பூமியின் சொர்க்கம் முதல் கனவுகளின் நகரம் வரை - இந்தியாவை அழகாக்கும் 10 நகரங்கள்

இந்தியாவில் உள்ள அழகான நகரங்கள் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள நகரங்களைப் பற்றி கூறுகிறது இப்பதிவு.
பூமியின் சொர்க்கம் முதல் கனவுகளின் நகரம் வரை - இந்தியாவை அழகாக்கும் 10 நகரங்கள்
பூமியின் சொர்க்கம் முதல் கனவுகளின் நகரம் வரை - இந்தியாவை அழகாக்கும் 10 நகரங்கள்twitter
Published on

இந்தியா பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்களை உள்ளடக்கிய ஒரு நாடு. இங்கு வசிக்கும் மக்களின் பழக்கவழக்கங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும். இவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் அந்தந்த மாநிலத்திற்கு தனி சிறப்பு ஒன்று உண்டு.

இவை அனைத்தும் சேர்ந்து அந்தந்த இடங்களை கூடுதல் அழகாக்குகிறது. அப்படி இந்தியாவில் உள்ள அழகான நகரங்கள் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள நகரங்களைப் பற்றி கூறுகிறது இப்பதிவு.

காஷ்மீர் - பூமியின் சொர்க்கம்

பூமியில் ஒரு சொர்க்கம் என்றால் அது காஷ்மீர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இந்த காஷ்மீரில் அமைந்துள்ள ஸ்ரீநகர் இந்தியாவில் உள்ள மிகவும் அழகான நகரங்களில் ஒன்று.

ஹெலும் என்ற நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ஸ்ரீநகர் நகரம் அதன் வர்ணங்களால் நிறைந்த தோட்டம், ஏரிகள், எழில் மிகுந்த படகு வீடுகள் ஆகியவற்றால் அழகு பெற்றுள்ளது.

பூமியின் சொர்க்கம் முதல் கனவுகளின் நகரம் வரை - இந்தியாவை அழகாக்கும் 10 நகரங்கள்
இந்த நாட்டை கடக்க ஒரு நாள் போதுமா? உலக நாடுகள் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்

ஜெய்ப்பூர் - இந்தியாவின் பாரிஸ்

இந்தியாவின் பாரிஸ் என்று அழைக்கப்படக்கூடிய ஜெய்ப்பூர் இரண்டாவது அழகான நகரம் ஆகும். இந்த ஜெய்ப்பூர் நகரம் 'இந்தியாவின் பிங்க் சிட்டி' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நகரம் அதன் கட்டிடக்கலை, இயற்கை மற்றும் வரலாறு நிறைந்த பகுதிகளுக்கு பிரபலமானது.

சண்டிகர் - அமைதியான நகரம்

நகர்ப்புற திட்டமிடுதல் மற்றும் புதிய காலத்து கட்டிடக்கலைக்கு சண்டிகர் ஒரு சிறந்த சான்றாகும். ஷிவாலிக் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்த நகரம் அமைதியான அதே நேரத்தில் நவீனத்துவம் வாய்ந்த ஒரு இடமாக இருக்கிறது.

மும்பை - கனவுகளின் நகரம்

கனவுகளின் நகரமான மும்பை மகாராஷ்டிராவின் தலைநகரமாகும். இந்த நகரத்திற்கு மிகப்பெரிய கனவுகளுடன் வரும் இளைஞர்கள் இங்கிருந்து போகும் போது பல நினைவுகளை எடுத்து செல்வது உண்டு. இந்தியாவின் நிதி மற்றும் வருவாயின் தலைநகராக விளங்கும் மும்பை இன்னும் அதன் விக்டோரியன் காலத்து அழகுடன் மிளிர்கிறது.

பூமியின் சொர்க்கம் முதல் கனவுகளின் நகரம் வரை - இந்தியாவை அழகாக்கும் 10 நகரங்கள்
Vatican City: இங்கு குடியுரிமை கிடையாதா? உலகின் மிகச் சிறிய நாடு குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

கொல்கத்தா - சிட்டி ஃஆப் ஜாய்

சிட்டி ஃஆப் ஜாய் என்று சொல்லக்கூடிய கொல்கத்தா, ஹூக்லி பகுதியில் உள்ள பரபரப்பான ஹவுரா பாலம், கம்பீரமான விக்டோரியா நினைவகம், அமைதியான பேலூர் மடம், தக்ஷினேஷ்வர் கோயில் ஆகியவை மூலம் அழகு பெறுகிறது. இங்குள்ள மக்களின் மகிழ்ச்சியைப் போலவே அந்த நகரமும் அழகுடன் காட்சியளிக்கிறது.

பெங்களூரு - இந்தியாவின் கார்டன் சிட்டி

இந்தியாவின் தோட்டம் என்று அழைக்கப்படக்கூடிய பெங்களூர் நகரம் தொழில்நுட்ப பூங்காக்களுக்கு பெயர் பெற்றது. இந்த நகரம் முழுவதும் அதன் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் லாவண்டர் பூக்களின் வண்ணங்களால் நிறைந்திருக்கிறது. இந்த துடிப்பான நகரத்தின் துள்ளலில் திளைக்க விரும்புபவர்களுக்கு பிரிகேட் சாலை அல்லது MG சாலை நல்ல அனுபவத்தை வழங்குகிறது.

பூமியின் சொர்க்கம் முதல் கனவுகளின் நகரம் வரை - இந்தியாவை அழகாக்கும் 10 நகரங்கள்
Longwa: இந்திய-மியான்மர் எல்லையில் இரட்டை குடியுரிமை கொண்ட பழங்குடி கிராமம்!பின்னணி என்ன?

ஹைதராபாத் - சிட்டி ஆஃப் பெர்ல்ஸ்

இந்தியாவின் மிக அழகான நகரங்களின் பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்துள்ளது முத்துக்களின் நகரமான ஹைதராபாத். நிஜாமி கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இந்த நகரம் ஏராளமான அரண்மனைகள், மசூதிகள், கல்லறைகள் ஆகிய பண்டைய காலத்து அழகோடு இணைந்து நிற்கிறது.

பாண்டிச்சேரி - இந்தியாவின் பிரெஞ்சு நாடு

கிழக்கில் ஒரு பிரெஞ்சு நாடு என்ற பெயரை நமது பாண்டிச்சேரி பெற்றுள்ளது. முன் ஒரு காலத்தில் பிரெஞ்சு காலனியாக இருந்த பாண்டிச்சேரி இன்று வரை அதன் தனித்துவமான பிரெஞ்சு இயல்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. நேர்த்தியான சாலைகள், பிரெஞ்சு பாணியில் கட்டப்பட்டுள்ள வீடுகள், கடற்கரையோர கஃபேக்கள் போன்றவை பாண்டிச்சேரியை ரசிக்க வைக்கிறது.

கோவா

கோவாவின் தலைநகரான பனாஜி போர்ச்சுகீசியர்களின் நாகரீகத்தை கண் முன் நிறுத்துகிறது. மாண்டோவி ஆறு, பழைய போர்த்துகீசிய வில்லாக்கள், ஆற்றின் குறுக்கே மரங்கள் நிறைந்த சாலைகள், தொன்மையான புத்தகங்கள் மற்றும் கலைக் கடைகள், உல்லாச விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் ஆகியவை பனாஜியின் அழகை சேமித்து வைத்துள்ளது.

இந்தியாவில் உள்ள கிங் சைஸ் நகரம் - தலைநகர் டெல்லி

இந்த ஊரில் எல்லாம் கிங் சைஸில் தான் இருக்கிறது. டெல்லியின் சாலைகள் துவங்கி கட்டிடங்கள், நினைவுச் சின்னங்கள், மால்கள், மெட்ரோ மற்றும் ஹோட்டல்கள் கூட பெரிய அளவில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சென்னை

இந்தியாவின் அழகான நகரங்களின் பட்டியலில் சென்னை 27 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னை இந்தியாவின் நான்காவது பெரிய நகரமாகும். இந்த நகரத்தின் கடற்கரை மற்றும் மிதமான வானிலை பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவருகிறது.

பூமியின் சொர்க்கம் முதல் கனவுகளின் நகரம் வரை - இந்தியாவை அழகாக்கும் 10 நகரங்கள்
உலகின் டாப் 10 மெதுவான நாடுகள் - இந்தியாவின் இடம் என்ன தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com