வெயில் காலத்தில் வரும் சூடு கட்டிகள் - என்ன தீர்வு?

கட்டியில் உள்ளவை, அவரவர் உடலின் கழிவுகள், வெப்பநிலை பொறுத்துச் சீழ், ரத்தம் போன்றவை அதில் இருக்கலாம். ஆக மொத்தம் எல்லாமே கழிவுகள்தான்.
summer
summerCanva
Published on

வெயில் காலத்தில் வரும் ஒரு முக்கியத் தொந்தரவு, சூடு கட்டிகள். முகத்தில், கண் இமைகளில், முதுகில், பின் இடுப்பு, ஆசனவாய் இடங்களில், சிறுநீர் கழிக்கும் இடங்களில் எனப் பல இடங்களில் வரும். இந்தக் கட்டிகள் பெரிதாகும், அது பழுத்து உடைய நிறைய நாளெடுக்கும், சிலருக்கு வலி, சீழ், ரத்தம் கூட வரலாம். ஏன் இந்தத் தொல்லை? அதுவும் முகத்தில் வந்துவிட்டால் வெளியில் செல்ல அவஸ்தையாக இருக்கும்.

கட்டிகள், நோய்கள் அல்ல. உடலின் கழிவுகள் சுமந்திருக்கும் அறிகுறிதான். கட்டியில் உள்ளவை, அவரவர் உடலின் கழிவுகள், வெப்பநிலை பொறுத்துச் சீழ், ரத்தம் போன்றவை அதில் இருக்கலாம். ஆக மொத்தம் எல்லாமே கழிவுகள்தான். சூடு கட்டிகள் ஏன் உருவாகின்றன? உடலில் வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டால் உருவாகும். உடலின் உள்ள கழிவுகளைச் சுமந்து கட்டிகள் சருமத்தின் அருகில் வந்து நிற்கிறது.

summer season
summer seasontwitter

கழிவுகள் சேர பல காரணங்கள் உண்டு. ஆனால் இந்தப் பதிவில் சரும கட்டிகளைப் பற்றிப் பேசுவதால், முக்கியமான சில காரணங்களைப் பார்க்கலாம்.

காரணங்கள்…

  • முதலாவது மலச்சிக்கல்

  • வாயு பிரச்சனை

  • செரிமானத் தொந்தரவு

  • சளி, தும்மல், இருமல் வருகையில் மாத்திரை, ஊசி போட்டு அதை வெளியேற்றாமல் உடலில் தக்க வைத்துக்கொள்ளும் பழக்கம்

  • வலி மருந்துகளை உண்ணும் பழக்கம்

  • நிறைய மாவுப்பொருட்களை உண்ணும் பழக்கம்

  • பசி இல்லாத போது உண்ணும் பழக்கம்

  • தூக்கம் மிகவும் தாமதமாகுவது, 11 மணிக்கு தூங்கும் பழக்கம்

deep sleep
deep sleeptwitter
  • மேலும் மேலும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பவருக்கு

  • உடல் அசைவு பெரிதாக இல்லாதவருக்குக் கட்டிகள் வரலாம்

  • துக்கத்தில் இருப்பவருக்கு

  • குளியல் என்பதைத் தோள்பட்டையில் இருந்து குளிக்கும் பழக்கம் இருப்பவருக்கு

  • கழிவறையில் நிதானமாக மலம் கழிக்கும் பழக்கம் இல்லாமல் மொபைல், புத்தகம் என ஏதோ வைத்துக்கொண்டு நேரம் செழிவழிக்கும் பழக்கம்

  • புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்

  • லேப்டாப் மடியில் வைக்கும் பழக்கம்

  • சோஃபா, சேரிலே அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்யும் பழக்கம்

இப்படிப் பல்வேறு காரணங்களால் கழிவுகள் உடலில் சேர்ந்திருக்கும், அதை வெளியேற்றாமல் இருந்திருப்போம். ஆதலால், உடலே கட்டியை உருவாக்கி அவரவர் உடலில் கழிவுகளுக்கு ஏற்றது போல நீர்க்கட்டி, தசைக்கட்டிகளாக உருவாகின்றன.

உடல், முகத்தில் சீழ் பிடித்தது போல உள்ள நீர்க்கட்டி, கொஞ்சம் கெட்டியான தன்மை உள்ள தசை கட்டியும் உருவாகின்றன.

summer
காலை உணவுகள் : வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை; சாப்பிட கூடாதவை
மஞ்சள்
மஞ்சள் Twitter

கட்டிகளை என்ன செய்து கரைக்க முடியும்?

சிலர் மஞ்சள் அரைத்து வைப்பார்கள். இன்னும் சிலர் இதனுடன் சோப்பு வைத்துப் பூசுவார்கள். இதெல்லாம் தீர்வாகாது. இதைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. வெறும் மஞ்சள் தூள் பூசுவது பெரிய பாதிப்பில்லை. ஆனால், சோப் வைப்பது நல்லதல்ல.

வேப்பிலை அரைத்து பூசலாமா? மஞ்சள் வேப்பிலை பூசலாமா? அவரவர் திருப்திக்குப் பூசலாம். பாதுகாப்பானதுதான். ஆனால், இது தீர்வல்ல…

அப்போ, தீர்வு என்ன?

  • எதுவுமே செய்யாமல் விட்டுவிடுவதுதான் தீர்வு. கட்டி, கழிவுகளைச் சுமந்து இருப்பதால் உடலே பார்த்துக்கொள்ளும். சிலரது உடல் கட்டியை பழுக்கவைத்து, தானாக உடைந்து சீழ் மூலமாகக் கழிவுகளை வெளியே தள்ளும். இது உடல் செய்யும் செயல்பாடு.

Women
WomenTwitter
  • கட்டியில் வலி இருந்தாலும் எரிச்சல் நமைச்சல் இருந்தாலும் கட்டி குணமாகிக் கொண்டிருக்கிறது என அர்த்தம். நமைச்சல் இருந்தால் இதமாக சொரிந்து விடுங்கள். இதுவும் கட்டி குணமாகும் ஒரு செயல்தான்.

  • சிலரது உடல், சீழ், ரத்தம் போன்ற எதுவுமே வெளிப்படுத்தாமல் கொஞ்சம் கொஞ்சம் தானாக அமுங்கி காய்ந்து போய் அமுங்கிவிடும். கட்டி எப்படிக் குணமாகும் என்பது அவரவர் உடலே பார்த்துக்கொள்ளும் விஷயம். அதில் நாம் தலையிட வேண்டிய அவசியமில்லை.

  • அந்தக் கட்டிகளை நாம் எந்தத் தொந்தரவும் செய்யாமல் ஹோம் ரெமடிஸ், மருந்துகள் என எதுவும் செய்யாமல் இருந்தாலே போதும். குறிப்பாக அழுத்துவது, பிதுக்குவது போன்றவை செய்யக் கூடாது. உடல் வெளியேற்ற நினைத்தால் தானாகப் பழுத்து, உடைந்து வெளியேறும்.

இளநீர்
இளநீர்twitter

கட்டிகள் விரைவில் குணமாக என்ன செய்யலாம்?

  • இரவில் 9 மணிக்கு தூங்க செல்லவேண்டும்.

  • மலச்சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதுவும் உடனடியாக மலச்சிக்கல் சூரணம் சாப்பிடுவது, கீரைகள் சாப்பிடுவது, பழங்கள் உண்ணுவது போன்றவை பின்பற்றலாம்.

  • உடல் வெப்பமாக உணருபவர் வாய்ப்புள்ள போது இளநீர், கரும்புச்சாறு, நுங்கு சாப்பிடலாம்.

  • தினமும் இருவேளை உணவு உண்ணும் பழக்கம் போதுமானது.

  • காலை உணவு, டிபனுக்குப் பதிலாகப் பழங்கள் நட்ஸ் சாப்பிடலாம்.

  • குளியலை 20-30 நிமிடங்கள் சாதாரணக் குழாய் நீரில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நீர் ஊற்றிக் குளிக்கலாம்.

  • உச்சந்தலை, உள்ளங்கால், தொப்புள், கால் கட்டைவிரலில் விளக்கெண்ணெய் வைக்கலாம்.

  • அருகில் கிணறு, குளம், ஆறு போன்றவற்றில் குளிக்கலாம். அருகில் இல்லாதோர் ஸ்விம்மிங் பூல் வாரம் இருமுறை செல்லலாம்.

  • வீட்டிலே பாத் டப் வாங்கி, அதில் 20 நிமிடங்கள் உட்கார்ந்திருக்கலாம்.

  • சளி, தும்மல், இருமலுக்கு மருந்துகள், டானிக் சாப்பிடக் கூடாது. கழிவை வெளியேற்றவில்லை என்றால் கட்டியாக உருவாகும் வாய்ப்புகள் உண்டு.

  • வலி மாத்திரைகளை உண்ணவே கூடாது.

summer
வெள்ளைப்படுதல் தொந்தரவு சரியாக ஆண், பெண் செய்ய வேண்டியவை
தோள்பட்டை வலி
தோள்பட்டை வலிTwitter
  • தோள்பட்டை, கை வலி இருந்தால் வலி மாத்திரைகளைச் சாப்பிட வேண்டாம். மலச்சிக்கலை சரியாக்குங்கள். முக்கியமாக, புளிப்பு உணவுகளைத் தவிருங்கள். இட்லி, தோசை, ஆப்பம், ஊத்தப்பம், பனியாரம் போன்ற புளிப்பு உணவுகள் தவிர்க்கவும்.

  • பால் பொருட்கள் உண்பதைத் தவிர்க்கவும்.

  • மாதம் ஒரு முறை ஜூஸ் ஃபாஸ்டிங் இருங்கள். பழச்சாறு மட்டும் குடித்துக்கொண்டு விரதம் இருப்பது.

  • பசிக்கும்போது மட்டும் உணவு உண்ணுங்கள். இது மிக முக்கியம்.

  • முடிந்தளவு ஞாயிறு நாளை அன்ஹெல்தி நாளாக வைத்துக்கொண்டு, மற்ற 6 நாட்களை ஹெல்தி உணவுகளாகச் சாப்பிடுங்கள். இதனால், உடலும் நன்றாக இருக்கும். உங்களுக்குப் பிடித்த ஜங்க் உணவுகளையும் சுவைக்கலாம். பாதிப்புகள் உடலில் அதிகம் இருக்காது. பாதுகாப்பான வாழ்வியலில் நீங்கள் இருக்கலாம்.

  • சம்மர் சீசனில் வரும் மா, பலா போன்ற கனிகளை அவசியம் சாப்பிடுங்கள். பழங்களில் சூடு, குளிர்ச்சி என எதுவும் கிடையாது. அவரவர் உடல் அதற்கேற்றது போல, பழங்கள் உள்ளே சென்றதும் மாற்றிக்கொள்ளும்.

  • பதநீர் குடிக்கலாம்.

  • முக்கியமாக மலச்சிக்கல் தீர்க்கவும்.

மலச்சிக்கல்
மலச்சிக்கல்Twitter

மலச்சிக்கல் தீர

  • வாரம் 2 நாட்கள் கீரைகள்

  • தினம் ஒருவேளை சமைக்காத காலை உணவு

  • இரவு உணவைத் தவிர்த்து, பசித்தால் மட்டும் 2பழங்கள் சாப்பிடுவது

  • இரவு தூக்கம் 9 மணிக்கு

  • உணவுக்கு முன் மலச்சிக்கல் சூரணம் சாப்பிடலாம்.

  • பசிக்காதுபோது சாப்பிடாமல் இருப்பது உடலுக்குச் செய்யும் பேருதவி.

  • கருப்பு காய்ந்த திராட்டை, பேரீச்சை பழம் உண்பது மலச்சிக்கலைத் தீர்க்கும்.

  • பப்பாளி, சப்போட்டா, மாம்பழம், பலாப்பழம், மலை வாழைப்பழம், திராட்சை மலச்சிக்கல் தீர்க்கும்பெஸ்ட் பழங்கள்.

summer
கர்ப்பப்பை பிரச்சனை தீர்க்கும் உணவுகள்- பட்டியல் இதோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com