நிம்மதியான தூக்கத்துக்கு என்ன வழி? - இந்தக் கட்டுரை உங்களுக்கானது

எப்படியிருந்தாலும், நள்ளிரவில் தூக்கத்திற்கான தீர்வுகளைத் தேடுவதன் வலி அனைவருக்குமே புரியும். காரணமும் தெரியாமல் தீர்வும் தெரியாமல் தூக்கத்துக்காக ஏங்குபவர்கள் பலர்.
நிம்மதியான தூக்கத்துக்கு என்ன வழி? - இந்தக் கட்டுரை உங்களுக்கானது
நிம்மதியான தூக்கத்துக்கு என்ன வழி? - இந்தக் கட்டுரை உங்களுக்கானது Pexels
Published on

சோர்வாக இருந்தாலும் தூக்கம் வரவில்லையே என்ற வருத்தம் எப்போதாவது உங்களுக்கு வருவது உண்டா? அல்லது தினமும் தூக்கம் வராமல் திரும்பித் திரும்பி படுக்கும் நபரா? அமைதியற்ற தூக்கத்தால் அவதிப்படுபவரா?

எப்படியிருந்தாலும், நள்ளிரவில் தூக்கத்திற்கான தீர்வுகளைத் தேடுவதன் வலி அனைவருக்குமே புரியும். காரணமும் தெரியாமல் தீர்வும் தெரியாமல் தூக்கத்துக்காக ஏங்குபவர்கள் பலர்.

அனைவருக்கும் பொருந்தக்கூடிய தீர்வு ஒன்றே ஒன்று என உலகில் இல்லை என்றாலும், உலகெங்கிலும் உள்ள கலாச்சாரங்கள் தங்களுக்குத் தேவையான சில வழிகளைக் கண்டுபிடித்துத் தங்கள் வாழ்வில் பின்பற்றுகிறார்கள்.

சீனா

இளஞ்சூடான நீரில் கால்களை மூழ்கி, சிறிது நேரம் வைத்திருக்க மனம், உடல் ரிலாக்ஸாகும். தூக்கம் வரும். பாத் டப் அல்லது குளியல் டப்பில் இளஞ்சூடான நீரை நிரப்பிக் கொள்ளவும்.

எப்சாம் உப்பு

லாவண்டர் எண்ணெய் அல்லது ரோஸ் எண்ணெய்

பழத்தோல்கள்

மூலிகைகள்

இவற்றில் ஏதேனும் ஒன்றை நீரில் போட்டுக் கால்களை அதில் மூழ்கவிட்டு 20 நிமிடங்கள் ரிலாக்ஸாக உட்காரவும்.

அக்குபஞ்சர் அறிவியலில், மூளையை ரிலாக்ஸ் செய்து தூக்கம் வர செய்யும் என்கிறார்கள்.

இந்திய நாட்டின் பழக்கம்

ஆயுர்வேத மருத்துவ முறைப்படி அஸ்வகந்தா எனும் மூலிகை, தூக்கத்துக்கான சிறப்பு மூலிகை. பல ஆயிரம் வருடங்களாக இந்த மூலிகையை இந்திய மக்கள் தூக்கத்துக்காகப் பயன்படுத்தி வருகின்றனர்.

மன அழுத்தம், பயம் போன்ற மோசமான மன பிரச்சனைகளைக் குறைக்க உதவும்.

2020-ல், 150 ஆரோக்கியமான பெரியவர்களுக்கு 120 mg அஸ்வகந்தாவை 6 வாரத்துக்குத் தினமும் கொடுத்து வந்தனர்.

விரைவில் தூக்கம் வந்ததாகச் சொல்லினர்

ஆழ்ந்த தூக்கம் தூங்கிய பலன் கிடைத்துள்ளது

சீரற்ற தூக்கம் குறைந்தது

ஆரோக்கியம் அதிகரித்தது

தூக்கமின்மை நோயாளிகளுக்கு, நல்ல பலன் கிடைத்ததாகச் சொல்லியிருந்தனர்.

ஸ்வீடன் நாட்டின் பழக்கம்

பால், சிறிது ஓட்ஸ் கலந்த வெதுவெதுப்பான பாலை இரவு தூங்கும் முன் குடிக்கும் பழக்கம் உள்ளது. குழந்தைகள், பெரியவர்கள், முதியவர்கள் என அனைவரும் இந்த ஓட்ஸ் கஞ்சியைக் குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால், தூக்கம் சீராக வருவதாகக் கூறுகின்றனர்.

நிம்மதியான தூக்கத்துக்கு என்ன வழி? - இந்தக் கட்டுரை உங்களுக்கானது
இரவில் ஆடையின்றி தூங்குபவரா நீங்கள்? - இந்தக் கட்டுரையை படித்துவிடுங்கள்

ஃபின்லாந்தின்பழக்கம்

மாலையில் சானா ஸ்டீம் எடுக்கும் பழக்கம் இந்த மக்களுக்கு இருந்து வருகிறது. இதனால், தசைகள் ரிலாக்ஸ் ஆகுவதால் நல்ல தூக்கம் வருவதாகச் சொல்கின்றனர்.

நெஞ்சக நோய்

இதய நோய்

இதய வால்வ் நோய்

எலும்பு நோய்கள்

மன அழுத்தம், மன சோர்வு

தசை இறுக்கம் ஆகிய பிரச்சனைகள் இருப்போர், சானா ஸ்டீம் எடுக்கத் தூக்கம் வரும். சானா ஸ்டீம் தொடர்ந்து, அடிக்கடி எடுப்பவர்கள் தண்ணீரும் அதிகளவு குடிப்பது நல்லது. சானா ஸ்டீம் எடுக்க, பெரியவர்கள்கூடக் குழந்தைகள் போல ஆழ்ந்து தூங்குகிறார்கள் என ஆய்வு சொல்கிறது.

ஜப்பானியர்களின் பழக்கம்

தரையில் இயற்கை மெட்டிரியல்களான பருத்தி, கம்பளியால் தயாரித்த மெத்தையைத் தூங்குவதற்காகப் பயன்படுத்துகின்றனர். இதனால் தூக்கம் சீராக வருவதாகக் கூறுகின்றனர். அடி முதுகு வலி, முதுகுத்தண்டு வலி ஆகியவையும் நீங்குவதாகச் சொல்கின்றனர்.

பல கலாச்சாரத் தூக்கப் பழக்கவழக்கங்கள்

குழந்தைகள், தன் துணை, செல்ல பிராணிகள் இதனுடன் சேர்ந்து தூங்குவதால் தூக்கம் வரும். தனி ஆளாகத் தூங்குவதைவிட அருகில் யாராவது தூங்கினால் தூக்கம் வரும் என உளவியல் சொல்கிறது. வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் குடும்பமாகத் தூங்குவதால் தூக்கமின்மையைத் தவிர்க்கலாம் என்கிறது.

குழந்தைகளும் தனியாகத் தூங்காமல் பெற்றோர், பெரியவர்கள், உடன் பிறந்தவர்கள், செல்ல பிராணிகளுடன் தூங்கினால் குழந்தைகளுக்கு நெகடிவ்வான எதிர்மறை பழக்கங்கள் தவிர்க்கப்படும். பற்களைத் தூங்கும்போது கடிக்கும் பழக்கம்கூடத் தடுக்கப்படுகிறது.

2020-ல் இரவில் செய்த ஆய்விலும், படுக்கையைப் பகிரும் பெற்றோர் - குழந்தைகள், கணவன் - மனைவி, உடன்பிறந்தவர்கள், செல்ல பிராணிகளும் வளர்ப்பவர்களும் ஒன்றாகத் தூங்கிடத் தூக்கம் நன்றாக வருவதாக ஆய்வில் சொல்கின்றனர்.

நிம்மதியான தூக்கத்துக்கு என்ன வழி? - இந்தக் கட்டுரை உங்களுக்கானது
உலகின் விலை உயர்ந்த தலையணை - என்னென்ன சிறப்புகள்? என்ன விலை தெரியுமா?

சாமாமைல் டீ (Chamomile tea)

ரஷ்யா, சீனா, பிரிட்டன் போன்ற நாட்டு மக்கள் சாமாமைல் டீ குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். மூளையை அமைதிப் படுத்தும் ஆற்றல் இந்த டீயில் உள்ளது.

2017 ஆய்வில், 60 முதியவர்கள் சாமாமைல் மாத்திரைகளைத் தினமும் இரண்டு முறை 200 mg அளவுக்கு 28 நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டதால் தூக்கம் வருவதாகக் கூறினர். தூக்கம் தாமதமாவதும் நீங்கிவிட்டதாகச் சொல்கின்றனர்.

தூங்குவதற்கு 45 நிமிடங்களுக்கு முன், சாமாமைல் டீ குடித்து விட்டுத் தூங்கச் சென்றால் தூக்கம் வரும் என்கின்றனர்.தூக்கத்துக்காக ஏங்குபவர்கள் பலர்.

அனைவருக்கும் பொருந்தக்கூடிய தீர்வு ஒன்றே ஒன்று என உலகில் இல்லை என்றாலும், உலகெங்கிலும் உள்ள கலாச்சாரங்கள் தங்களுக்குத் தேவையான சில வழிகளைக் கண்டுபிடித்து தங்கள் வாழ்வில் பின்பற்றுகிறார்கள்.

நிம்மதியான தூக்கத்துக்கு என்ன வழி? - இந்தக் கட்டுரை உங்களுக்கானது
விலங்குகளை விட மனிதர்கள் குறைவாகவே தூங்க என்ன காரணம் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com