தினசரி காலையில் புத்துணர்ச்சி பெறுவதற்கு சிறிய ஜாக்கிங் உங்களுக்கு உதவும். சிறுவயதில் இருந்தே ஜாகிங் செல்வதை டி.வியில் பார்த்து ஆசைப் பட்டிருப்போம்.
ஆனால் நாளாக ஆக நமக்கு ஜாகிங் மீதான் ஈர்ப்பு குறைந்துவிட்டிருக்கும். இப்போது நம் உடலுக்கு மிகத் தேவையானதாக இருந்தாலும் ஜாகிங் செல்வதை தவிர்த்து வருகிறோம்.
ஒரு நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்க மிகச் சிறந்த வழி ஜாகிங் செய்வது. இன்று கார்பரேட் வேலைகளில் இருப்பவர்கள் தங்கள் உடலுடன் பிணைப்பை ஏற்படுத்த ஜாகிங் உதவியாக இருக்கும்.
தினமும் எழுந்து ஏனோதானோவென ஓடுவதா? என சிந்திப்பவர்கள் மாரத்தான்களை குறிவைத்து ஓடத்தொடங்கலாம். 5 கிலோமீட்டரில் இருந்து மாரத்தான் போட்டிகளில் கலந்துகொள்ளலாம்.
நீங்கள் தொடர்ந்து ஜாகிங் செய்யும் போது உங்கள் ஓடும் திறன் வெகுவாக அதிகரித்திருக்கும். ஓடுவதற்காக நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவீர்கள், உடலை ஹைட்ரேட்டடாக வைத்திருப்பீர்கள். ஓடும் போது ஓய்வெடுக்கவும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ள நேரிடும். இதனால் உங்களுக்கு என தனியான நேரம் கிடைக்கும்.
உடலில் ஆற்றல் அதிகரிக்கும். ஸ்டாமினா கிடைக்கும். தொடர்ந்து ஓடுவது உங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும். ஓடுவதற்கு தகுந்த ஆரோக்கியமான உடல் இல்லாமல் பலர் இருக்கும் போது, உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் 10 நிமிடம் ஓடத்தொடங்குங்கள்.
வேகமாகவும் அதிக தூரமும் ஓட நாம் என்ன செய்ய வேண்டும்?, தினமும் 10 நிமிடம் ஜாகிங் செய்வதனால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன? பார்க்கலாம்.
1. உங்கள் திறனை கண்காணியுங்கள்
தினமும் ஓடும் போது வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக்கொள்வது தவறல்ல. ஆனால் அடுத்த நாள் மீண்டும் மைதானத்துக்கு திரும்ப வேண்டும். நாம் எந்த அளவு ஒடுகிறோம் என்பதை வாராவாரம் கண்காணியுங்கள் ஒவ்வொரு வாரமும் 10-20% உங்கள் திறன் அதிகரித்திருக்க வேண்டும்.
2. உணவுப் பழக்கம்
உங்கள் உணவுப்பழக்கம் ஓடும் திறனை நேரடியாக பாதிக்கும் காரணியாகும். ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், முழு தானியங்கள், ஓட்ஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
3. ஹைட்ரேஷன் அல்லது நீரேற்றம்
ஒவ்வொரு நாளும் தேவையான அளவு தண்ணீரை குடிக்க வேண்டியது முக்கியம். குறிப்பாக நம் உடலுக்கு வேலைகொடுக்கும் போது "நீரின்றி அமையாது உடல்" என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர், மூலிகைத் தேநீர் போன்ற ஆரோக்கியமான பானங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
4. ஸ்ட்ரெச்சிங்
ஒவ்வொரு முறையும் நம் உடலில் வலி ஏற்படும் போது அதனைக் குறைக்க லாடிக் அமிலம் சுரக்கும். இதனைத் தவிர்க்க நாம் ஓடி முடித்ததும் ஸ்ட்ரெச்சிங் செய்ய வேண்டியது அவசியம். தசைகள் ஆரோக்கியமாக இருக்கவும் ஸ்ட்ரெச்சிங் அல்லது தசைகளை நீட்டுதல் முக்கியம்.
தொடக்கத்தில் ஓடும் போது, நம் உடல் சொல்வதைக் கேட்கவேண்டும். உடலால் எவ்வளவு தூரம் ஓட முடியுமோ அவ்வளவு தூரம் ஓடுவது போதுமானது.
5. நிலையான பயிற்சி
முன்னமே கூறியது போல வாரத்தில் ஓரிரு நாட்கள் ஓடாமல் இருக்கலாம். ஆனால் அதற்கு அடுத்த நாள் சரியாக தொடங்குவதுதான் முக்கியம்.
ஓட்டம் மட்டுமல்லாமல் தசைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க துணைப் பயிற்சிகளையும் செய்யலாம்.
6. ஓய்வு
ஆரோக்கியமாக இருக்க விரும்புபவர்கள் உடலுக்கு போதுமான தூக்கம் கொடுக்க வேண்டியது அவசியம். உடற்பயிற்சிக்கு இடையில் அவ்வப்போது ஓய்வு எடுக்க வேண்டும்.
தசையில் பிரச்னைகள் ஏற்படும் போது விரைவாக குணமடைய ஓய்வு மிக அவசியம்.
ஜாகிங் இதயத்துடிப்பை அதிகரிக்கும். இதனால் இதயம் வலுவடைந்து இரத்த ஓட்டம் சீராஜ இருக்கும். இதயக்குழாய் பிரச்னைகள், இதய கோளாறுகள் மற்றும் பக்கவாதம் ஏற்படாமல் இருக்க உதவும்.
ஜாகிங் செல்லும் போது அதிகப்படியான கலோரிகளை எரிக்க முடியும். இதனால் உடல் எடையை குறைத்து சரியாக பராமரிக்க முடியும்.
நுரையீரல் செயல்பாட்டை சிறப்பாக்கும். உடலுக்கு தேவையான ஆக்சிஜனை சரியாக வழங்க முடியும். ஆரோக்கியமான நுரையீரலை பெறலாம்.
ஜாகிங் செல்வதால் ஸ்ட்ரெஸ், டிப்ரஷன், பதற்றம் உள்ளிட்ட மனநல பிரச்னைகள் நீங்கும். நம்மை நன்றாக உணர வைக்கக்கூடிய எண்டோர்ஃபின்ஸ் வெளியாவதை அதிகரிக்கும்.
எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும். தொடர்ந்து நீண்ட நாட்கள் ஜாகிங் செய்தால் மூட்டு பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும்.
ஜாகிங் செய்யும் போது நம் உடலில் பல தசைகள் செயல்படும். இதனால் நம் ஒட்டுமொத்த உடல் வலிமையும் அதிகரிக்கும்.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
இன்று பலருக்கு இருக்கும் பிரச்னை தூக்கம் இல்லாமை தான். தொடர்ந்து ஜாகிங் செய்வது நம் தூக்கத்தை மேம்படுத்தும். அதுமட்டுமல்லாமல் நம் நினைவாற்றல், கூர்நோக்கும் திறன் ஆகியவற்றை அதிகரிக்கும்.
மூளையின் ஆரோக்கியத்துக்கும் நீண்ட ஆயுளைப் பெறுவதற்கு ஜாகிங்கை உங்கள் தினசரிகளி ஒன்றாக மாற்றிக்கொள்ளுங்கள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust