நள்ளிரவு 1 - 3 மணிக்கு திடீரென முழிப்பு வருகிறதா? - உங்களுக்கு இந்த பிரச்னை இருக்கலாம்!

நள்ளிரவில் திடீரென விழித்துக்கொள்பவர்கள் எதற்காக விழிப்பு வந்தது என்ற காரணம் தெரியவில்லை என்பார்கள். மீண்டும் தூக்கம் வருவதும் அவர்களுக்கு சவாலானதாகவே இருக்கும்.
நள்ளிரவு 1 - 3 மணிக்கு திடீரென முழிப்பு வருகிறதா? - உங்களுக்கு இந்த பிரச்னை இருக்கலாம்!
நள்ளிரவு 1 - 3 மணிக்கு திடீரென முழிப்பு வருகிறதா? - உங்களுக்கு இந்த பிரச்னை இருக்கலாம்! Screengrab
Published on

நடு இரவில் தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்வது சாதாரணமான ஒன்று தான்.

நீங்கள் சிறுநீர் கழிக்கவோ, தாகமாக இருந்தாலோ இயல்பாகவே முழிப்பு வந்துவிடும்.

கெட்ட கனவு வந்தாலோ அல்லது தவறான வாகில் படுத்திருந்தாலோ தூக்கத்தின் இடையில் முழிப்பு வரும்.

ஆனால் ஒவ்வொரு நாளும் தூக்கத்தின் போது உங்களுக்கு முழிப்பு வந்தால்... நீங்கள் நிச்சயமாக இதனை சரி செய்ய வேண்டும்.

நள்ளிரவில் இப்படி எழுபவர்கள் பலராலும் மீண்டும் தூங்கச் செல்ல முடியாமல் போயிருக்கும்.

இதற்கு தூக்க சுழற்சி மாற்றம், மன அழுத்தம் அல்லது கல்லீரல் பிரச்னைகள் காரணமாக இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

இந்த பிரச்னைகளும் சரி, தூக்கமின்மையும் சரி நம் உடல் ஆரோக்கியத்தை வெகுவாக பாதித்து விடக் கூடும்.

இப்படி எழுவதற்கு இன்சோம்னியாவும் ஒரு காரணமாக இருக்க கூடும். இது நீண்டகால பிரச்னைகளை ஏற்படுத்தும். இன்சோம்னியாவை சரி செய்ய வேண்டியதும் மிகவும் அவசியம்.

இன்சோம்னியா தற்காலத்தில் தீவிரமாக அதிகரித்து வருகிறது.

பொதுவாக உலக அளவில் 10 - 20 விழுக்காடு மக்கள் இதனால் பாதிக்கப்படிருக்கின்றனர்.

ஆனால் கடைசி இரண்டு ஆண்டுகளில் இது பெரியவர்களில் 40 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது என்கிறது கிளீவ்லேண்ட் கிளினிக் அறிக்கை.

தூக்க சுழற்சி

ஒரு இரவு நாம் தூங்கி எழுவதற்குள் பல தூக்க சுழற்சிகளைக் கடக்கிறோம் என்கிறது அறிவியல்.

ஒரு சுழற்சிக்கு 90 நிமிடங்கள் என 4 சுழற்சிகளில் தூங்குகிறோம். சிலருக்கு ஒரு சுழற்சிக்கான நேரம் அதிகரிக்கலாம். சிலருக்கு சுழற்சிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்.

இந்த சுழற்சியில்,

விழிப்பிலிருந்து தூக்கத்துக்கு செல்லுதல்

லேசான தூக்கம்

ஆழ்ந்த தூக்கம்

REM தூக்கம் என நான்கு நிலைகளில் தூங்குகிறோம்.

மருத்துவர்கள் கூறுவதன் படி, அன்று நம் உடல் உழைப்பு எப்படியாக இருந்தது என்பதைப் பொருத்து இந்த நிலைகள் நீடிக்கும் நேரம் மாறுபடும்.

உதாரணமாக அதிக உடல் உழைப்பை மேற்கொண்டால் விரைவாக ஆழ்ந்த தூக்கத்துக்கு சென்றுவிடுவோம். மற்றும் காலையில் REM தூக்கத்தின் நேரமும் அதிகமாக இருக்கும்.

ஏன் நள்ளிரவில் எழுகிறோம்?

மன அழுத்தம்

நீங்கள் நாள்பட்ட அல்லது நிலையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் இரவில் உங்களது sympathetic nervous system எனும் அனுதாப நரம்பு மாண்டலம் இயக்கப்படுகிறது.

இதனால் ரத்த ஓட்டத்தின் வேகம் மாற்றப்பட்டு இதயத்தின் வேகம் அதிகரிக்கிறது. முடிவில் விழிப்பு வந்து மீண்டும் தூங்க முடியாமல் போகிறது.

மன அழுத்தமும் பதட்டமும் எப்போதும் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை.

Stress
StressRepresentational

முதுமையடைதல்

நமக்கு வயதாவது நம் தூக்கத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

நமக்கு வயாதாகும் போது நமது தூக்க சுழற்சியில் மாற்றம் ஏற்படுகிறது.

மாத்திரைகளின் பக்க விளைவுகள்

தொடர்ந்து சில மாத்திரைகளை உபயோகிப்பது நமக்கு தூக்கமின்மையை ஏற்படுத்தும்.

மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள்

பீட்டா ப்ளாக்கர்ஸ் (இதய துடிப்பை சரி செய்ய எடுத்துக்கொள்ளும் மருந்து)

கார்டிகோஸ்டீராய்டு (ஒரு வகை ஸ்டீராய்டுகள்)

சளி மற்றும் இருமல் மருந்துகள்

சிறுநீரிறக்கிகள் (Diuretics)

Medicine
Medicine Representational

தூக்கத்தைக் கெடுக்கும் மேலும் சில காரணிகள்

தூக்கத்தில் மூச்சுத்திணறல்

வயிற்றுப் பிரச்னைகள்

கீல்வாதம் (மூட்டு சார்ந்த பிரச்னைகள்)

மனச்சோர்வு

நரம்பியல் பிரச்னைகள்

மெனோபாஸ்

விரிவாக்கப்பட்ட புரோஸ்டேட்

அதிகப்படியான தைராய்டு சுரப்பி

நள்ளிரவு 1 - 3 மணிக்கு திடீரென முழிப்பு வருகிறதா? - உங்களுக்கு இந்த பிரச்னை இருக்கலாம்!
சத்தம் கேட்பதற்கு முன்பே எழுந்து அலாரத்தை OFF செய்பவரா நீங்கள்? அறிவியல் கூறும் காரணமென்ன?

சரியாக 1 - 3 மணிக்கு முழிப்பு வர என்ன காரணம்?

உடல் கடிகார சுழற்சியின் படி 1 - 3 மணி என்பது கல்லீரலுடன் ஒத்துப்போகிறது.

அந்த நேரத்தில் அந்த உறுப்பு சரியாக செயல்படவில்லை என்றால் இரத்த ஓட்டத்தில் மாற்றம் ஏற்படும்.

இதனால் நமக்கு விழிப்பு ஏற்படும்.

நமக்கு ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தால் அதிகம் பாதிப்படையும் உறுப்பு கல்லீரல்.

இதனால் மன அழுத்தம் மற்றும் பதட்டம் தூக்கத்திற்கு நடுவில் எழுவதற்கு காரணமாக இருக்கிறது.

நள்ளிரவு 1 - 3 மணிக்கு திடீரென முழிப்பு வருகிறதா? - உங்களுக்கு இந்த பிரச்னை இருக்கலாம்!
விலங்குகளை விட மனிதர்கள் குறைவாகவே தூங்க என்ன காரணம் தெரியுமா?

தூக்கமின்மையில் இருந்து விடுபட சில வழிமுறைகள்

வெந்நீரால் காலை கழுவிவிட்டு தூங்க சென்றால் ரிலாக்ஸாக உணரலாம்.

தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்னர் வாசிப்பில் ஈடுபடலாம் அல்லது தியானம் செய்யலாம்.

மொபைல், லாப்டாப் என அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களையும் தூங்குவதற்கு முன் விட்டுவிடுங்கள்.

படுக்கை அறையின் வெப்பநிலை உங்களை தொந்தரவு செய்யாத அளவில் வைத்திருங்கள்.

தூங்குவதற்கு முன்னால் உடலை நீட்டி முறித்துக்கொள்ளலாம்.

தூங்க செல்வதற்கு 3 மணி நேரத்துக்கு முன்னரே உணவருந்திவிடுங்கள்.

தூங்குவதற்கு, ஒரு இடத்தையும், படுக்கையையும் தயார்செய்துவைக்கவும். அங்கே சாப்பிடுவது, படிப்பது, விளையாடுவது போன்ற வேலைகளைச் செய்யாதீர்கள்.

நள்ளிரவு 1 - 3 மணிக்கு திடீரென முழிப்பு வருகிறதா? - உங்களுக்கு இந்த பிரச்னை இருக்கலாம்!
"தூக்க மாத்திரை எடுத்துகொள்வது ஒரு escapism தான்" - உளவியலாளர் Dr அபிலாஷா சொல்வதென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com