உடலுறவு : ‘ஃபிங்கரிங்’ செய்வது என்றால் என்ன? | Nalam 360

பெண்ணுறுப்பில் சில பகுதிகள் தொட்டால் அதிக உணர்வை பெறலாம் அல்லது தூண்டப்படலாம். ஆசனவாயிலும் பல நரம்பு முனைகளைக் கொண்டிருப்பதால் சிலர் அங்கும் தூண்டுதல் விளையாட்டை விரல் வைத்து மேற்கொள்வார்கள். இது அனைவருக்கும் பிடிக்குமா என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம்.
Love
LoveTwitter

ஃபிங்கரிங் என்பது ஒருவரின் பிறப்புறுப்பைத் தூண்டுவதற்கு விரல்களைப் பயன்படுத்தும் தூண்டுதல் முறை. இது ஒரு வகை ஃபோர்பிளே டெக்னிக்.

பெண் உறுப்பு ஆண்குறியை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமான நரம்பு நுனிகளைக் கொண்டிருப்பதால், அதிக உணர்வு திறன் இருக்கும் பகுதியாகச் சொல்லப்படுகிறது. பெண் உறுப்பில் விரல் வைத்து தூண்டுவது மிக அதிக உணர்திறனை கூட்டும். பெண்களுக்கு, இது சென்சிடிவ்வான பகுதி.

பெண்ணுறுப்பில் சில பகுதிகள் தொட்டால் அதிக உணர்வை பெறலாம் அல்லது தூண்டப்படலாம். ஆசனவாயிலும் பல நரம்பு முனைகளைக் கொண்டிருப்பதால் சிலர் அங்கும் தூண்டுதல் விளையாட்டை விரல் வைத்து மேற்கொள்வார்கள். இது அனைவருக்கும் பிடிக்குமா என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம்.

<div class="paragraphs"><p>காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவு எத்தனை வகைத் திருப்தி?</p></div>

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவு எத்தனை வகைத் திருப்தி?

NewsSense

ஃபிங்கரிங் செய்வதன் வேறு பெயர்கள்

டிஜிட்டல் செக்ஸ் என்பது இதற்கான மற்றொரு பெயர் உண்டு. இது சில நேரங்களில் மேனுவெல் செக்ஸ் அல்லது மேனுவெலாக தூண்டுதல் முயற்சி என்றும் அழைக்கப்படுகிறது.

ஃபிங்கரிங் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துக்கள்

சிலர் விரல்களை ஃபோர்ப்ளேயின் ஒரு வடிவமாக மட்டுமே பயன்படுத்துவார்கள். தூண்டுதல் முயற்சிக்கு ஃபிங்கரிங் முறை பயன்படும். ஆனால் எதிர்பாலினத்துக்கு இது விருப்பமான பாலியல் தொடர்பு.

செக்ஸ் செய்யும் முன் ஃபோர்பிளே செய்யும் முயற்சி.

சிலர் கர்ப்பத்தைத் தவிர்க்க விரும்புபவர்கள் உடலுறவில் நெருக்கமாக இருப்பதற்கான ஒரு வழியாக விரல்களைப் பயன்படுத்தலாம்.

கர்ப்ப காலத்தில் யோனியில் உடலுறவு கொள்ள விரும்பாத பெண்கள், அதற்குப் பதிலாக ஃபிங்கரிங் செய்வதை விரும்பலாம்.

காமம்
காமம்Twitter

பாதுகாப்பு ஆலோசனைகள்

ஃபிங்கரிங் செய்வது குறைந்த ஆபத்துள்ள பாலியல் செயல்பாடு. ஆனால் நீங்கள் இன்னும் பாதுகாப்பான நடைமுறைகளைப் பயன்படுத்த வேண்டும். ஃபிங்கரிங் செய்வதன் மூலம் பாலியல் நோய்கள் (STDs) மற்றும் பிற நோய்த்தொற்றுகள் வரலாம் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

தூண்டுதல் விளையாட்டில், நீங்களும் உங்கள் துணையும் தொடங்குவதற்கு முன் உங்கள் கைகளைக் கழுவுவது நல்லது. நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்க, கையுறைகள் அல்லது ஃபிங்கர் காட்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

Love
"செக்ஸ் பொம்மைகள் போதும், ஆண்கள் தேவையில்லை" - வெளிப்படையாக பேசிய இளம் மாடல்

நீங்களும் உங்கள் துணையும் ஆசனவாயில் விரல் விட்டு ஃபிங்கரிங் செய்கிறீர்கள் என்றால், ஃபிங்கர் காட்ஸ் அல்லது ரப்பர் கையுறையைப் பயன்படுத்தவும், மற்ற பகுதிகளைத் தொடுவதற்கு முன் கவனமாக இருக்கவும்.

பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய் மென்மையான பகுதிகள்… எளிதில் காயமடையலாம். மேலும், எளிதில் எரிச்சல் அடையும் பகுதிகள்... விரலுக்கு லூப்பிரிகேஷன்ஸ் பயன்படுத்தவும். மேலும், உங்கள் நகங்கள் வெட்டப்பட்டு, அழுக்குகள் இல்லாமல் ஒழுங்கமைக்கப்பட்டு மென்மையாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவும் மன உளைச்சலை தரலாம்! - 1
Love
LoveTwitter

ஃபிங்கரிங் மூலம் ஜி-ஸ்பாட்டை உங்களால் தூண்ட முடியுமா?

கிராஃபென்பெர்க் ஸ்பாட் அல்லது ஜி-ஸ்பாட் என்பது யோனியின் முன் சுவரில் உள்ள ஒரு உணர்திறன் வாய்ந்த பகுதி. இந்தப் பகுதியுடனான தொடர்பு சிலருக்கு பாலியல் ரீதியாக மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் எல்லோரும் இதை ரசிப்பதில்லை. இருப்பினும், ஜி-ஸ்பாட் உண்மையில் இருக்கிறதா என்று விஞ்ஞானிகள் இன்னும் விவாதித்து வருகின்றனர்.

Love
Sex Strike : உள்நாட்டு போர்களை நிறுத்திய பெண்களின் செக்ஸ் நிறுத்தம் - ஓர் ஆச்சர்ய வரலாறு!

ஃபிங்கரிங் மூலம் ஆண்களின் புரோஸ்டேட்டைத் தூண்ட முடியுமா?

புரோஸ்டேட் என்பது விந்தில் இருக்கும் சில திரவங்களை உருவாக்கும் சுரப்பி. ஆசனவாயில் விரலைச் செருகி ஃபிங்கரிங் செய்வதால், புரோஸ்டேட் சுரப்பியைத் தூண்டப்படலாம். சில ஆண்கள் இந்த வழியில் உச்சக்கட்டத்தை அடையலாம்.

பெண்களுக்கு அதிக, சிறந்த புணர்ச்சியைப் பெற ஃபிங்கரிங் செய்வது உதவுமா?

பெண்களை உச்சக்கட்டத்துக்குக் கொண்டு செல்ல, பெண்குறிப்பைத் தூண்டுவதற்கான எளிதான, மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்று விரலால் தூண்டுவதுதான். உச்சக்கட்டத்தை அடைய முக்கியப் பங்கு வகிக்கக்கூடியது ஃபிங்கரிங். அமெரிக்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அவர்களில் 18% பேர் யோனி உறவின் மூலம் மட்டுமே உச்சக்கட்டத்தை அடைய முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 37% பேர் உச்சக்கட்டத்தை அடைவதற்குப் பெண்குறியின் தூண்டுதல் அவசியம் என்று கூறியுள்ளனர். மேலும் 36% பேர் இது அவர்களின் செக்ஸ் உணர்ச்சியை மேம்படுத்துவதாகக் கூறியுள்ளனர்.

Love
தாய்லாந்து விநோதம்: இவரது சிறுநீர் நோய்களை குணமாக்குமென மக்கள் நம்புகின்றனர் - யார் இவர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com