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகளை 2 மணிநேரத்துக்கும் மேலாக அவரால் நினைவு வைத்திருக்க முடியாது.

ரிலேவின் தாயார் அந்த விபத்து குறித்து நினைவுக்கூறும்போது, "ரிலே நடனமாடிக்கொண்டிருக்கும் போது தடுமாறிய ஒருநபர் அவள் மீது விழுந்துவிட்டார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பிறகு 30 முதல் 45 வலிப்புகள் வந்தது" எனக் கூறியிருக்கிறார்.

மறுநாள் காலையில் எழுந்த ரிலே முந்தைய நாள் அவர் கீழே விழுந்ததையே மறந்திருந்தாராம். அன்று ஜூலை 11ம் தேதி என நினைத்துக்கொண்டு நடனமாடுவதற்குத் தயாராகியிருக்கிறார்.

மொபைல் போனை எடுத்து அப்டேட்களை செக் செய்யும்போதுதான் அவர் குழப்பமடைந்திருக்கிறார்...

ரியல் கஜினி : 2 மணி நேரத்துக்குள் அனைத்தையும் மறக்கும் பெண் - எங்கே?
Health: மீன், முட்டை, நட்ஸ் - மூளை நலனைக் காக்க எந்த உணவுகள் சிறந்தது?

மோசமான மூளை பாதிப்பு

ரிலேவின் குடும்பத்தினர் வெகுநாட்கள் தேடலுக்குப் பிறகு அவரது பிரச்னையைக் கண்டறியக்கூடிய மருத்துவரிடம் சென்றனர்.

அவருக்கு அதிர்ச்சிகரமான மூளை காயம் (traumatic brain injury (TBI)) ஏற்பட்டிருப்பதாக மருத்துவர் கூறியுள்ளார்.

இந்த பாதிப்பால் அவரால் எந்த விஷயத்திலும் கவனம் செலுத்த முடியாமல் போனது. அவரது நினைவுகளையும் மூளையால் சேமித்து வைக்க முடியாமல் போனது.

ரியல் கஜினி : 2 மணி நேரத்துக்குள் அனைத்தையும் மறக்கும் பெண் - எங்கே?
கனவுகள்: நாம் ஏன் கனவு காண்கிறோம்? - அறிவியல் சொல்வது என்ன?

இப்போது சிகிச்சை எடுத்துக்கொண்டதன் விளைவாக அவரது நினைவுகள் 2 மணிநேரம் வரை நீடித்திருக்கிறது.

ரிலே இப்போதும் சிகிச்சைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அவரால் பழையபடி சாதாரண வாழ்க்கைக்கு திரும்ப முடியுமா என்பது மருத்துவ உலகுக்கும் சந்தேகமான ஒன்று தான்.

ரியல் கஜினி : 2 மணி நேரத்துக்குள் அனைத்தையும் மறக்கும் பெண் - எங்கே?
9 மணி நேரம்... இசைக்கருவியை வாசித்தபடியே அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர் | Video

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com