salt
saltTwitter

உப்பு கூடினால் ஆயுள் குறையும் : சுவையை இழக்காமல் உப்பைக் குறைக்க 6 வழிகள்

உணவில் சுவையை கூட்டி கொடுக்கவும் , சுவையை மாற்றும் தன்மையும் இந்த உப்புக்கு உள்ளது. ஆனால் உணவில் உப்பின் அளவு அதிகமானால் உடலில் நோய்களும் கூடும்.
Published on

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழியை நாம் கேள்விபட்டிருப்போம். அறுசுவைகளில் ஒன்றானது இந்த உவர்ப்பு.

உணவில் சுவையை கூட்டி கொடுக்கவும் ,சுவையை மாற்றும் தன்மையும் இந்த உப்புக்கு உள்ளது. ஆனால் உணவில் உப்பின் அளவு அதிகமானால் உடலில் நோய்களும் கூடும்.

அதே உப்பை மிகவும் குறைத்தாலோ ஆரோக்கியமும் குறைந்துவிடும். உணவில் உப்பை அளவாக சேர்த்துக் கொள்வது அவசியம்.

ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள், உப்பை உணவில் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள்.

உங்கள் உணவில் சுவையை இழக்காமல் உப்பைக் குறைக்க ஆறு வழிகள் இதோ!

1.கருப்பு மிளகுத்தூளைப் பயன்படுத்தவும்

உணவில் கூடுதல் உப்பு சேர்ப்பதை தவிர்க்கவும், சமைக்கும் போது அளவைக் கட்டுப்படுத்தவும், பாஸ்தா, பீட்சா, மீன் மற்றும் சூப் போன்ற பொருட்களில் உப்புக்குப் பதிலாக கருப்பு மிளகுத்தூளைப் பயன்படுத்தவும்.

salt
இவற்றை சாப்பிட்டால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் - அறிவியல் சொல்லும் 6 உணவுகள்!

2. ஈஸ்ட்

ஊட்டச்சத்துள்ள 'ஈஸ்ட்' மிகப் பரவலாக, உப்புக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது.

கிட்டத்தட்ட பாலாடைக் கட்டியின் சுவையை ஒத்திருக்கும் இதனை, 'பாப்கார்ன்' எனும் சோளப் பொறி, 'சாலட்' வகைகள், பொறித்த காய்கறிகள் ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.

3.கடல்பாசி

கடல்பாசியின் உலர்ந்த துகள்களை சமையலில் பயன்படுத்தலாம். வழக்கமான உப்பில் காணப்படுவதை விட இதில் சோடியம் 96 விழுக்காடு குறைவாகவே உள்ளது.

4.ஊறுகாய், மயோனைஸ்

சோயா சாஸ், கடுகு, ஊறுகாய், மயோனைஸ் மற்றும் பிற டேபிள் சாஸ்களை குறைவாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், ஏனெனில் இவை அனைத்திலும் உப்பு அதிகமாக இருக்கும்.

salt
குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைத்திருக்க உதவும் 5 உணவுகள் - என்னென்ன?

5. உப்பு குறைந்த உணவுகளை வாங்கவும்

அதிக அளவு சோடியம் உள்ள, சேமித்து வைக்கப்பட்ட அல்லது பேக் செய்யப்பட்ட உணவுகளை வாங்குவதைக் குறைத்துக் கொள்ளுங்கள்."குறைந்த சோடியம்" அல்லது "உப்பு சேர்க்கப்படவில்லை" என்று பெயரிடப்பட்ட தொகுக்கப்பட்ட உணவுகளைத் தேர்ந்தெடுக்கவும். உப்பு சேர்க்காத உணவு பொருட்களை வாங்கவும்

6. நொறுக்கு தீனிகளில் லேபிளைச் சரிபார்த்தல்

பழங்கள் அல்லது காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான தின்பண்டங்களைத் தேர்வு செய்யவும். நொறுக்கு தீனிகளில் லேபிளைச் சரிபார்த்து, உப்பு குறைவாக உள்ளவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

salt
சீனா மக்களின் ஆயுள் இரகசியம் இது தான் - ஆரோக்கியத்துக்கு கேரண்டி கொடுக்கும் ஒரு உணவு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com