தம்பதிகள் ஒன்றாக தூங்குவது எல்லா நாளும் இனிமையானதாக இருக்காது. நம் படுக்கையை மற்றவருடன் பகிர்ந்துகொள்வது சிலசமயங்களில் சிலருக்கு அசௌகரியமான ஒன்றாக இருக்கும்.
இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க தம்பதியர்களால் உபயோகிக்கப்படும் ஒரு முறைதான் ஸ்காண்டிநேவியன் தூக்க முறை.
இந்தமுறை டென்மார்க், நார்வே மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகளில் பிரபலமாக இருக்கிறது. பொதுவாக இரண்டு பேரும் தூங்கும் போது ஒருவர் ஒருவரது போர்வையை இழுப்பது பெரிய பிரச்னையாக இருக்கும். இதற்கு தீர்வாக ஒரே கட்டிலில் இரண்டு தனித்தனி பெட்களை போட்டு படுப்பது தான் ஸ்காண்டிநேவியன் முறை.
டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலமாகும் இந்த தூக்க முறைக்கு 10/10 மதிப்பெண் வழங்குவதாகவும் தம்பதிகளுக்கு 100 விழுக்காடு பரிந்துரைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
வீடியோவில் வரும் பெண்மணி அவரும் அவரது கணவரும் டென்மார்கில் உள்ள கோபன்ஹோகனுக்கு சென்றதாகவும் அங்குதான் இந்த தூக்க முறையை கற்றதாகவும் கூறியுள்ளார். மேலும் அதனை சோதித்துப்பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
டிக்டாகில் இந்த வீடியோ 3.3 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளதாகவும் இவரின் ஃபாலோவர்கள் பாசிடிவான கருத்துகளை கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் வெவ்வேறு உடல் உஷ்ணநிலை (Body Temperature) இருக்கும்பட்சத்தில் இந்த முறை நிம்மதியான தூக்கத்தை வழங்கும்.
ஒரே போர்வையை பகிர்ந்து இரவில் அடுக்கடி விழிப்பதற்கு பதிலாக இப்படித் தூங்குவது தரமான தூக்கத்தைக் கொடுக்கும். இந்த ஸ்காண்டிநேவியன் முறை புதிதாக திருமணமானவர்களுக்கு அல்லாமல் தனித்தனியாக, தனியறையில் தூங்கும் தம்பதிகளுக்கு ஏற்றதாக இருக்கும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust